என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ENGvsIND"

    • போட்டி 4ஆவது நாள் முடிந்திருந்தால், சுப்மன் கில் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டிருப்பார்.
    • மைக் ஆதர்டன் சுப்மன் கில்லுக்கான அனைத்து கேள்விகளையும் தயார் செய்து வைத்திருந்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. கடைசி நாளான நேற்று 35 ரன்கள் தேவை என்ற நிலையில், இங்கிலாந்து கையில் 4 விக்கெட்டுகள் இருந்தன.

    முகமது சிராஜ் அபாரமாக பந்து வீச இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரை 2-2 என சமன் செய்தது.

    இந்த தொடரில் இங்கிலாந்து பயிற்சியாளர் இந்திய வீரரில் ஒருவரை தொடர் நாயகனாக தேர்வு செய்ய வேண்டும். அதன்படி மெக்கல்லம் 754 ரன்கள் குவித்த இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்லை தேர்வு செய்தார்.

    இந்த நிலையில் மெக்கல்லம் சுப்மன் கில்லிற்குப் பதிலாக முகமது சிராஜை தொடர் நாயகனாக தேர்வு செய்ய விரும்பினார் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

    "போட்டி 4ஆவது நாள் முடிந்திருந்தால், சுப்மன் கில் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டிருப்பார். வர்ணனையாளரான மைக் ஆதர்டன் பரிசளிப்பு விழாவை தொகுத்து வழங்க இருந்தார். ஆகவே, அவர் அனைத்து கேள்விகளை தயார் செய்து வைத்திருந்தார். எல்லாமே கில்லுக்காக தயாராக இருந்தது.

    ஆனால் கடைசி நாளில் முகமது சிராஜ் அபாரமாக பந்து வீசினார். அரைமணி நேரத்திற்குள் மெக்கல்லம் தொடர் நாயகன் விருது முடிவை மாற்றி முகமது சிராஜிக்கு மாற்ற விரும்பினார். போட்டிக்குப் பிறகு கூட ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனலில் பேசும்போது, முகமது சிராஜ் குறித்து பேசினார். சிராஜ் பந்து வீச்சு பார்த்து எப்படி மகிழ்ந்தார், அவரை பற்றிய அனைத்து அருமையான விசயங்கள் குறித்து பேசினார்" என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

    • இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.
    • 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என சமனில் முடிந்தது.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பான இன்றைய ஆட்டத்தில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என சமனில் முடிந்தது.

    கடைசி டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 28 புள்ளிகளுடன் இந்தியா 3வது இடத்திற்கு முன்னேறியது.

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மெதுவாக பந்துவீசியதற்காக இங்கிலாந்து அணிக்கு 2 புள்ளிகள் குறைக்கப்பட்டது. இதனால் 26 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி 4வது இடத்தில உள்ளது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 36 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அணி முதல் இடத்தில உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விராட் கோலியை சில நேரம் மிஸ் செய்கிறேன்.
    • ஆனால் ஒவல் டெஸ்டில் எப்போதும் மிஸ் செய்கிறேன் எனக் கூறியிருந்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இங்கிலாந்து அணிக்கு இந்தியா 574 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. நேற்றைய 4ஆவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பென் டக்கட் (54), ஜோ ரூட் (106), ஹாரி ப்ரூக் (11) ஆகியோரின் ஆட்டத்தால் இங்கிலாந்து இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்தது.

    நேற்றைய ஆட்ட நேரம் முடியும் நேரத்தில் ஜோ ரூட், ப்ரூக் ஆட்டமிழந்தனர். அத்துடன் வெளிச்சம் இல்லாததால் போட்டி முன்னதாகவே முடிவடைந்தது. அப்போது இங்கிலாந்து வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது.

    இந்தியா 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியதால் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. முக்கியமான தருணத்தில் வெற்றி பெற முடியவில்லை. முன்னாள் வீரர்களான ரோகித் அல்லது விராட் கோலி இருந்திருந்தால் இந்த போட்டியின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும் என விமர்சனம் செய்தனர். அதில் சச தரூரும் தனது வேதனையை வெளிப்படுத்தியிருந்தார். இவர் ஒரு சிறந்த கிரிக்கெட் ரசிகர் ஆவார்.

