search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deepak Chahar"

    • தோனி மீது தனிப்பட்ட முறையில் அதிக பாசம் எனக்கு இருக்கிறது.
    • தோனியை என்னுடைய மூத்த அண்ணனாக பார்க்கிறேன்.

    மகேந்திர சிங் தோனி உடனான நட்பு குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் கூறியதாவது:-

    அறுவை சிகிச்சைக்கு பின்னர் தோனி முழுமையாக குணமடைந்து விட்டார். என்னை பொறுத்தவரை அடுத்த 2 அல்லது 3 சீசன்களில் சி.எஸ்.கே. அணிக்காக அவர் விளையாட வர வேண்டும். இந்திய வீரர்கள் தாண்டி வெளிநாட்டு அணிகளை சேர்ந்த வீரர்கள் தோனியுடன் பேச, நேரம் செலவிட விரும்புவார்கள்.

    தோனி மிகவும் எளிமையான பழக்க வழக்கம் உடையவர். எல்லோரையும் சமமாக நடத்தக்கூடியவர். அதேசமயத்தில் அவர் கிரிக்கெட் குறித்து தெளிவான புரிதல் வைத்திருப்பார். அவரிடம் நேரம் செலவிடுவது கிரிக்கெட் வீரர்களுக்கு மிகவும் பிடிக்கும். தோனி மீது தனிப்பட்ட முறையில் அதிக பாசம் எனக்கு இருக்கிறது.


    தோனியை என்னுடைய மூத்த அண்ணனாக பார்க்கிறேன். அவரும் என்னை தம்பியாக பார்ப்பார் என்று நம்புகிறேன். எங்களுக்கு வேடிக்கையான தருணங்கள் நிறைய இருக்கிறது. கொரோனா நேரத்தில் நாங்கள் இருவரும் பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்து விளையாடி உள்ளோம்.

    களத்திற்கு வெளியே நிறைய நேரம் செலவு செய்திருக்கிறோம். அவரிடம் இருந்து நிறைய கற்றுள்ளேன். எனக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு அவரால் தான் கிடைத்தது. 2018-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் எனக்கு விளையாட 14 ஆட்டங்கள் கொடுத்தார். அதுதான் நான் இந்திய அணிக்கு தேர்வாவதற்கு முக்கிய காரணம்.

    இவ்வாறு தீபக் சாஹர் கூறினார்.

    • ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.
    • ஒருநாள் தொடரில் இருந்து தீபக் சாஹர் விலகியுள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதனையடுத்து ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.

    இந்நிலையில், ஒருநாள் தொடரில் இருந்து தீபக் சாஹர் விலகியுள்ளார். அவரது தந்தைக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் உடனிருந்து பார்த்து கொள்வதாலும் இந்த தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். இவருக்கு பதிலாக மாற்று வீரரை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஆகாஷ்தீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இவர் ஐபிஎல் போட்டியில் விளையாடி உள்ளார். 7 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    • முதல் 2 டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
    • இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    கவுகாத்தி:

    மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்திலும், திருவனந்தபுரத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் 44 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சாபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் இடம் பெறவில்லை. திருமணம் நடைபெற உள்ளதால் அவர் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக தீபக் சாஹர் அணியில் இணைந்துள்ளார்.

    • அவர் இங்கு இல்லை என்றால், அவர் எங்கே இருக்கிறார் என தேடுவோம்.
    • அவர் இருந்தால், அவர் ஏன் இங்கே இருக்கிறார் என்று நினைப்போம்.

    நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி கோப்பையை கைப்பற்றியது. இதன்மூலம் 5 முறை கோப்பையை வென்ற மும்பை அணியின் சாதனையை சென்னை அணி சமன் செய்தது. சென்னை அணி கோப்பையை கைப்பற்ற தீபக் சாஹரும் ஒரு காரணமாக திகழ்ந்தார்.



