என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Royal Challenger Bangalore"

    • முதலில் ஆடிய உ.பி.வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 143 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய பெங்களூரு அணி 13.2 ஓவரில் 147 ரன்கள் எடுத்து எளிதில் வென்றது.

    வதோதரா:

    மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 18-வது லீக் ஆட்டத்தில் உ.பி.வாரியர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தீப்தி சர்மா அரை சதம் கடந்து 55 ரன்னும், மெக் லேனிங் 41 ரன்னும் எடுத்தனர்.

    ஆர்சிபி தரப்பில் நாடின் டி கிளார்க் 4 விக்கெட்டும், கிரேஸ் ஹாரிஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு 13.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி 6வது வெற்றியைப் பதிவுசெய்தது.

    அதிரடியாக ஆடிய கிரேஸ் ஹாரிஸ் 37 பந்தில் 75 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 27 பந்தில் 54 ரன்னும் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.

    • முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவரில் 166 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய பெங்களூரு அணி 169maha ரன்கள் எடுத்து வென்றது

    நவி மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 11-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு- டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா தாக்குப் பிடித்து அரை சதம் கடந்தார்.

    பெங்களூரு அணியின் லாரன் பெல், சயாலி சத்கரே ஆகியோர் தலா 3 விக்கெட்டும், பிரேமா ராவத் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா அதிரடியாக ஆடி சதத்தை நழுவவிட்டார். அவர் 96 ரன்னில் அட்டாகினர். ஜார்ஜியா ஒலி 52 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 18.2 ஓவரில் 169 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி 4வது வெற்றியைப் பதிவுசெய்தது.

    • 6 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி ரசிகர்களுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.
    • சின்னசாமி மைதானத்தை சுற்றி ஆர்சிபி ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வர தொடங்கினர்.

    பெங்களூரு:

    ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்னில் வீழ்த்தி முதல் முறையாக ஆர்சிபி அணி கோப்பையை கைப்பற்றியது. இதனை அந்த அணியின் ரசிகர்கள் நேற்று முதல் தற்போது வரை வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.

    18-வது சீசனில் கோப்பையை வென்ற ஆர்சிபி அணி வீரர்களுக்கு சின்னசாமி ஸ்டேயத்தில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. அதற்கு முன் பெங்களூருவில் திறந்தவெளி பஸ்சில் அணி வீரர்கள் வெற்றி பேரணி நடத்தவுள்ளனர். அந்த பேரணி விதான சவுதாவில் தொடங்கும் பேரணி சின்னசாமி மைதானத்தில் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து 6 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ள நிலையில் தற்போது இருந்தே அந்த மைதானத்தை சுற்றி ஆர்சிபி ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வர தொடங்கினர்.

    இந்நிலையில் ஆர்சிபி வீரர்கள் வரும்வரை பொறுமையாக இருக்காமல் ஸ்டேடியத்தின் சுவர்கள் மற்றும் வேலிகளில் ரசிகர்கள் ஏறிச் செல்ல தொடங்கினர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலியாகினார். 50 மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் ராயல் செலஞ்சர் பெங்களூரு அணிக்காக ஷேன் வாட்சன் விளையாடினார்.
    • 2016 ஆம் ஆண்டு சிறப்பாக விளையாடிய பெங்களூரு அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

    2016-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் இறுதி போட்டியில் தோல்வி அடைந்தற்காக பெங்களூரு ரசிகர்களிடம் முன்னாள் ராயல் செலஞ்சர் பெங்களூரு அணியின் வீரர் ஷேன் வாட்சன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

    2016 மற்றும் 2017 ஆண்டுகளில் ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணிக்காக ஷேன் வாட்சன் விளையாடினார்.

    2016 ஆம் ஆண்டு சிறப்பாக விளையாடிய பெங்களூரு அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதி போட்டியில் ஹைதராபாத் அணியை பெங்களூரு எதிர் கொண்டது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 208 ரன்கள் குவித்தது. 208 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பெங்களூரு அணி 200 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

    அப்போட்டியில் 4 ஓவர் பந்துவீசிய வாட்சன் விக்கெட் எதுவும் எடுக்காமல் 61 ரன்கள் விட்டு கொடுத்தார். பேட்டிங்கிலும் 9 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே அடித்தார்.