    ஆனால் இன்று காலை 5ஆவது நாள் ஆட்டம் தொடங்கியதும் பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் அபாரமாக பந்து வீசி 367 ரன்னில் இங்கிலாந்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன்செய்தது.

    இந்த நிலையில் நமது ஹீரோக்களுக்கு சபாஷ் என சச தரூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சசி தரூர் தனது எக்ஸ் பக்கத்தில் "வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை... என்ன ஒரு வெற்றி (WHAT A WIN!) இங்கிலாந்துக்கு எதிரான தொடரை சமன் செய்ததில் இந்திய அணிக்கு மிகவும் உற்சாகமும் மகிழ்ச்சியும்! அணியில் காணப்பட்ட மன உறுதி, மன உறுதி மற்றும் ஆர்வம் நம்பமுடியாதவை. இந்த அணி சிறப்பு வாய்ந்தது.

    நேற்று முடிவு குறித்து நான் ஒரு சந்தேகத்தை வெளிப்படுத்தியதற்கு வருந்துகிறேன். ஆனால் முகமது சிராஜ் ஒருபோதும் நம்பிக்கையை நிறுத்தவில்லை! நம் ஹீரோக்களுக்கு வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    நேற்றைய போட்டிக்குப்பின் "இந்தத் தொடரில் விராட் கோலியை நான் சில முறை தவற விடுகிறேன். ஆனால், இந்த போட்டியில் எப்போதும் மிஸ் செய்கிறேன். அவருடைய பேட்டிங்கை தவிர்த்து கிரிட், தீவிரம், ஆடுகளத்தில் இருக்கும் உத்வேகம் உள்ளிட்டவை போட்டியின் முடிவை மாற்றியிருக்கலாம்" எனத் தெரிவித்திருந்தார்.

    • தொடர் 2-2 என சமனில் முடிந்தது நியாயமான பிரதிபலிப்பு.
    • இந்தத் தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பதே எனது நோக்கமாக இருந்தது. அவ்வாறு அமைந்தது திருப்திகரமாக இருக்கிறது.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 2-2 என டிராவில் முடிந்துள்ளது. இந்த டெஸ்டில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் அபாரமான விளையாடி 4 சதங்களுடன் 700 ரன்களுக்கு மேல் குவித்தார்.

    இதனால் இங்கிலாந்து தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் சுப்மன் கில்லை தொடர் நாயகனாக தேர்வு செய்துள்ளார்.

    ஆட்ட நாயகன் தொடர் விருது வென்ற சுப்மன் கில் கூறியதாவது:-

    இரண்டு அணிகளும் விளையாடிய விதம் மிகவும் சிறப்பானது. இறுதி நாளான இன்று முடிவு யாருக்கு என்பது தெரியாமல் இரு அணிகளும் தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தின. சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா போன்ற பந்து வீச்சாளர்கள் இருக்கும்போது, கேப்டன்ஷியை எளிதாக நோக்கலாம். நாங்கள் இன்று காலை விளையாடியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    நாங்கள் மிகவும் உறுதியாக இருந்தோம். நேற்று கூட, அவர்களுக்கு நெருக்கடி இருந்தது எங்களுக்கு தெரிந்தது. நாங்கள் அதை முழுவதுமாக அப்படியே வைத்துக் கொள்ள விரும்பினோம். சிராஜ் கேப்டனுடைய கனவு. ஒவ்வொரு ஸ்பெல் மற்றும் ஒவ்வொரு பந்திலும் தனது பங்களிப்பை கொடுத்தார். தொடர் 2-2 என சமனில் முடிந்தது நியாயமான பிரதிபலிப்பு.

    இது இரண்டு அணிகளும் எவ்வளவு ஆர்வமாக இருந்தன மற்றும் எப்படி வெளிப்படுத்தின என்பதை காட்டுகிறது. இந்தத் தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பதே எனது நோக்கமாக இருந்தது. அவ்வாறு அமைந்தது திருப்திகரமாக இருக்கிறது. நாங்கள் ஒருபோதும் விட்டுக்கொடுப்பதில்லை. கடந்த ஆறு வாரங்களிலிருந்து கற்றுக்கொண்டது இதுதான்.

