என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்"

    • ஐபிஎல் தொடரில் 2024-ம் ஆண்டு கொல்கத்தா பயிற்சியாளர் குழுவில் இவர் இடம் பெற்றிருந்தார்.
    • ஐபிஎல் 2026-க்கான சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக கார்ல் குரோவை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நியமித்துள்ளது.

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி வர்த்தக பரிமாற்றம், தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை அனைத்து அணிகளும் சமர்பித்துள்ளனர்.

    இந்நிலையில் ஒவ்வொரு அணியின் பயிற்சியாளர் குழுவில் மாற்றங்களை கொண்டு வருகின்றனர். அந்த வகையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளரை நியமித்துள்ளது. அதன்படி ஐபிஎல் 2026-க்கான சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக கார்ல் குரோவை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நியமித்துள்ளது.

    இவர் முன்னாள் இங்கிலாந்து வீரர் ஆவார். மேலும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா பயிற்சியாளர் குழுவில் இவர் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐபிஎல் கேப்டனாக இருந்த நேரத்தில் உரிமையாளர் தரப்பிலிருந்து அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டன.
    • கிரிக்கெட் குறித்து எதுவுமே தெரியாதவர்களிடம் எதையும் விளக்க முடியாது

    நேர்காணல் ஒன்றில் ஐபிஎல் கேப்டன்சி குறித்து கேஎல் ராகுலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "10 மாதம் சர்வதேச கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்படும் களைப்பை விட 2 மாதம் ஐபிஎல் விளையாடுவதில் அதிகமாக சோர்வடைந்தேன்.

    ஐபிஎல் கேப்டனாக இருந்த நேரத்தில் உரிமையாளர் தரப்பிலிருந்து அளவுக்கும் அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டன. அணியில் ஏன் மாற்றம் செய்யப்பட்டது, அவரை ஏன் அணியில் எடுக்கவில்லை. எதிர் அணியினர் 3 ஸ்பின்னர்களுடன் ஆடுகிறார்களே நீங்கள் ஏன் ஆடவில்லை. எதிர் அணியால் மட்டும் எப்படி 200 அடிக்க முடிந்தது, உங்களால் ஏன் அடிக்க முடியவில்லை? ஒரே மைதானத்தில் எதிர் அணியின் ஸ்பின்னர்கள் எப்படி நன்றாக ஸ்விங் செய்கின்றனர், உங்களால் ஏன் முடியவில்லை.. இப்படி பல கேள்விகள் கேட்கப்பட்டன.

    இப்படியான கேள்விகளை எல்லாம் கேட்டுக்கொண்டே இருக்க முடியாது அல்லவா? இதற்கு பதில் அளிக்க தான் பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். வீரர்கள் இதற்கு பதில் அளிக்க முடியாது. அணியில் அனைத்துமே சரியாக இருந்தாலும் உங்களால் வெற்றியை பெறமுடியாது, அதுதான் விளையாட்டின் தன்மை. என்ன செய்வது, கிரிக்கெட் குறித்து எதுவுமே தெரியாதவர்களிடம் எதையும் விளக்க முடியாது" என்று வேதனையுடன் தெரிவித்தார் .

    லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவை விமர்சித்து தான் கே.எல்.ராகுல் இவ்வாறு பேசியுள்ளதாக நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    2024 ஆம் ஆண்டு லக்னோ அணியின் கேப்டனாக கே.எல். ராகுல் இருந்தார். அப்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி படுமோசமான தோல்வியை தழுவியது.

    இப்போட்டியின் முடிவுக்கு பின்னர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் மைதானத்தில் வைத்தே கடுமையாக பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

    இதனையடுத்து லக்னோ அணியில் இருந்து வெளியேறிய கே.எல். ராகுலை இந்தாண்டு டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. 

