என் மலர்
கிரிக்கெட் (Cricket)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கே.எல். ராகுல் கேப்டனாக நியமனம்
- ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அணியில் இடம் பிடித்துள்ளார்.
- ஜெய்ஸ்வாலுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்த உடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடக்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின்போது, ஒருநாள் அணி கேப்டனான சுப்மன் கில்லுக்கு கழுத்தில் வலி ஏற்பட்டது. இதனால் முதல் போட்டியில் அதன்பின் பேட்டிங் செய்யவில்லை. இரண்டாவது போட்டியிலிருந்து விலகினார்.
ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்தும் விலகினார். இதனால் ஒருநாள் அணிக்கு வேறு கேப்டனை நியமிக்க வேண்டிய நிர்பந்தம் BCCI-க்கு ஏற்பட்டது. ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் உள்ளிட்டோர் கேப்டன் வரிசையில் இருந்தனர்.
இந்த நிலையில் கே.எல். ராகுல் கேப்டனாக செயல்படுவார் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. மேலும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது. அதில் ரோகித் சர்மா, விராட் கோலி இடம் பிடித்துள்ளனர். ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார்.
இடது கை அதிரடி பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வாலுக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது.
தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி விவரம்:-
ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, கே.எல். ராகுல் (கேப்டன்) (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா, குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, ருதுராஜ் கெய்க்வாட், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ஜுரல்.
முதல் போட்டி 30-ந்தேதி ராஞ்சியிலும், 2ஆவது போட்டி டிசம்பர் 3-ந்தேதி ராய்ப்பூரிலும், 6-ந்தேதி விசாகப்பட்டினத்திலும் நடக்கிறது.






