search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Akash Deep"

    • நீங்கள் நினைத்தது போல் நடக்காமல் போகும் சமயங்களில் ஒரு நல்ல தலைவர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்.
    • ரோகித் சர்மா தான் அந்த தலைவர்.

    இந்திய அணி சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 0-3 என்ற கணக்கில் மோசமாக தோற்றதுடன், ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரையும் 1-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இவ்விரு தொடரிலும் மூத்த வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் ரன் எடுக்க முடியாமல் திணறினர்.

    இதனால் கடும் விமர்சனங்கள் அவர்கள் மீது எழுந்தது. குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா மீது பேட்டிங் மற்றும் கேப்டன்சி குறித்து பல முன்னாள் வீரர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் அவர் விலகினார். அந்த தொடர் முடிந்து இந்தியா திரும்பிய ரோகித் சர்மா, மும்பை அணியுடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்.

    இந்நிலையில் என்னைப் போன்ற புதிய வீரர்கள் விளையாட நல்ல சூழலை ஏற்படுத்தி கொடுப்பவர் ரோகித் சர்மா என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஒரு தலைவர் என்பவர் தன்னை முன்னிலைப்படுத்தாமல் தனது அணிக்கு என்ன தேவையோ அதைதான் முன்னிலைப் படுத்துவார். ரோகித் பாய் எப்போதும் உத்வேகம் அளிப்பவர். என்னைப் போன்ற புதிய வீரர்கள் விளையாட நல்ல சூழலை ஏற்படுத்தி கொடுப்பவர்.

    நீங்கள் நினைத்தது போல் நடக்காமல் போகும் சமயங்களில் ஒரு நல்ல தலைவர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். ரோகித் சர்மா தான் அந்த தலைவர்.

    என ஆகாஷ் தீப் கூறினார்.

    • மெல்போர்ன் டெஸ்டில் முதுகு வலியுடன் பந்து வீசினார்.
    • சிட்னி டெஸ்டில் இடம்பெற வாய்ப்பில்லை எனத் தகவல்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான சிட்னி டெஸ்ட் நாளை தொடங்குகிறது. மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததால் அணியில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் முதுகு வலி காரணமாக சிட்னி டெஸ்டில் பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஹர்ஷித் ராணா அவருக்குப் பதிலாக இடம் பெறலாம் எனக் கூறப்படுகிறத.

    மெல்போர்ன் டெஸ்டில் பந்து வீசும்போது அடிக்கடி முதுகு வலி காரணமாக முதலுதவி எடுத்துக் கொண்டார். முதுகு வலி இருந்தும் சிறப்பாக பந்து வீசினார். ஆனால் அதிர்ஷ்டம் இல்லாத காரணத்தினால் அவருக்கு விக்கெட் கிடைக்கவில்லை.

    • நடப்பு தொடரில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் (11, 89, 140, 152 மற்றும் 17 ரன்) சிறப்பாக விளையாடி வருகிறார்.
    • டெஸ்டில் அவரை கட்டுப்படுத்த எந்த மாதிரி திட்டங்களை வகுத்துள்ளோம் என்பதை வெளிப்படுத்த முடியாது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. 3 டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

    இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் 'பாக்சிங் டே' என்ற பாரம்பரிய சிறப்புடன் தொடங்கும் இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு நேற்று பேட்டிங் பயிற்சியின் போது இடது கால்முட்டியில் பந்து தாக்கி காயம் ஏற்பட்டது. வலியால் அவதிப்பட்ட அவருக்கு பிசியோ சிகிச்சை அளித்ததுடன், ஐஸ்கட்டி ஒத்தடம் போட்டார். அவரது காயத்தன்மை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. இதே போல் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்புக்கு, வலை பயிற்சியில் பேட்டிங் செய்த போது பந்து கையில் தாக்கியது.

    பின்னர் ஆகாஷ் தீப் நிருபர்களிடம் கூறுகையில், 'கிரிக்கெட் விளையாடும்போது இது போன்று அடிபடுவது சகஜம். நாங்கள் பயிற்சி மேற்கொண்ட ஆடுகளம் வெள்ளைநிற பந்துக்குரியது என்று நினைக்கிறேன். அதனால் நிறைய பந்துகள் தாழ்வாகவே வந்தன. இருப்பினும் பயிற்சியின் போது இவ்வாறு அடிபடுவது வாடிக்கை தான். காயம் பயப்படும் அளவுக்கு இல்லை. ரோகித் சர்மா காயம் குறித்து கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை' என்றார்.

