என் மலர்
நீங்கள் தேடியது "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு"
- பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் இறுதி ஆட்டம் வதோதராவில் இன்று நடக்கிறது.
- இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.
வதோதரா:
4-வது பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 9-ம் தேதி தொடங்கியது. லீக் சுற்று முடிவில் 12 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஜெயன்ட்சை விரட்டியடித்து 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இந்நிலையில் பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் இறுதி ஆட்டம் குஜராத்தின் வதோதராவில் இன்று நடக்கிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.
முன்னாள் சாம்பியனான பெங்களூரு அணி லீக் சுற்றில் முதல் 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வென்றது. அந்த அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா (290 ரன்), கிரேஸ் ஹாரிஸ் (228), ரிச்சா கோஷ் (183) எடுத்துள்ளனர்.
பந்து வீச்சில் நடினே டி கிளார்க் (15 விக்கெட்), லாரென் பெல் (12), ஸ்ரேயங்கா பட்டீல் (11), சயாலி சத்கரே சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
இதேபோல், டெல்லி அணியின் பேட்டிங்கில் லிசெல் லீ (283 ரன்), லாரா வோல்வார்ட் (273), ஷபாலி வர்மா (239), கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (207) சூப்பர் பார்மில் உள்ளனர்.
பந்து வீச்சில் நந்தினி ஷர்மா (16 விக்கெட்), ஸ்ரீசரனி (14), சினெலி ஹென்றி (12) மிரட்டுகிறார்கள்.
நடப்பு சீசனில் இரு அணிகளும் 2 முறை நேருக்கு நேர் மோதியதில் தலா ஒரு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. சம பலத்துடன் மல்லுகட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.
பெங்களூரு அணி 2-வது முறையாக கோப்பையை கையில் ஏந்தும் முனைப்புடன் தயாராகிறது. டெல்லி அணியும் முதல் முறையாக கோப்பையை வெல்ல வரிந்து கட்டுகிறது.
போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.3 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது.
- முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவரில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய டெல்லி அணி 15.4 ஓவரில் 113 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
வதோதரா:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 15-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 38 ரன்கள் எடுத்தார்.
டெல்லி அணி சார்பில் நந்தின் ஷர்மா 3 விக்கெட்டும், ஸ்ரீ சரணி, சினேலி ஹென்றி, மரிஜானே காப் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 15.4 ஓவரில் 113 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி 3வது வெற்றியைப் பதிவுசெய்தது. லாரா வோல்வார்ட் 42 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
நடப்பு தொடரில் பெங்களூரு அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும்.
- முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவரில் 166 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய பெங்களூரு அணி 169maha ரன்கள் எடுத்து வென்றது
நவி மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 11-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு- டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா தாக்குப் பிடித்து அரை சதம் கடந்தார்.
பெங்களூரு அணியின் லாரன் பெல், சயாலி சத்கரே ஆகியோர் தலா 3 விக்கெட்டும், பிரேமா ராவத் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.
இதையடுத்து, 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா அதிரடியாக ஆடி சதத்தை நழுவவிட்டார். அவர் 96 ரன்னில் அட்டாகினர். ஜார்ஜியா ஒலி 52 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 18.2 ஓவரில் 169 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி 4வது வெற்றியைப் பதிவுசெய்தது.
- பாதுகாப்பு காரணங்களுக்காக தரம்சாலா போட்டி கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
- லக்னோவில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
புதுடெல்லி:
ஐ.பி.எல். தொடரின் 58வது லீக் போட்டி இமாசலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் நேற்று நடந்தது. இதில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
பஞ்சாப் அணி 10.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது. பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடந்து வரும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டி கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, லக்னோவில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்பது குறித்து ஐபிஎல் தலைவர் அருண் துமால் பேசியுள்ளார்.
இதுதொடர்பாக அருண் துமால் கூறுகையில், தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். அரசிடம் இருந்து எந்த வழிகாட்டுதலும் கொடுக்கப்படவில்லை. எனவே, பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டே ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து, பஞ்சாப் அணியின் லோகேஷ் ராகுலும், கிறிஸ் கெயிலும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
முதலில் இருந்தே இருவரும் அடித்து ஆடினர். இதனால் ஒரு ஓவருக்கு 10 ரன்கள் சராசரியாக கிடைத்தது.
அணியின் எண்ணிக்கை 66 ஆக இருந்தபோது லோகேஷ் ராகுல் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய மயங்க் அகர்வால், சர்ப்ராஸ் கான் ஆகியோர் 15 ரன்னிலும், சாம் குர்ரன் ஒரு ரன்னிலும் அவுட்டாகினர்.

இறுதியில், பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை எடுத்துள்ளது. கெயில் அபாரமாக ஆடி 64 பந்துகளில் 5 சிக்சர், 10 பவுண்டரியுடன் 99 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார். இதையடுத்து பெங்களூரு அணி வெற்றிபெற 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு அணி சார்பில் சஹல் 2விக்கெட்டும், மொகமது சிராஜ், மொயின் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்ததாக களம் இறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ், டிவில்லியர்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்து அணியின் ரன்களை உயர்த்த தொடங்கினர். ஆட்டத்தின் கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தனது ஆட்டத்தை தொடங்கியது. இறுதியில் ஆட்டத்தின் 19.2 ஓவரில் டிவில்லியர்ஸ் 59 (38), மார்கஸ் ஸ்டோனிஸ் 28 (16) ரன்கள் எடுத்து தனது அணியை வெற்றி பெற செய்தனர். இதன் மூலம் பெங்களூரு அணி 19.2 ஓவரில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணி வீரர்கள் சார்பில் அஸ்வின், மொஹமத் சமி தலா ஒரு விக்கெட்களை எடுத்திருந்தனர்.
#IPL2019 #KXIPvRCB