    • உலகளாவிய சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளை டாம் மூடி இனிமேல் கவனிப்பார்
    • லக்னோ அணியின் ஸ்ட்ராடெஜிக் அட்வைசராக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டார்

    ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து அணிகளும் தங்கள் வீரர்களை தக்கவைப்பது மற்றும் விடுவிப்பது குறித்த தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் உலகளாவிய கிரிக்கெட் இயக்குநராக டாம் மூடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ஐபிஎல் , SA20 உள்ளிட்ட உலகளாவிய சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளை டாம் மூடி இனிமேல் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டாம் மூடியின் தலைமையில் 2016 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஐபிஎல் கோப்பையை முதல்முறையாக வென்றது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக லக்னோ அணியின் ஸ்ட்ராடெஜிக் அட்வைசராக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐபிஎல் தொடரில் 2015-ம் ஆண்டு அறிமுகமாகினார்.
    • 2025 சீசனுக்கு மெகா ஆக்சனில் எந்த அணியாலும் வில்லியம்சன் தேர்வு செய்யப்படவில்லை.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன். இவர் 2016-ம் ஆண்டு நியூசிலாந்து அணியின் 3 வடிவிலான கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக பொறுப்பேற்றார். மொத்தமாக, அவர் 200க்கும் மேற்பட்ட போட்டிகளில் கேப்டனாக இருந்து, 105-107 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

    அவர் ஐபிஎல் தொடரில் 2015-ம் ஆண்டு அறிமுகமாகி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) மற்றும் குஜராத் டைடன்ஸ் (GT) அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

    அவர் சமீபத்திய 2024 சீசனில் குஜராத் டைடன்ஸ் அணிக்காக 2 போட்டிகளில் மட்டும் விளையாடினார் (மொத்தம் 27 ரன்கள்), மேலும் 2025 சீசனுக்கு மெகா ஆக்சனில் எந்த அணியாலும் தேர்வு செய்யப்படாத நிலையில் லக்னோ அணியின் ஸ்ட்ராடெஜிக் அட்வைசராக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    • பரத் அருணின் தலைமையின் கீழ் கொல்கத்தா அணி 2022-ம் ஆண்டில் சாம்பியன் பட்டத்தையும் வென்றிருந்தது.
    • இந்திய அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

    ஐபிஎல் தொடரில் மூன்று முறை சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்தவர் பரத் அருண். அவர் 2022-ம் ஆண்டில் இருந்து கொல்கத்தா அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்து வந்துள்ளார்.

    பரத் அருணின் தலைமையின் கீழ், கொல்கத்தா அணி 2022-ம் ஆண்டில் சாம்பியன் பட்டத்தையும் வென்றிருந்தது. இவர் இந்திய அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

    இந்நிலையில் லக்னோ அணிக்கு 62 வயதான பரத் அருண், 2 ஆண்டுகள் பந்துவீச்சு பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்னோ அணியில் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தொடர்ந்து செயல்படுவாரா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால், பரத் அருண் தலைமைப் பயிற்சியாளராகவும் நியமிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 235 ரன்கள் குவித்தது.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். தொடரின் 64-வது லீக் போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது.

    முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த நிலையில் மார்கிராம் 37 ரன்னில் அவுட்டானார். அதிரடியாக ஆடிய மிட்செல் மார்ஷ் சதமடித்து அசத்தினார்.

    2வது விக்கெட்டுக்கு இணைந்த மிட்செல் மார்ஷ்- நிகோலஸ் பூரன் ஜோடி 221 ரன்கள் சேர்த்த நிலையில் மார்ஷ் 117 ரன்னில் ஆட்டமிழந்தார். நிகோலஸ் பூரன் 23 பந்தில் அரைசதம் விளாசினார்.

    இதையடுத்து, 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் 21 ரன்னிலும், சுப்மன் கில் 35 ரன்னிலும், ஜாஸ் பட்லர் 33 ரன்னிலும் அவுட்டாகினர்.