    மேலும் ஆகாஷ் தீப்பிடம் பிரிஸ்பேன் டெஸ்டில் (31 ரன் எடுத்தார்) பும்ராவுடன் இணைந்து பாலோ-ஆனை தவிர்த்து இந்திய அணியை காப்பாற்றியது குறித்து கேட்ட போது, 'நானும், பும்ராவும் பின்வரிசையில் ஆடக்கூடியவர்கள். இது போன்று 20-30 ரன்கள் எடுப்பது அணிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அணிக்காக எந்த வழியிலாவது எனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்பது மட்டுமே மனதில் ஓடியது. பாலோ-ஆனை தவிர்க்க வேண்டும் என்பதை எதிர்நோக்கி விளையாடவில்லை. அன்றைய தினம் ஆட்டமிழக்காமல் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். கடவுளின் அருளால் எங்களால் பாலோ-ஆனை தவிர்க்க முடிந்தது. இது போன்ற சூழலில் நீங்கள் நன்றாக ஆடும் போது, அது ஒட்டுமொத்த அணிக்கும் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் கொடுக்கும். அது தான் வீரர்களின் ஓய்வறையில் எதிரொலித்தது.

    நடப்பு தொடரில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் (11, 89, 140, 152 மற்றும் 17 ரன்) சிறப்பாக விளையாடி வருகிறார். அடுத்த டெஸ்டில் அவரை கட்டுப்படுத்த எந்த மாதிரி திட்டங்களை வகுத்துள்ளோம் என்பதை வெளிப்படுத்த முடியாது. சொன்னால் அதற்கு ஏற்ப தயாராகி விடுவார். டிராவிஸ் ஹெட் 'ஷாட்பிட்ச்' பந்துகளில் தடுமாறக்கூடியவர். அவரை களத்தில் நிலைத்துநின்று ஆட விடக்கூடாது. அவருக்கு எதிராக குறிப்பிட்ட இடத்தில் பந்தை பிட்ச் செய்து வீசுவதை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும். அவ்வாறு வீசும் போது அவர் தவறிழைத்து விக்கெட்டை இழக்க வாய்ப்பு உருவாகும்' என்றார்.

    • 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 89/7 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.
    • இந்திய தரப்பில் பும்ரா 3, சிராஜ், ஆகாஷ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    பிரிஸ்பேன்:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 445 ரன் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 252 ரன் எடுத்து இருந்தது.

    கே.எல். ராகுல் 84 ரன்னும், ரவீந்திர ஜடேஜா 77 என்னும் எடுத்தனர். ஜஸ்பிரீத் பும்ரா 10 ரன்னும், ஆகாஷ் தீப் 27 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். கடைசி விக்கெட்டான இந்த ஜோடி பாலோ ஆனை தவிர்த்தது. இந்த டெஸ்டில் 2-ம் நாள் ஆட்டத்தை தவிர எஞ்சிய 3 நாட்களும் மழையால் பாதிக்கப்பட்டது. முதல் நாளில் 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது.

    இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. 193 ரன்கள் பின்தங்கி, கைவசம் 1 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து விளையாடியது.

    போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் கடைசி விக்கெட் சரிந்தது. இந்திய அணி 78.5 ஓவரில் 260 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இது ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை விட 185 ரன் குறைவாகும்.

    ஆகாஷ் தீப் 31 ரன்னில் ஆட்டம் இழந்தார். பும்ரா அதே 10 ரன்னுடன் அவுட் ஆகாமல் இருந்த கடைசி விக்கெட் ஜோடி 47 ரன் எடுத்தது. கம்மின்ஸ் 4 விக்கெட்டும், ஸ்டார்க் 3 விக்கெட்டும், ஹசில்வுட், நாதன் லயன், டிராவிஸ் ஹெட் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    185 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கிய போது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. மதிய உணவு இடைவேளை வரை போட்டி மீண்டும் தொடங்கவில்லை.

    மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மழை விட்டதும் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சாலும் ஆஸ்திரேலிய விக்கெட்டுகள் சரிந்தன. 11 ஓவரில் 33 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 5 விக்கெட்டை இழந்தது. உஸ்மான் கவாஜா (8 ரன்), லபுஷேன் (1) ஆகியோர் பும்ரா பந்திலும், நாதன் மெக்ஸ்வீனி (47), மிச்செல் மார்ஷ் (2) ஆகியோர் ஆகாஷ்தீப் பந்திலும் அவுட் ஆனார்கள். ஸ்டீவ் சுமித் 4 ரன்னில், முகமது சிராஜ் பந்தில் பெவிலியன் திரும்பினார்.

    ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகள் சரிந்ததால் இந்த டெஸ்டில் பரபரப்பு ஏற்பட்டது. டிரெவிஸ் ஹெட் 17 ரன்கள் விளாசி அவுட் ஆனார். அடுத்து கேப்டன் கம்மின்ஸ் அதிரடியாக விளையாடி 10 பந்தில் 22 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அலெக்ஸ் கேரி 22 ரன்களுடன் களத்தில் இருந்தார். 18 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 89 ரன்கள் எடுத்த போது ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

    இதனால் இந்தியாவுக்கு 275 ரன்கள் வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்ததுள்ளது. தொடர்ந்து மழை பெறுவதால் ஆட்டம் டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.

    • இந்திய அணி 4-வது நாள் முடிவில் 252 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
    • ஆகாஷ் தீப், பும்ரா ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 39 ரன்கள் குவித்துள்ளது.

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி கபாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கேஎல் ராகுல், ஜடேஜா ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினர்.

    ராகுல் 84 ரன்னிலும் ஜடேஜா 77 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து இந்தியா பால் ஆனை தவிர்க்க போராடியது. கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பும்ரா- ஆகாஷ் தீப் பொறுப்புடன் ஆடினர். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசியில் பாலோ ஆனை தவிர்க்க 4 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஆகாஷ் தீப், தேர்ட் மேன் திசையில் பந்தை அடித்தார். அது பவுண்டரியாக மாறியது.

    இதனால் இந்திய அணி பாலோ ஆனை தவிர்த்தது. இதனை ஓய்வு அறையில் இருந்த கவுதம் கம்பீர், விராட் கோலி சந்தோசத்தில் துள்ளி குதித்தனர். அவர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் பெரிய அளவில் ஆரவாரம் செய்தனர். வெற்றி பெற்றது போல ஒரு மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தினர்.

    பாலோ ஆனை தவிர்க்கவில்லை என்றால் ஆஸ்திரேலியா இந்தியாவை பேட்டிங் செய்ய அழைக்கும். இதனால் ஒரு நாள் முடிவில் இந்தியாவின் 10 விக்கெட்டுகளை வீழ்த்துவது ஆஸ்திரேலியாவுக்கு பெரிய விஷயாமாக இருக்காது. இப்போது பாலோ ஆனை தவிர்த்ததால் கண்டிப்பாக ஆஸ்திரேலிய அணி தான் பேட்டிங் செய்யும். இதனால் ஆட்டம் டிராவை நோக்கி செல்லும்.

    பாலோ ஆன் தவிர்த்த சந்தோசத்தில் பேட் கம்மின்ஸ் வீசிய அடுத்த பந்தை ஆகாஷ் தீப் சிக்சருக்கு பறக்க விட்டார். இதனை ஓய்வு அறையில் இருந்த விராட் கோலி ஆச்சரியமுடன் பார்த்து சிரித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    வெளிச்சமின்மை காரணமாக 4-வது நாள் போட்டி முடிவுக்கு வந்தது. இதனையடுத்து வெளி வந்த பும்ரா- ஆகாஷ் தீப்புக்கு சக வீரர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • இந்திய தரப்பில் கேஎல் ராகுல், ஜடேஜா ஆகியோர் அரை சதம் விளாசினர்.
    • ஆஸ்திரேலியா தரப்பில் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி கபாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கேஎல் ராகுல் 33 ரன்களுடனும் ரோகித் 0 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

    தொடர்ந்து 4-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ரோகித் 10 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து கேஎல் ராகுல் உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 84 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிதிஷ் 16 ரன்னில் வெளியேறினார்.