    இவ்வாறு சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

    • முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி இன்று 3 விக்கெட் வீழ்த்தினார்.
    • இந்தியா 6 ரன்னில் வெற்றி பெற்றது.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. கடைசி நாளான இன்று 5ஆவது நாளில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 4 விக்கெட் இருந்தது.

    ஆட்டம் தொடங்கியதும் யார் பெற்றி பெறுவார் என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரில் பிரசித் கிருஷ்ணா 8 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    அடுத்த ஓவரை முகமது சிராஜ் வீசினார். இந்த ஓவரில் ஸ்மித் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் பிரசித் கிருஷ்ணா 4 ரன்கள் விட்டுக்கொடுத்தார். சிராஜ் வீசிய 2ஆவது ஓவரில் ஓவர்ட்டனை சிராஜ் வீழ்த்தினார். இதனால் இங்கிலாந்து 354 ரன்னுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது.

    20 ரன்கள் தேவை என்ற நிலையில் அட்கின்சன் உடன் ஜோஷ் டாங்க் ஜோடி சேர்ந்தார். 81 ஆவது ஓவரில் டாங்க் எல்பிடபிள்யூ ஆனார். ஆனால் இங்கிலாந்து ரிவ்யூ கேட்டது. ரிவ்யூவில் பந்து ஸ்டம்பை தாக்காமல் வெளியில் சென்றது. இதனால் டாங்க் தப்பித்தார். இந்த விக்கெட்டை வீழ்த்தினால் இந்தியாவின் வெற்றி உறுதியாகிவிடும். ஏனென்றால் கிறிஸ் வோக்ஸ் தோள்பட்டை காயத்தால் களம் இறங்கவில்லை. ஒருவேளை பேட்டிங் செய்ய வந்தாலும் ரன் அடிப்து கடினம்.

    அட்கின்சன்- டாங்க் ஜோடி சமாளித்து விளையாடியது. சிராஜ் அபாரமான பந்து வீசினார். 80 ஓவர்கள் முடிந்த நிலையிலும் இந்தியா புதுப்பந்து எடுக்காமல் பழைய பந்தை பயன்படுத்தியது. சிராஜ் சிறப்பாக பந்து ஸ்விங் செய்தது.

    82 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. 83 ஆவது ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் டாங்க் க்ளீன் போல்டானார். இதனால் இங்கிலாந்து 9 விக்கெட்டை இழந்தது. 17 ரன்கள் தேவைப்பட்டது.

    தோள்பட்டை கை காயத்துடன் கிறிஸ் வோக்ஸ் களம் இறங்கினார். 84 ஆவது ஓவரை முகமது சிராஜ் வீசினார். 2ஆவது பந்தில் அட்கின்சன் சிக்ஸ் அடித்து பரபரப்பை கூட்டினார். கடைசி பந்து அட்சின்சன் பேட்டில் படவில்லை. ஆனாலும் பை (Bye) மூலம் ஒரு ரன் ஓடினர். ஜுரெல் ரன்அவுட் செய்ய தவறினார்.

    இதனால் 10 ரன்கள் தேவைப்பட்டது. 84ஆவது ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசினார். முதல் பந்தில் அட்கின்சன் 2 ரன்அடித்தார். இதனால் 8 ரன் தேவைப்பட்டது. இந்த ஓவரின் கடைசி பந்தில் அட்கின்சன் ஒரு ரன் எடுத்தார்.

    இதனால் இங்கிலாந்துக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. சிராஜ் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் அட்கின்சன் க்ளீன் போல்டானார். இதனால் இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அத்துடன் தொடரை 2-2 என சமன் செய்தது.

    2ஆவது இன்னிங்சில் சிராஜ் 5 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.