    4வது விக்கெட்டுக்கு இணைந்த ரதர்போர்டு-ஷாருக் கான் ஜோடி அதிரடியாக ஆடியது. இந்த ஜோடி 86 ரன்கள் சேர்த்த நிலையில் ரதர்போர்டு 38 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷாருக் கான் 22 பந்தில் அரை சதம் அடித்தார். அவர் 57 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், குஜராத் டைட்டன்ஸ் அணி 9 விக்கெட்டுக்கு 202 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

    லக்னோ அணி சார்பில் ரூர்கி 3 விக்கெட்டும், ஆவேஷ் கான், ஆயுஷ் பதோனி தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

    • மயங்க் யாதவுக்கு பதிலாக நியூசிலாந்தின் ரூர்கி லக்னோ அணியில் இடம் பெற்றுள்ளார்.
    • புதிய அட்டவணைப்படி இறுதிப்போட்டி மே 25-க்கு பதிலாக ஜூன் 3-ம் தேதி நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றத்தால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் மீண்டும் தொடங்குகிறது.

    மாற்றப்பட்ட புதிய அட்டவணைப்படி இறுதிப்போட்டி மே 25-க்கு பதிலாக ஜூன் 3-ம் தேதி நடைபெறுகிறது.

    இதற்கிடையே, இந்த மாத இறுதியில் இருந்து மற்ற சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் தொடங்குகின்றன. தேசிய அணிக்கு முக்கியம் கொடுக்க வேண்டியுள்ளதால் பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் முழுமையாக பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் மயங்க் யாதவ் காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகி உள்ளார்.

    அவருக்கு பதிலாக நியூசிலாந்து பந்துவீச்சாளர் வில் ரூர்கி லக்னோ அணியில் இடம் பெற்றுள்ளார்.

    ஐ.பி.எல். தொடரில் இன்னும் 13 லீக் ஆட்டம் உள்பட 17 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாதுகாப்பு காரணங்களுக்காக தரம்சாலா போட்டி கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
    • லக்னோவில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். தொடரின் 58வது லீக் போட்டி இமாசலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் நேற்று நடந்தது. இதில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

    பஞ்சாப் அணி 10.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது. பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடந்து வரும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டி கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, லக்னோவில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

    இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்பது குறித்து ஐபிஎல் தலைவர் அருண் துமால் பேசியுள்ளார்.

    இதுதொடர்பாக அருண் துமால் கூறுகையில், தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். அரசிடம் இருந்து எந்த வழிகாட்டுதலும் கொடுக்கப்படவில்லை. எனவே, பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டே ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • இப்போட்டியில் ரிஷப் பண்ட் 18 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
    • ரிஷப் பண்ட் ஆட்டமிழந்த விதம் பேசுபொருளாகியுள்ளது.

    ஐ.பி.எல். தொடரின் 54-வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 236 ரன்களை குவித்தது. பிரப்சிம்ரன் சிங் 91, ஷ்ரேயாஸ் அய்யர் 45, ஷஷாங் சிங் 33, ஜோஷ் இங்லிஸ் 30 ரன்களை விளாசினர்.

    இதையடுத்து, 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.

    தொடர்ந்து பார்ம் அவுட்டில் தவித்து வரும் லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட், இப்போட்டியிலும் 18 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். குறிப்பாக ரிஷப் பண்ட் ஆட்டமிழந்த விதம் பேசுபொருளாகியுள்ளது.

    அஸ்மத்துல்லா உமர்சாய் ஓவரில் இறங்கி வந்து அடிக்க முயன்ற பண்டின் பேட் அவர் கையை விட்டு நழுவி ஸ்கொயர் லெக் சைடில் பறந்தது. அதே சமயம் பேட்டில் பட்டு இடது பக்கம் பிறந்த பந்தை ஷஷாங்க் சிங் கேட்ச் பிடித்தார்.

