என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "KL Rahul"
- இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெறுகிறது.
- இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது.
புதுடெல்லி:
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெறுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி டிசம்பர் 17-ம் தேதி தொடங்குகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஒருநாள் போட்டிகளுக்கு கே.எல்.ராகுல் கேப்டனாகவும், டி20 போட்டிகளுக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் விவரம் வருமாறு:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயஸ் அய்யர், ருத்ராஜ் கெயிக்வாட், இஷான் கிஷன், கே.எல்.ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், முகமது சிராஜ், முகேஷ் குமார், முகமது ஷமி, பும்ரா (துணை கேப்டன்), பிரசித் கிருஷ்ணா
ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் விவரம் வருமாறு:

கே.எல்.ராகுல் (கேப்டன்), ருத்ராஜ் கெயிக்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரிங்கு சிங், ஷ்ரேயஸ் அய்யர், சஞ்சு சாம்சன், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹல், முகேஷ் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர்.
டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் விவரம் வருமாறு:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ருத்ராஜ் கெயிக்வாட், திலக் வர்மா, ரிங்கு சிங், ஷ்ரேயஸ் அய்யர், இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா, ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், முகேஷ் குமார், தீபக் சாஹர்.
- இளம் வீரரான ஜெய்ஸ்வால் 25 பந்தில் 53 ரன்கள் விளாசினார்.
- அவரது ஸ்கோரில் 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்தியா 235 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியால் 191 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.
போட்டியின்போது பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால், 2-வது பேட்டிங் செய்யும்போது பந்து வீச கடினமாக இருக்கும். இதனால் முதலில் எவ்வளவு ரன்கள் குவிக்க முடியுமோ, அவ்வளவு ரன்கள் குவிக்க இந்தியா திட்டமிட்டது.
அதற்கு ஏற்றபடி தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடினார். இவரது அதிரடியால் இந்தியா பவர் பிளேயான முதல் 6 ஓவரில் 77 ரன்கள் குவித்தது. இதில் ஜெய்ஸ்வால் 25 பந்தில் 53 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும்.

இதன்மூலம் பவர்பிளேயான முதல் 6 ஓவரில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக ரோகித் சர்மா 2020-ல் நியூசிலாந்துக்கு எதிராக ஹாமில்டனில் 23 பந்தில் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்திருந்தார். கே.எல். ராகுல் 2021-ல் துபாயில் ஸ்காட்லாந்துக்கு எதிராக 19 பந்தில் 50 ரன்கள் அடித்திருந்தார். தற்போது இருவரையும் ஜெய்ஸ்வால் முந்தியுள்ளார்.
- நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- ராகுல் 62 பந்தில் சதம் அடித்தார்.
நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 4-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் அய்யர்-லோகேஷ் ராகுல் ஜோடி 208 ரன் குவித்தது. உலகக் கோப்பையில் 4-வது விக்கெட்டுக்கு இது புதிய சாதனையாகும்.
இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு உலகக் கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி வீரர்கள் மைக்கேல் கிளார்க்-பிராட் ஹோட்ஜ் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 204 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை ஸ்ரேயாஸ் அய்யர்-ராகுல் ஜோடி முறியடித்தது.
ராகுல் 62 பந்தில் சதம் அடித்தார். இது உலகக் கோப்பையில் இந்திய வீரர்களின் அதிவேக சதமாகும். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா 63 பந்தில் சதம் அடித்திருந்தார். அதை ராகுல் முறியடித்தார்.
- சிறந்த பீல்டருக்கான விருது ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது.
- அந்த விருதை கேஎல் ராகுல் ஜடேஜாவுக்கு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. இதில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் வங்களாதேசம் அணி பேட்டிங் செய்த போது பும்ரா வீசிய 43-வது ஓவரின் 3-வது பந்தை ரஹீம் எதிர்கொண்டார். அவர் கொடுத்த அற்புதமான கேட்ச்சை ரவீந்திர ஜடேஜா தாவி பிடித்து அவுட்டாகினார். அப்போது இந்திய அணியில் ஒவ்வொரு போட்டியின் நடுவில் கொடுக்கப்படும் சிறந்த ஃபீல்டருக்கான விருதை எனக்கு கொடுங்கள் என்று ரவீந்திர ஜடேஜா சைகை செய்த போது ஃபீல்டிங் பயிற்சிசாளர் கைதட்டி பாராட்டினார்.
மறுபுறம் ஏற்கனவே விக்கெட் கீப்பர் ராகுலும் அபாரமான கேட்ச் பிடித்ததால் இந்த போட்டியின் முடிவில் யாருக்கு அந்த விருது கொடுப்பது என்ற குழப்பம் பயிற்சியாளருக்கு ஏற்படும் அளவுக்கு இந்தியாவின் ஃபீல்டிங் அபாரமாக இருந்தது.
