சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாளை பலப்பரீட்சை

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் போட்டியில் நாளை நடக்கும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. #IPL2018 #CSKvRCB
சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாளை பலப்பரீட்சை
Published on

புனே:

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புனேயில் நாளை நடக்கும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சென்னை அணி 9 ஆட்டத்தில் 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியின் பந்து வீச்சு, பீல்டிங் சுமாராகவே இருந்தது. அதை சரி செய்ய வேண்டியது மிகவும் அவசியம். பேட்டிங்கில் வாட்சன், அம்பதி ராயுடு, ரெய்னா, டோனி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

ஏற்கனவே இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 205 ரன் இலக்கை எடுத்து வெற்றி பெற்றது. ஆனால் சென்னை நம்பிக்கையுடன் களம் இறங்கும் விராட்கோலி தலைமையிலான பெங்களூர் 8 ஆட்டத்தில் 3 வெற்றி பெற்றது. 5 போட்டியில் தோற்றது.

அந்த அணிக்கு மீதமுள்ள ஒவ்வொரு போட்டியும் மிகவும் முக்கியமானது. அதனால் அந்த அணி வெற்றி நெருக்கடியில் இருக்கிறது. கோலி, டிரில்லியர்ஸ், மெக்குல்லம், டி காக், டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், சாகல் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். #IPL #CSK #RCB

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com