    இந்த ஐபிஎல் தொடரில் தீபக் சாஹரிடம் நிறைய முறை டோனி வம்பிழுப்பது போன்ற வீடியோக்களை காண முடிந்தது. இந்நிலையில் தீபக் சாஹரை போதை மருந்துடன் டோனி ஒப்பிட்டுள்ளார்.


    தீபக் சாஹர் குறித்து டோனி கூறியதாவது:-

    தீபக் சாஹர் ஒரு போதை மருந்து போன்றவர். அவர் இங்கு இல்லை என்றால், அவர் எங்கே இருக்கிறார் என தேடுவோம். அவர் இருந்தால், அவர் ஏன் இங்கே இருக்கிறார் என்று நீங்கள் நினைப்பீர்கள்.

    வயதுக்கேத்த மெச்சூரிட்டி அவரிடம் இல்லை. அதற்கு நீண்டகாலம் ஆகும். எனது மகள் 8 வயதில் கொண்டுள்ள புத்திசாலித்தனத்தை தீபக் 50 வயதில் பெற்று விடுவார். ஓயின் எப்படி நாளாக நாளாக சிறப்பு பெறும் என கூறுவார்களோ, அப்படித்தான் தீபக் சாஹரும். ஆனால் அந்த ஒயினை நான் குடிக்க முடியாது. தீபக் முதிர்ச்சி அடைவதற்குள் எனக்கு வயதாகிவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே 5-வது முறையாக வென்று சாதனை படைத்தது.
    • சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது. பரபரப்பான இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் கோப்பையை 5-வது முறையாக வென்று சாதனை படைத்தது.

    இந்த போட்டி முடிந்த பிறகு டோனியிடம் வீரர்கள் ஆட்டோகிராப் வாங்கினர். அப்போது சிஎஸ்கே வீரரான தீபக் சாஹர் அவரிடம் ஆட்டோகிராப் கேட்டு வந்தார். உடனே டோனி உனக்கு ஆட்டோகிராப் போட முடியாது என்று விலகினார். அப்போது அருகில் இருந்தவரிடம் கேட்ச் பிடிக்க தெரியல இவனுக்கு எப்படி ஆட்டோகிராப் போட முடியும் என fun-ஆக டோனி பேசினார்.

    முடிவில் தீபக் சாஹர் அணிந்திருந்த சிஎஸ்கே ஜெர்சியில் டோனி ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    நேற்றைய போட்டியில் சுப்மன் கில் கேட்சை தீபக் சாஹர் மிஸ் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மும்பைக்கு எதிரான போட்டியில் தீபக் சாஹர் காயம் காரணமாக 1 ஓவர் மட்டுமே வீசி பாதியிலேயே வெளியேறினார்.
    • அடிக்கடி காயத்தை சந்தித்து பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்லும் நீங்கள் பேசாமல் அங்கேயே ஒரு வீடு வாங்கி குடிபெயருங்கள் என ரவி சாஸ்திரி கூறினார்.

    ஐபிஎல் 2023 தொடரில் 5-வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில் மும்பைக்கு எதிரான போட்டியில் தீபக் சாஹர் காயம் காரணமாக 1 ஓவர் மட்டுமே வீசி பாதியிலேயே வெளியேறினார். அவருடைய காயம் சற்று அதிகமாக இருப்பதால் இன்னும் ஓரிரு வாரங்கள் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

    இப்படி அடிக்கடி காயத்தை சந்தித்து பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்லும் நீங்கள் பேசாமல் அங்கேயே ஒரு வீடு வாங்கி குடிபெயருங்கள் என ரவி சாஸ்திரி கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

    இதை இனிமேல் இந்த வழியில் பாருங்கள். அதாவது சில வீரர்கள் என்சிஏ'வில் நிரந்தரமாக குடியிருப்பவர்களாக மாறிவிட்டார்கள். விரைவில் அவர்களுக்கு அங்கே நிரந்தரமாக குடியிருக்கும் உரிமை கிடைக்கப் போகிறது. அப்போது தான் அவர்களால் எந்த நேரத்திலும் அங்கு செல்ல முடியும். இவ்வாறு தொடர்ந்து நடப்பது நல்லதல்ல. இது நம்ப முடியாததாக இருக்கிறது. அதாவது நீங்கள் அதிகமான கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை ஆனாலும் மீண்டும் மீண்டும் காயமடைகிறீர்கள்.