இந்நிலையில் சிறந்த பீல்டருக்கான விருது ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் ஓய்வு அறையில் உள்ள டிவியில் அந்த விருது யாருக்கு என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்றைய போட்டியில் சிறந்த பீல்டர் விருது மைதானத்தில் உள்ள டிவியில் திரையிடப்பட்டது. இதனை சற்றும் எதிர்பாரத வீரர்கள் மற்றும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மேலும் டிராவிட் மற்றும் ரோகித் ரியாக்ஷன் வேற லெவலில் இருந்தது. அனைத்து வீரர்களும் பீல்டிங் பயிற்சியாளரை கட்டியணைத்து மகிழ்ந்தனர்.
Those reactions are priceless ?❤️
— Nithin (@Nithin_kumarrr) October 20, 2023
We are missing this environment in dressing room from a long time. This is TEAM❤️ @BCCI #Jadeja #ViratKohli #KLRahul #indiavsbangladesh pic.twitter.com/smOyvzWA6f
அந்த விருதை கேஎல் ராகுல் ஜடேஜாவுக்கு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- சொந்த சாதனைக்காக கோலி விளையாடவில்லை என லோகேஷ் ராகுல் கூறினார்.
- பெரிய ஷாட்டுகளை விளையாடுங்கள் என்று அவரிடம் கூறினேன்.
வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். இது ஒருநாள் போட்டியில் அவரது 48-வது சதமாகும்.
நேற்றைய போட்டியில் கோலி-லோகேஷ் ராகுல் ஜோடி, அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. கோலி 85 ரன்களில் இருந்தபோது இந்தியா வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ராகுல் ஒரு சிங்கிள் கூட எடுக்காமல் கோலி சதம் அடிப்பதற்காக வாய்ப்பை ஏற்படுத்தினார்.
இதற்கிடையே கோலி, சதம் அடிப்பதற்காக விளையாடினார் என்று சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.
இதுதொடர்பாக லோகேஷ் ராகுல் கூறும் போது, விராட்கோலி சதமடிப்பதற்காக நான் சிங்கிள் எடுப்பதை தவிர்த்தேன். அப்போது கோலி என்னிடம், நீங்கள் சிங்கிள் எடுக்காமல் போனால் அது நன்றாக இருக்காது. ஏனென் றால் நான் சொந்த சாத னைக்காக விளையாடுகி றேன் என அனைவரும் நினைப்பார்கள் என்று கூறினார். சிங்கிள் எடுக்கும் படி கூறினார். ஆனால் வெற்றி நமக்கு உறுதியாகி விட்டதால் நீங்கள் சதமடியுங்கள் என்று நான்தான் அவரிடம் கூறினேன். 30 ரன்கள் தேவைப்பட்டபோது அனைத்து பந்துகளையும் நான் தடுத்து ஆடுகிறேன். பெரிய ஷாட்டுகளை விளையாடுங்கள் என்று அவரிடம் கூறினேன்.
இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.
41-வது ஓவர் முடிவில் இந்தியாவின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கோலி 97 ரன்களுடன் களத்தில் இருந்தார். 42-வது ஓவரை வீசிய நசூம் முதல் பந்தை லைக் சைடில் வைடாக வீசினார். ஆனால் அந்த பந்துக்கு நடுவர் ரிச்சர்ட் கேட்டல் போரக் வைடு கொடுக்கவில்லை.
2-வது பந்தில் கோலி ரன் எடுக்கவில்லை. 3-வது பந்தில் சிக்சர் அடித்து சதத்தை பூர்த்தி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் போட்டியில் சிறந்த பீல்டர் விருதை விராட் கோலி தட்டிச் சென்றார்.
- 2-வது போட்டியில் சிறந்த பீல்டர் விருது ஷர்துல் தாகூருக்கு வழங்கப்பட்டது.
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை 14 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதன் அடிப்படையில் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 3 போட்டிகளில் விளையாடிய இந்தியா அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி ஒவ்வொரு போட்டியின் முடிவில் சிறந்த பீல்டருக்கான விருது வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளது. முதல் போட்டியில் சிறந்த பீல்டர் விருதை விராட் கோலியும் 2-வது போட்டியில் சிறந்த பீல்டர் விருதை ஷர்துல் தாகூரும் தட்டிச் சென்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதையடுத்து அந்த போட்டியில் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்த கேஎல் ராகுலுக்கு சிறந்த பீல்டர் விருது வழங்கப்பட்டது. அவருக்கு விருது வழங்கும் போது அனைத்து வீரர்களும் கலாய்த்தனர். குறிப்பாக விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ரியாக்ஷன் வேர லெவலில் இருந்தது.
கேஎல் ராகுல் பீல்டராக சிறப்பாக செயல்பட்டாலும் கீப்பிங் என்று வரும் போது அவர் சுமாராகவே செயல்படுவார். அதனால் கூட அனைவரும் கலாய்த்திருக்கலாம். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- 115 பந்தில் 95 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது
- விராட் கோலி 116 பந்தில் 85 ரன்கள் சேர்த்தார்
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கே.எல். ராகுல் 97 ரன்கள் அடித்து சதம் அடிக்க முடியாமல் போனது. அவர் 91 ரன்கள் இருக்கும்போது, இந்தியாவின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. அவர் சதம் அடிக்க 9 ரன்கள் தேவைப்பட்டது.
