என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சுப்மன் கில், கே.எல். ராகுலுக்கு எப்போதும் நினைவில் இருக்கக் கூடியதாக அமைந்த இங்கிலாந்து தொடர்..!
    X

    சுப்மன் கில், கே.எல். ராகுலுக்கு எப்போதும் நினைவில் இருக்கக் கூடியதாக அமைந்த இங்கிலாந்து தொடர்..!

    • கே.எல். ராகுல் 5 டெஸ்டில் 532 ரன்கள் குவித்தார்.
    • சுப்மன் கில் 754 ரன்கள் குவித்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இங்கிலாந்து பந்து வீச்சை எப்படி எதிர்கொள்ள போகிறது என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது.

    ஆனால், அந்த சந்தேகத்தை இந்திய அணி தகர்த்தது. சிறப்பான ஆட்டத்தால் 4 போட்டிகள் முடிவில் இந்தியா 1-2 என தொடரில் பின்தங்கிய நிலையில் உள்ளது. தற்போது நடைபெற்று வரும் கடைசி டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யும்.

    இதற்கு முக்கிய காரணம் இந்திய பேட்ஸ்மேன்கள் அபாரனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக தொடக்க வீரரான கே.எல். ராகுல் அற்புதமாக விளையாடினார். அவர் 10 இன்னிங்சில் 2 சதம், 2 அரைசதத்துடன் 532 ரன்கள் குவித்துள்ளார். கவாஸ்கருக்கு (774 மற்றும் 542) அடுத்தப்படியாக வெளிநாட்டு மண்ணில் தொடக்க வீரரான அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதனால் இந்த தொடர் அவருக்கு எப்போதும் நினைவில் இருக்கக் கூடிய தொடராக இருக்கும்.

    அதேபோல் சுப்மன் கில் கேப்டன் பதவியுடன் சிறப்பாக பேட்டிங் செய்ய கடினம். அவருக்கு மிகுந்த நெருக்கடி இருக்கும் என கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்தனர். ஆனால், சுப்மன் கில் அபாரமாக விளையாடி 4 சதங்கள் விளாசினார். இதில் ஒன்று இரட்டை சதம் ஆகும். மொத்தம் 754 ரன்கள் குவித்துள்ளார். 10 இன்னிங்சில் அவரது சராசரி 75.4 ஆகும்.

    ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் கவாஸ்கருக்கு (774) அடுத்த இடத்தை பிடித்துள்ளார். இதனால் சுப்மன் கில்லுக்கும் இந்த தொடர் நினைவில் இருக்கக் கூடிய தொடராக இருக்கும்.

    Next Story
    ×