    குறிப்பாக முழுமையாக நீங்கள் 4 போட்டிகளில் கூட விளையாடவில்லை. பின்னர் ஏன் என்சிஏவுக்கு செல்கிறீர்கள்? அதாவது அங்கே இருந்து தான் வந்த நீங்கள் 3 போட்டிகளில் விளையாடியதும் ஏன் மீண்டும் அங்கே செல்கிறீர்கள். எனவே என்சிஏவில் அனைத்து அம்சங்களிலும் தேர்வாகி ஃபிட்டான பின் களமிறங்கி விளையாடுகிறோம் என்பதை உங்களுக்கு நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள். இது இந்திய அணிக்கு மட்டுமல்லாமல் வீரர்களுக்கும் பிசிசிஐ மற்றும் பல்வேறு அணிகளின் கேப்டன்களுக்கும் கடுப்பேற்றுகிறது.

    அது மிகவும் எரிச்சல் ஊட்டுகிறது. கடினமான காயங்களை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் ஒவ்வொரு 4 போட்டிக்கும் ஒரு முறை தசைப்பிடிப்பு காயம் ஏற்படும் போது அங்கு என்ன தான் நடக்கிறது என்பதை நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். இத்தனைக்கும் சில வீரர்கள் வேறு எந்த கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை. அதாவது 3 மணி நேர போட்டியில் வெறும் 4 ஓவர்கள் வீசியதும் காயமடைகிறீர்கள் என்பது அபத்தமானது.

    என்று கூறினார்.

    • மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தின்போது தீபக் சாஹருக்கு தசை நார் முறிவு ஏற்பட்டது.
    • சிஎஸ்கே அணி அடுத்ததாக ஏப்ரல் 12-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் அணிக்கெதிராக விளையாடவுள்ளது.

    சென்னை:

    சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஐபிஎல் அணி வீரர்கள் தீபக் சாஹர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் காயமடைந்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தின்போது தீபக் சாஹருக்கு தசை நார் முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் முதல் ஓவரிலேயே ஆட்டத்திலிருந்து வெளியேறினார். அதேபோல், பென் ஸ்டோக்ஸுக்கு பாதத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

    இத்தகவலை சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிஎஸ்கே அணி அடுத்ததாக ஏப்ரல் 12-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் அணிக்கெதிராக விளையாடவுள்ளது. அந்தப் போட்டியில் இந்த 2 வீரர்களும் பங்கேற்பார்களா என்பது தெரியவில்லை.

    • 2022-ம் ஆண்டு முழுவதும் இந்தியாவுக்காக 15 ஆட்டங்களில் மட்டுமே சாஹர் விளையாடினார்.
    • காயம் காரணமாக 2022-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையிலிருந்தும் வெளியேறினார்.

    'Fully fit and preparing well for IPL 2023' - Deepak Chahar on his comeback from twin injury setbacksஇந்திய அணியின் 30 வயதான வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் காயத்தில் இருந்து மீள்வதற்கு நீண்ட நாள்கள் எடுத்துக் கொண்டார். அவர் கடைசியாக வங்கதேசத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடினார். அங்கு அவர் மூன்று ஓவர்கள் வீசிய பிறகு வெளியேறினார்.

    2022-ம் ஆண்டு முழுவதும், சாஹர் இந்தியாவுக்காக 15 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். மேலும் காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையிலிருந்தும் வெளியேற்றப்பட்டார்.

    இந்நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு பெற்ற சாஹர், ஐபிஎல் போட்டிக்கு தயாராகி வருகிறார்.

    கடந்த ஆண்டு இரண்டு பெரிய காயங்களுடன் போராடிய பிறகு, இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், தான் முழு உடல் தகுதியுடன் இருப்பதாகவும், மார்ச் 31 -ம் தேதி தொடங்கும் இந்தியன் பிரீமியர் லீக்குக்கு மீண்டும் வர உள்ளதாகவும் கூறியுள்ளார்.