41-வது ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரில் முதலில் ஒரு பவுண்டரி அடிக்க வேண்டும். ஸ்கோர் சமன் ஆகிவிடும். அதன்பின் சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற வைக்க வேண்டும். அதோடு சதத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என கே.எல். ராகுல் நினைத்தார்.
ஆனால், 2-வது பந்தை ஆஃப் சைடு தூக்கி அடித்தார். பந்து பவுண்டரிக்கு போகும் என நினைத்தார். ஆனால், லைனை தாண்டி சிக்ஸ் சென்று விட்டது. இந்தியா 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கே.எல். ராகுல் 97 ரன்கள் எடுத்தார்.
சிக்ஸ் சென்றதும், அடடே... சிக்ஸ் போய்விட்டதே... என கவலையில் அப்படியே உட்கார்ந்தார். அதன்பின் ஹர்திக் பாண்ட்யா உடன் வெற்றியை பகிர்ந்து கொண்டார்.
இந்தியா 2 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்த நிலையில், கே.எல். ராகுல்- விராட் கோலி ஜோடி அபாரமான விளையாடியது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய இந்திய அணி 399 ரன்களை குவித்தது.
- சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடி அதிரடியாக ஆடி 200 ரன்கள் சேர்த்தனர்.
இந்தூர்:
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெயிக்வாட், சுப்மன் கில் களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 16 ஆக இருக்கும்போது ருதுராஜ் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் சுப்மன் கில்லுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்திய அணி 9.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடியைப் பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணியினர் திணறினர். இருவரும் கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.
சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோர் சதமடித்து அசத்தினர். ஷ்ரேயஸ் அய்யர் 86 பந்துகளில் 3 சிக்சர், 10 பவுண்டரிகள் உள்பட சதமடித்தார். அவர் 105 ரன்னில் அவுட்டானார். இது இவரது 3வது ஒருநாள் சதமாகும்.
சுப்மன் கில் 92 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டரி உள்பட சதமடித்து அசத்தினார். அவர் 104 ரன்னில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இவர்கள் 200 ரன்கள் குவித்தனர். இஷான் கிஷன் 31 ரன்னில் வெளியேறினார்.
தொடர்ந்து ஆடிய கேப்டன் கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் ஜோடியில் சிக்சர், பவுண்டரிகளாக அடித்தனர். ராகுல் அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார்.
கேமரூன் கிரீன் வீசிய 43-வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து 4 சிக்சர்கள் அடித்து அசத்தினார்.
இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 399 ரன்களை குவித்தது. சூர்யகுமார் யாதவ் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.
- டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
- அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 276 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
மொகாலி:
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 276 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. டேவிட் வார்னர் அரை சதம் அடித்து 52 ரன்களில் அவுட் ஆனர். ஜோஷ் இங்கிலிஸ் 45 ரன்னும், ஸ்மித் 41 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்திய அணி சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்டும், பும்ரா, அஷ்வின், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய இந்திய அணி 48.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
சுப்மன் கில் 74 ரன், ருதுராஜ் 71 ரன், சூர்யகுமார் யாதவ் 50 ரன் மற்றும் கே.எல்.ராகுல் 58 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.
இந்நிலையில், வெற்றி குறித்து கேப்டன் கே.எல்.ராகுல் பேசியதாவது:
நான் கேப்டனாக இருப்பது இது முதல் முறை கிடையாது. யாரேனும் இல்லை என்றால் இந்த பொறுப்பு என்னை தேடி வந்துவிடும். இதற்கு நான் பழகிக் கொண்டு விட்டேன். இந்த பொறுப்பும் எனக்கு பிடித்திருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் எங்கள் அணி வீரர்கள் காட்டிய உத்வேகம் மிகவும் சிறப்பானது.
எங்கள் அணியில் இன்று 5 பந்துவீச்சாளர்கள் தான் இருந்தார்கள். அதனால் அனைவருமே 10 ஓவர்கள் வீச வேண்டிய நிலைமை ஏற்பட்டது. நாங்கள் பேட்டிங் செய்யும்போது கில் மற்றும் ருதுராஜ் சிறப்பான தொடக்கத்தை அளித்தார்கள். எனினும் கில் ஆட்டம் இழந்த பிறகு போட்டியில் நாங்கள் நெருக்கடியை சந்தித்தோம்.
ஏனென்றால் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த வீரர்கள் ஆட்டம் இழந்தால் எப்போதுமே பின்னால் வருபவர்களுக்கு சிக்கல்தான். நானும் சூரியகுமாரும் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்அமைத்தோம். ஒரு வீரராக இது போன்ற கடின சவால்களை சந்திக்க ஆசைப்படுகிறேன்.
அதிரடியாக ஆடி விக்கெட்டுகளை இழக்க நாங்கள் விரும்பவில்லை. போட்டியை கடைசி வரை கொண்டு சென்று வெற்றி பெற வேண்டும் என நானும் சூரியகுமாரும் பேசி வைத்து விளையாடினோம் என தெரிவித்தார்.