என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ENGvsIND 5th Test 300 ரன்கள் முன்னிலைப் பெற்றது இந்தியா: 327/7
- ஜெய்ஸ்வால் 118 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
- ஆகாஷ் தீப் 66 ரன்கள் அடித்து ஸ்கோர் உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. முகமது சிராஜ் (4), ஆகாஷ் தீப் (4) ஆகியோர் சிறப்பாக பந்து வீச இங்கிலாந்து 247 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
23 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். நைட் வாட்ச்மேனாக களம் இறங்கிய ஆகாஷ் தீப் 66 ரன்கள் சேர்த்தார்.
இன்றைய 3ஆவது நாள் தேனீர் இடைவேளைக்குப் பிறகு இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது 300 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது. மேலும் ஒரு ரன் சேர்க்காமல் ஜுரெல் விக்கெட்டை இந்தியா இழந்தது.
ஜுரெல் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் விளையாடி வருகின்றனர். இந்தியா 77 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா அரை சதத்தை நெருங்கி வருகிறார்.