    பொறுப்புடன் ஆடிய ஜடேஜா அரை சதம் கடந்தார். சிராஜ் 1 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து ஜடேஜா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் 77 ரன்கள் எடுத்திருந்த போது கம்மின்ஸ் பந்து வீச்சில் வெளியேறினார்.

    இந்நிலையில் பாலோ ஆனை தவிர்க்க 25 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இதற்காக பும்ரா- ஆகாஷ் தீப் ஜோடி போராடினர். இவர்களது போராட்டம் வீண் போகவில்லை. இந்திய அணி பாலோ ஆனை தவிர்த்தது. இந்த ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 39 ரன்கள் குவித்துள்ளது.

    இதனையடுத்து போதிய வெளிச்சம் இல்லாததால் 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய அணி 252 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது. பும்ரா 10 ரன்களுடனும் ஆகாஷ் 27 ரன்களுடன் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    • இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நாளை தொடங்குகிறது.
    • இந்த போட்டியில் இந்திய அணியில் 2 அல்லது 3 மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர் - கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 295 ரன் வித்தியாசத்திலும், அடிலெய்டில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை) இந்திய நேரப்படி அதிகாலை 5.50 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கடந்த போட்டியில் விளையாடிய போலண்ட்டுக்கு பதிலாக ஹசில்வுட் இடம் பெற்றுள்ளார். மற்றபடி அந்த அணியில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் 2 அல்லது 3 மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. முதல் டெஸ்ட்டின் 2-வது இன்னிங்சில் சுந்தர் 2 விக்கெட்டும் 29 ரன்கள் விளாசினார். ஆனால் அஸ்வின் 2-வது டெஸ்ட்டில் பேட்டிங், பந்து வீச்சில் பெரிதாக எதுவும் செய்யவில்லை. அவருக்கு பீல்டிங்கில் தடுமாறுவதாலும் அவருக்கு பதில் சுந்தரை ஆடும் லெவனில் எடுக்க வாய்ப்புள்ளது.

    பிரிஸ்பேன் ஆடுகளத்தில் பந்து வேகத்துடன் நன்கு பவுன்சும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 2-வது டெஸ்ட்டில் ஹர்சித் ரானா விக்கெட்டுகளை வீழ்த்த கஷ்டப்பட்டார். மேலும் ரன்களை வாரி வழங்கினார். இதனால் இவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அடிலெய்டு டெஸ்டில் இந்திய அணி ஹர்ஷித் ராணா உடன் களம் இறங்கும் என எதிர்பார்ப்பு.
    • அதேவேளையில் ஆகாஷ் தீப் உடனம் களம் இறங்கினால் நன்றாக இருக்கும் என ரவி சாஷ்திரி தெரிவித்துள்ளார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை அடிலெய்டில் தொடங்குகிறது. இது பகல்-இரவு போட்டியாக நடக்கிறது. இந்த போட்டியில் பிங்க்-பால் பயன்படுத்தப்பட இருக்கிறது. பிங்க்-பால் இரவு நேரத்தில் லைட் வெளிச்சத்தில் அதிக அளவில் ஸ்விங் ஆகும்.

    இந்தியா முதல் (பெர்த்) டெஸ்டில் பும்ரா, ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ் ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. நிதிஷ் ரெட்டி ஆல்-ரவுண்டர் வேகப்பந்து வீச்சாளரான அணியில் உள்ளார். அறிமுகமான பெர்த் டெஸ்டில் ஹர்ஷித் ராணா சிறப்பாக பந்து வீசினார். பிங்க்-பால் பயிற்சி ஆட்டத்திலும் விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதனால் நாளை தொடங்கும் டெஸ்ட் போட்டியில் ஹர்ஷித் ராணா களம் இறங்க வாய்ப்புள்ளது. அதேவேளையில் பிங்க்-பால் போட்டியில் ஆகாஷ் தீப்பை களம் இறக்க வேண்டும் என ரவி சாஷ்திரி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரவி சாஷ்திரி கூறுகையில் "ஒரு முக்கியமான விசயம் என்றவென்றால், இது பிங்க்-பால் டெஸ்ட் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். ஹர்ஷித் ராணா அறிமுக டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசினார் என்பது எனக்குத் தெரியும்.