    இதனையடுத்து, கடந்த சீசன்களில் பந்தை பறக்கவிட்டு பண்ட் இப்போது பேட்டை பறக்கவிட்டு அவுட்டாகி வருகிறார் என்று  நெட்டிசன்கள் அவரை இணையத்தில் கிண்டலடித்து வருகின்றனர். நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக விலைக்கு (27 கோடி ரூபாய் ) ஏலம் போன வீரர் ரிஷப் பண்ட் தான் குறிப்பிடத்தக்கது. 

    • மயங்க் யாதவ் வீசிய 17வது ஓவரில் ஷஷாங்க் சிங் அடித்த சிக்சர் மைதானத்தை விட்டு வெளியேறியது.
    • புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.

    ஐ.பி.எல். தொடரின் 54-வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 236 ரன்களை குவித்தது. பிரப்சிம்ரன் சிங் 91, ஷ்ரேயாஸ் அய்யர் 45, ஷஷாங் சிங் 33, ஜோஷ் இங்லிஸ் 30 ரன்களை விளாசினர்.

    இதையடுத்து, 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி பெற்ற 7-வது வெற்றி இதுவாகும். அத்துடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.

    இப்போட்டியில் மயங்க் யாதவ் வீசிய 17வது ஓவரில் ஷஷாங்க் சிங் அடித்த சிக்சர் 92 மீட்டர் தூரத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறியது. இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த பஞ்சாப் இணை உரிமையாளர் பிரீத்தி ஜிந்தாவின் ரியாக்சன் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

    • லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.
    • இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது பஞ்சாப் அணி.

    தரம்சாலா:

    நடப்பு ஐ.பி.எல். தொடரின் 54-வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நேற்று நடந்தது. இதில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவரில் 236 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய லக்னோ அணி 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 37 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடரில் எழுச்சி பெற்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறி அசத்தியது.

    முதல் இடத்தில் ஆர்.சி.பி.யும், 3வது இடத்தில் மும்பை இந்தியன்சும், 4வது இடத்தை குஜராத்தும், 5வது இடத்தை டெல்லியும் பிடித்துள்ளது.

    லக்னோ அணி 11 போட்டியில் 5 வெற்றி, 6 தோல்வி என 7வது இடத்தில் உள்ளது.

    • ஐ.பி.எல். தொடரின் 54-வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நடைபெற்றது.
    • முதலில் ஆடிய பஞ்சாப் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 236 ரன்களை குவித்தது.

    தரம்சாலா:

    ஐ.பி.எல். தொடரின் 54-வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.

    முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 236 ரன்களை குவித்தது. பிரப்சிம்ரன் சிங் 91 ரன்களை விளாசினர். அடுத்து இறங்கிய லக்னோ 20 ஓவரில் 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. பொறுப்புடன் ஆடிய பதோனி அரை சதம் கடந்து 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், தோல்விக்கு பிறகு லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது:

    பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறது. அடுத்த 3 போட்டியில் வெற்றி பெற்றால், நிச்சயமாக அற்புதமான விஷயங்களைச் செய்ய முடியும்.

    236 ரன்கள் என்பது துரத்துவதற்கு மிக அதிகம். பீல்டிங்கும் சரியாக இல்லை. நிச்சயமாக அதிக ரன்கள். தவறான நேரத்தில் முக்கியமான கேட்சுகளை தவறவிட்டால், அது உங்களை மோசமாக பாதிக்கும். அது இன்னும் அதிகமாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம்.

    நாங்கள் தொடக்கத்தில் சரியான நீளத்தை தேர்வு செய்யவில்லை. ஆனால் அது விளையாட்டின் ஒரு பகுதி. டாப் ஆர்டர் நன்றாக பேட்டிங் செய்யும்போது அது அர்த்தமுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு போட்டியிலும், அவர்கள் வெளியே வருவார்கள் என நம்ப முடியாது. இது விளையாட்டின் ஒரு பகுதி என தெரிவித்தார்.

    ×