    • இந்தியா பிரமிக்க வைக்கும் வகையில் விளையாடியது.
    • ஆனால், முக்கியமான தருணங்களை அவர்களால் வெல்ல முடியவில்லை.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 5ஆவது போட்டியின் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இங்கிலாந்து வெற்றி பெற 35 ரன்கள் தேவை. கைவசம் 4 விக்கெட்டுகள் உள்ளன. இதனால் பரபரப்பான நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து தொடரில் இந்தியா பிரமிக்க வைக்கும் நிலையில் விளைடியாது என இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் லாய்டு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக டேவிட் லாய்டு கூறியதாவது:-

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா பிரமிக்க வைக்கும் வகையில் விளையாடியது. ஆனால், முக்கியமான தருணங்களை அவர்களால் வெல்ல முடியவில்லை. ரோகித் அல்லது விராட கோலி விளையாடியிருந்தால், இந்தியாவின் ரிசல்ட் மாறுபட்டதாக இருந்திருக்கும். சில வீரர்கள் முக்கிய தருணங்களை மோப்பம் பிடித்து எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக முன்கூட்டியே செயல்படுவார்கள். இதில் பென் ஸ்டோக்ஸ் அற்புதமானவர்.

    இவ்வாறு டேவிட் லாய்டு தெரிவித்துள்ளார்.

    • ஜெய்ஸ்வால் 118 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
    • ஆகாஷ் தீப் 66 ரன்கள் அடித்து ஸ்கோர் உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. முகமது சிராஜ் (4), ஆகாஷ் தீப் (4) ஆகியோர் சிறப்பாக பந்து வீச இங்கிலாந்து 247 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    23 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். நைட் வாட்ச்மேனாக களம் இறங்கிய ஆகாஷ் தீப் 66 ரன்கள் சேர்த்தார்.

    இன்றைய 3ஆவது நாள் தேனீர் இடைவேளைக்குப் பிறகு இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது 300 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது. மேலும் ஒரு ரன் சேர்க்காமல் ஜுரெல் விக்கெட்டை இந்தியா இழந்தது.

    ஜுரெல் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் விளையாடி வருகின்றனர். இந்தியா 77 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா அரை சதத்தை நெருங்கி வருகிறார்.

    • கே.எல். ராகுல் 5 டெஸ்டில் 532 ரன்கள் குவித்தார்.
    • சுப்மன் கில் 754 ரன்கள் குவித்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இங்கிலாந்து பந்து வீச்சை எப்படி எதிர்கொள்ள போகிறது என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது.

    ஆனால், அந்த சந்தேகத்தை இந்திய அணி தகர்த்தது. சிறப்பான ஆட்டத்தால் 4 போட்டிகள் முடிவில் இந்தியா 1-2 என தொடரில் பின்தங்கிய நிலையில் உள்ளது. தற்போது நடைபெற்று வரும் கடைசி டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யும்.

    இதற்கு முக்கிய காரணம் இந்திய பேட்ஸ்மேன்கள் அபாரனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக தொடக்க வீரரான கே.எல். ராகுல் அற்புதமாக விளையாடினார். அவர் 10 இன்னிங்சில் 2 சதம், 2 அரைசதத்துடன் 532 ரன்கள் குவித்துள்ளார். கவாஸ்கருக்கு (774 மற்றும் 542) அடுத்தப்படியாக வெளிநாட்டு மண்ணில் தொடக்க வீரரான அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதனால் இந்த தொடர் அவருக்கு எப்போதும் நினைவில் இருக்கக் கூடிய தொடராக இருக்கும்.

    அதேபோல் சுப்மன் கில் கேப்டன் பதவியுடன் சிறப்பாக பேட்டிங் செய்ய கடினம். அவருக்கு மிகுந்த நெருக்கடி இருக்கும் என கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்தனர். ஆனால், சுப்மன் கில் அபாரமாக விளையாடி 4 சதங்கள் விளாசினார். இதில் ஒன்று இரட்டை சதம் ஆகும். மொத்தம் 754 ரன்கள் குவித்துள்ளார். 10 இன்னிங்சில் அவரது சராசரி 75.4 ஆகும்.

    ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் கவாஸ்கருக்கு (774) அடுத்த இடத்தை பிடித்துள்ளார். இதனால் சுப்மன் கில்லுக்கும் இந்த தொடர் நினைவில் இருக்கக் கூடிய தொடராக இருக்கும்.