    இந்த தோல்வி குறித்து பேசிய வாட்சன், "2016 ஐபிஎல் இறுதிப்போட்டியில் தோற்றதற்காக பெங்களூரு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் முடிந்தளவிற்கு நன்றாக தயாராகியிருந்தேன். அது எனது சிறப்பான ஆட்டமாக இருக்கவேண்டும் என எதிர்பார்த்தேன். ஆனால், அதுவே எனது மிக மோசமான ஆட்டமாக அமைந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.

    ஆனால் அந்த ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக விளையாடிய வாட்சன் 20 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இன்ஸ்டாகிராமில் முதல் 5 உலகளாவிய விளையாட்டு அணிகளில் ஆர்சிபி அணி இடம்பிடித்துள்ளது.
    • ரியல் மாட்ரிட் மற்றும் எஃப்சி பார்சிலோனாவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் ஆர்சிபி உள்ளது.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மீண்டும் ஒருமுறை சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான ஐபிஎல் அணி என்ற நிலையை தக்கவைத்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக முதல் இடம் பிடித்த ஐபிஎல் அணி என்ற சாதனையை ஆர்சிபி படைத்துள்ளது.

    சமூக ஊடக பகுப்பாய்வு சோஷியல் இன்சைடர் மற்றும் எஸ்இஎம் ரஷ் படி ஆர்சிபி அணியின் இன்ஸ்டாகிராம், எக்ஸ்தளம், யூடியூப் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றில் மொத்த ஈடுபாடு 2024-ம் ஆண்டில் 2 பில்லியனை எட்டியுள்ளது. இது 2-வது இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியை விட 25% அதிகமாகும்.

    ஆர்சிபியின் டிஜிட்டல் இருப்பு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 5 மில்லியன் அதிகரித்து, ஆன்லைனில் வேகமாக வளர்ந்து வரும் ஐபிஎல் அணியாக மாறியுள்ளது.

    மேலும் இன்ஸ்டாகிராமில் முதல் 5 உலகளாவிய விளையாட்டு அணிகளில் ஆர்சிபி அணி இடம்பிடித்துள்ளது. ரியல் மாட்ரிட் மற்றும் எஃப்சி பார்சிலோனாவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் ஆர்சிபி உள்ளது.

    ஆர்சிபி தனது வாட்ஸ்அப் ஒளிபரப்பு சேனலில் 7.5 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் தனது வரம்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளது, இது வாட்ஸ்அப்பில் அதிகம் பின்தொடரும் ஐபிஎல் அணியாக மாறியுள்ளது.

    ஒவ்வொரு போட்டியிலும் தோல்வி அடைந்துவிட்டு அதற்காக நொண்டிசாக்கு சொல்ல முடியாது என பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். #ViratKohli
    பெங்களூர்:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சோகம் தொடர்கிறது.

    அந்த அணி நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்சிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    பெங்களூர் அணி தொடர்ந்து 6-வது தோல்வியை தழுவியது. இதனால் கேப்டன் கோலி மிகுந்த வேதனை அடைந்துள்ளார். போட்டிக்கு பிறகு அவர் கூறியதாவது:-

    160 ரன்கள் குவித்தால் கடும் போட்டியை கொடுக்க முடியும் என்று நினைத்தோம். சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்ததால் 150 ரன் தான் இலக்காக நிர்ணயிக்க முடிந்தது.

    2-வது இன்னிங்சில் பந்துவீச்சுக்கு ஏற்ற வகையில் ஆடுகளம் அமையவில்லை. இந்த ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை என்பதே உண்மையாகும்.

    ஒவ்வொரு போட்டியிலும் தோல்வி அடைந்துவிட்டு அதற்கான காரணம் தேடுவதும், அதனை பேசுவதும் முறையானது அல்ல. நாள்தோறும் தோல்விக்கு நொண்டிசாக்கு சொல்ல முடியாது. நாங்கள் சரியாக விளையாடதே தோல்விக்கு காரணம்.

    இவ்வாறு கோலி கூறியுள்ளார். #ViratKholi
    ×