என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    தொடரின் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க வேண்டும் என்பதே நோக்கம்: அவ்வாறு அமைந்தது திருப்தி- சுப்மன் கில்
    X

    தொடரின் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க வேண்டும் என்பதே நோக்கம்: அவ்வாறு அமைந்தது திருப்தி- சுப்மன் கில்

    • தொடர் 2-2 என சமனில் முடிந்தது நியாயமான பிரதிபலிப்பு.
    • இந்தத் தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பதே எனது நோக்கமாக இருந்தது. அவ்வாறு அமைந்தது திருப்திகரமாக இருக்கிறது.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 2-2 என டிராவில் முடிந்துள்ளது. இந்த டெஸ்டில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் அபாரமான விளையாடி 4 சதங்களுடன் 700 ரன்களுக்கு மேல் குவித்தார்.

    இதனால் இங்கிலாந்து தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் சுப்மன் கில்லை தொடர் நாயகனாக தேர்வு செய்துள்ளார்.

    ஆட்ட நாயகன் தொடர் விருது வென்ற சுப்மன் கில் கூறியதாவது:-

    இரண்டு அணிகளும் விளையாடிய விதம் மிகவும் சிறப்பானது. இறுதி நாளான இன்று முடிவு யாருக்கு என்பது தெரியாமல் இரு அணிகளும் தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தின. சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா போன்ற பந்து வீச்சாளர்கள் இருக்கும்போது, கேப்டன்ஷியை எளிதாக நோக்கலாம். நாங்கள் இன்று காலை விளையாடியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    நாங்கள் மிகவும் உறுதியாக இருந்தோம். நேற்று கூட, அவர்களுக்கு நெருக்கடி இருந்தது எங்களுக்கு தெரிந்தது. நாங்கள் அதை முழுவதுமாக அப்படியே வைத்துக் கொள்ள விரும்பினோம். சிராஜ் கேப்டனுடைய கனவு. ஒவ்வொரு ஸ்பெல் மற்றும் ஒவ்வொரு பந்திலும் தனது பங்களிப்பை கொடுத்தார். தொடர் 2-2 என சமனில் முடிந்தது நியாயமான பிரதிபலிப்பு.

    இது இரண்டு அணிகளும் எவ்வளவு ஆர்வமாக இருந்தன மற்றும் எப்படி வெளிப்படுத்தின என்பதை காட்டுகிறது. இந்தத் தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பதே எனது நோக்கமாக இருந்தது. அவ்வாறு அமைந்தது திருப்திகரமாக இருக்கிறது. நாங்கள் ஒருபோதும் விட்டுக்கொடுப்பதில்லை. கடந்த ஆறு வாரங்களிலிருந்து கற்றுக்கொண்டது இதுதான்.

    இவ்வாறு சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×