    ஆனால் பிங்க் பால் சற்று கூடுதல் அரக்கு- வார்னீஷ் (Lacquer) இருக்கும். இதனால் பந்து ஸ்விங் செய்யவும், சீம் செய்யவும் கொஞ்சம் கடினமாக இருக்கும். இதனால் ஆகாஷ் தீப் அணியில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்" என்றார்.

    • ஐபிஎல் இரண்டாம் நாள் ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • இதுவரை ஒட்டுமொத்தமாக 8 ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே ஆகாஷ் தீப் விளையாடியுள்ளார்.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நேற்று நடைபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

    இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஏலம் தொடங்கியது. அப்போது பெங்களூரு அணியின் முன்னாள் வேகப்பந்து பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப்-ஐ ரூ.8 கோடி கொடுத்து லக்னோ அணி வாங்கியுள்ளது. இவரின் அடிப்படை விலையாக ரூ.1 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    ஒட்டுமொத்தமாக 8 ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஆகாஷ் தீப்-ஐ ரூ.8 கோடி கொடுத்து லக்னோ வாங்கி வாங்கியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் அணியில் சேர்ப்பு.
    • குல்தீப் யாதவ், முகமது சிராஜ் அதிரடி நீக்கம்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேயில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    பெங்களூருவில நடைபெற்ற முதல் டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 3-வது டெஸ்ட் நவம்பர் 1-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது.

    இந்திய அணியில் மூன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முகமது சிராஜ், கே.எல். ராகுல், குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர், கில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்திய அணி விவரம்:-

    ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, சர்பராஸ் கான், ரிஷப் பண்ட், ஜடேஜா, அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், பும்ரா.

    நியூசிலாந்து அணி விவரம்:-

    டாம் லாதம், கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், பிளண்டெல், கிளென் பிளிப்ஸ், மிட்செல் சான்ட்னெர், டிம் சவுத்தி, அஜாஸ் பட்டேல், வில்லியம் ஓ'ரூகே

    • முதல் இன்னிங்சில் இந்திய அணி 285 ரன்கள் குவித்தது.
    • இது வங்கதேசத்தை விட 52 ரன்கள் முன்னிலை ஆகும்.

    இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கான்பூரில் கடந்த 27-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 233 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மொமினுல் ஹக் 107 ரன்கள் அடிக்க, இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா அதிரடியாக விளையாடி 34.4 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 285 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இது வங்கதேசத்தை விட 52 ரன்கள் முன்னிலையாகும்.

    இந்த போட்டியில் முதலில் இருந்தே இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். பேட்டர்கள்தான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என்றால், வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் அவரது பங்குக்கு முதல் 3 பந்தில் 2 சிக்சர்களை விளாசி ரசிகர்களை மகிழ்வித்தார். இதில் ஒரு சுவாரஸ்ய விஷயம் என்னவென்றால் அவர் விராட் கோலி பேட்டை வைத்து இந்த 2 சிக்சர்களை அடித்துள்ளார்.

    இவர் சிக்சர்கள் அடிக்கும் போது வெளியில் இருந்த விராட் கோலி சிரித்தப்படி பும்ராவிடம் பேசி கொண்டிருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    விராட் கோலி அவரது பேட்டை ஆகாஷ் தீப்புக்கு பரிசாக வழங்கி இருக்கிறார். இதனை ஆகாஷ் தீப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி விராட் பாய் என பதிவிட்டிருந்தார்.

    • டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • மழை குறுக்கிட்டதால், முதல்நாள் போட்டி பாதிக்கப்பட்டது.

    இந்தியா வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்களை எடுத்த போது மழை குறுக்கிட்டதால், முதல்நாள் போட்டி முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

    முதல் நாளில் வங்கதேசம் அணியின் மொமினுல் 40 ரன்களுடனும், முஷ்ஃபிகுர் ரகுமான் 6 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்தியா சார்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும், அஷ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இன்று 2-ம் நாள் ஆட்டம் துவங்கவிருந்த நிலையில், மைதானத்தில் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் ஒரு பந்து கூட வீசப்படாமல் 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

    ×