என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கிரிக்கெட் குறித்து எதுவுமே தெரியாதவர்... சஞ்சீவ் கோயங்காவை மறைமுகமாக விமர்சித்த கே.எல். ராகுல்
    X

    கிரிக்கெட் குறித்து எதுவுமே தெரியாதவர்... சஞ்சீவ் கோயங்காவை மறைமுகமாக விமர்சித்த கே.எல். ராகுல்

    • ஐபிஎல் கேப்டனாக இருந்த நேரத்தில் உரிமையாளர் தரப்பிலிருந்து அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டன.
    • கிரிக்கெட் குறித்து எதுவுமே தெரியாதவர்களிடம் எதையும் விளக்க முடியாது

    நேர்காணல் ஒன்றில் ஐபிஎல் கேப்டன்சி குறித்து கேஎல் ராகுலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "10 மாதம் சர்வதேச கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்படும் களைப்பை விட 2 மாதம் ஐபிஎல் விளையாடுவதில் அதிகமாக சோர்வடைந்தேன்.

    ஐபிஎல் கேப்டனாக இருந்த நேரத்தில் உரிமையாளர் தரப்பிலிருந்து அளவுக்கும் அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டன. அணியில் ஏன் மாற்றம் செய்யப்பட்டது, அவரை ஏன் அணியில் எடுக்கவில்லை. எதிர் அணியினர் 3 ஸ்பின்னர்களுடன் ஆடுகிறார்களே நீங்கள் ஏன் ஆடவில்லை. எதிர் அணியால் மட்டும் எப்படி 200 அடிக்க முடிந்தது, உங்களால் ஏன் அடிக்க முடியவில்லை? ஒரே மைதானத்தில் எதிர் அணியின் ஸ்பின்னர்கள் எப்படி நன்றாக ஸ்விங் செய்கின்றனர், உங்களால் ஏன் முடியவில்லை.. இப்படி பல கேள்விகள் கேட்கப்பட்டன.

    இப்படியான கேள்விகளை எல்லாம் கேட்டுக்கொண்டே இருக்க முடியாது அல்லவா? இதற்கு பதில் அளிக்க தான் பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். வீரர்கள் இதற்கு பதில் அளிக்க முடியாது. அணியில் அனைத்துமே சரியாக இருந்தாலும் உங்களால் வெற்றியை பெறமுடியாது, அதுதான் விளையாட்டின் தன்மை. என்ன செய்வது, கிரிக்கெட் குறித்து எதுவுமே தெரியாதவர்களிடம் எதையும் விளக்க முடியாது" என்று வேதனையுடன் தெரிவித்தார் .

    லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவை விமர்சித்து தான் கே.எல்.ராகுல் இவ்வாறு பேசியுள்ளதாக நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    2024 ஆம் ஆண்டு லக்னோ அணியின் கேப்டனாக கே.எல். ராகுல் இருந்தார். அப்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி படுமோசமான தோல்வியை தழுவியது.

    இப்போட்டியின் முடிவுக்கு பின்னர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் மைதானத்தில் வைத்தே கடுமையாக பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

    இதனையடுத்து லக்னோ அணியில் இருந்து வெளியேறிய கே.எல். ராகுலை இந்தாண்டு டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×