    • முதல் இன்னிங்சில் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • 2ஆவது இன்னிங்சில் அபாரமாக விளையாடி 127 பந்தில் சதம் அடித்தார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஜெய்ஸ்வால் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தார். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 247 ரன்னில் ஆல்அவுட் ஆனது. முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    23 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆடுகளத்தில் பந்து அதிக அளவில் ஸ்விங் ஆனதால் பேட்ஸ்மேன்கள் திணறினர். இருந்தாலும் ஜெய்ஸ்வால் தன்னம்பிக்கையுடன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    நேற்றைய 2ஆவது நாள் ஆட்டத்தில் 44 பந்தில் அரைசதம் அடித்தார். அத்துடன் 51 ரன்களுடன் நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் ஆகாஷ் தீப் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இன்று 5ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நைட் வாட்ச்மேனாக களம் இறங்கிய ஆகாஷ் தீப் 70 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் ஜெய்ஸ்வால் சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆகாஷ் தீப் 66 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்திருந்தது. மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் சுப்மன் கில் 11 ரன்னில் வெளியேறினார். ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி 127 பந்தில் சதம் விளாசினார். அவரது சதத்தில் 11 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும்.

    24ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜெய்ஸ்வாலின் 6ஆவது சதம் இதுவாகும். இந்த தொடரில் ஜெய்ஸ்வாலின் 2ஆவது சதம் இதுவாகும்.

    • மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் 199 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.
    • இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி 200 விக்கெட்டுகளை கடந்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 224 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்தும் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது.

    முகமது சிராஜ் போப், ஜோ ரூட், முகமது சிராஜ் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டிக்கு முன்னதாக முகமது சிராஜ் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் 199 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    ஒல்லி போப் விக்கெட்டை வீழ்த்தியபோது, சர்வதேச கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் அரைசதம் அடித்து களத்தில் உள்ளார்.
    • 100 ரன்கள் கடப்பார் என நம்புவதாக கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய வீரர் கருண் நாயர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இவரது அரை சதத்தால் இந்தியா முதல்நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்துள்ளது. கருண் நாயர் 98 பந்தில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்த நிலையில் கருண் நாயர் குறித்து கெவின் பீட்டர்சன் கூறியதாவது:-

    நேற்றைய முதல்நாள் நாளில் இந்தியாவின் பேட்டிங்கை நிலை நிறுத்திய கருண் நாயரின் ஆட்டம் மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது ஆட்டத்தில் மிகப்பெரிய அளவில் கடின உழைப்பை போட்டுள்ளார். இங்கிலாந்தில் பேட்டிங் செய்வது குறித்து ஐபிஎல் தொடரின்போது, பலமணி நேரம் நாங்கள் இருவரும் பேசியுள்ளோம். இன்று அற்புதமான 100 ரன்களை கடப்பார் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு கருண் நாயர் தெரிவித்துள்ளார்.

    • பென் ஸ்டோக்ஸ் ஆர்ச்சர் ஏற்கனவே 5ஆவது டெஸ்டில் விளையாடவில்லை.
    • இந்த நிலையில் கிறிஸ் வோக்ஸ் காயம் அடைந்திருப்பது அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்று இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மதிய உணவு இடைவேளையின்போது மழை குறுக்கீடு செய்தது. இதனால் நீண்ட நேரம் போட்டி பாதிக்கப்பட்டது.

    இறுதியாக 64 ஓவர்கள் வீசப்பட்டன. இதில் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சு குழுவை கிறிஸ் வோக்ஸ் வழி நடத்திச் சென்றார். நேற்றைய ஆட்டத்தின்போது அவரது தோள்பட்டையில் பலத்த காயம் (shoulder dislocation) ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

    இதனால் 5ஆவது டெஸ்டில் மேற்கொண்டு விளையாடமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கிறிஸ் வோக்ஸ் விளையாடாதது உறுதியானால் அது இங்கிலாந்து அணிக்கு பெரிய இழப்பாகும். இங்கிலாந்து அணியில் ஏற்கனவே பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×