     

    இதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய வீரர்களை விளாசியுள்ளனர். அது எப்படி ஐபிஎல் தொடருக்கு மட்டும் அனைத்து வீரர்களும் காயத்தில் இருந்து மீண்டு விடுகிறார்கள் என்று ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    மும்பை இந்தியன்ஸ் வீரர் பும்ரா காயம் காரணமாக கடந்த டி20 உலகக் கோப்பைக்கு முன்பில் இருந்து தற்போது வரை ஓய்வில் இருக்கிறார்.

    • தீபக் சாஹருக்கு மாற்று வீரராக சென்னை அணி வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்களும் தீபக் சாஹரை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    மும்பை:

    பும்ரா உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய நிலையில் தற்போது தீபக் சாஹரும் விலகி உள்ளார்.

    டி20 உலகக்கோப்பை தொடரில் ரிசர்வ் வீரராக இருந்த தீபக் சாஹரை மெயின் அணிக்கு கொண்டு செல்ல வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்களும் தீபக் சாஹரை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தீபக் சாஹர் பேட்டிங்கும் செய்வதால், அவர் புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக இடம்பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

    இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக பயிற்சி செய்த நிலையில் தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அந்த தொடரிலிருந்து விலகிய நிலையில் வாஷிங்டன் சுந்தர் மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டார்.


    இதனையடுத்து பெங்களூருவில் நடைபெற்ற உடல் தகுதி தேர்வில் தீபக் சாஹர் தோல்வி அடைந்தார். இதனால் அவர் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    தீபக் சாஹருக்கு பதிலாக மாற்று வீரராக ஷர்துல் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பல முன்னணி பவுலர்கள் காயம் காரணமாக விலகுவது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது.

    • தீபக் சாஹர் லக்னோவில் நடந்த முதல் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    • 2-வது ஒருநாள் போட்டி நாளை ராஞ்சியில் நடைபெறுகிறது.

    லக்னோ:

    இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. டி-20 தொடர் முடிவடைந்த நிலையில் ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

    இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது மற்றும் 3-வது ஒருநாள் போட்டியில் தீபக் சாஹருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    காயம் காரணமாக லக்னோவில் நடந்த முதல் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் அக்டோபர் 9ம் தேதியும், கடைசி ஒருநாள் போட்டி அக்டோபர் 11ஆம் தேதி புதுடெல்லியிலும் நடைபெறவுள்ளது.

    • பயிற்சியின் போது காயமடைந்த அவருக்கு கணுக்காலில் வீக்கம் இருக்கிறது.
    • அவரது காயம் பயப்படும்படி இல்லை என்றாலும் சில தினங்கள் ஓய்வு எடுக்கும்படி அணியின் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

    புதுடெல்லி:

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் ஆடவில்லை. இந்த நிலையில் அவர் காயமடைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

    பயிற்சியின் போது காயமடைந்த அவருக்கு கணுக்காலில் வீக்கம் இருக்கிறது. இதனால் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான எஞ்சிய இரு ஒருநாள் போட்டிகளிலும் அவர் விளையாடமாட்டார் என்று தெரிகிறது. அவரது காயம் பயப்படும்படி இல்லை என்றாலும் சில தினங்கள் ஓய்வு எடுக்கும்படி அணியின் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

    20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கான மாற்று வீரர்கள் பட்டியலில் உள்ள சாஹர் அதற்குள் உடல்தகுதியை எட்டி விடுவார் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே இடக்கை வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி, சேத்தன் சகாரியா ஆகியோர் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கான வலை பயிற்சி பவுலர்களாக இந்திய அணியுடன் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர்.

    இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை அணியின் பிளே ஆப் போட்டியின் போது தனது நீண்ட நாள் தோழியான ஜெயா பரத்வாஜிடம் தனது காதலை வெளிப்படுத்தினார்.
    ஆக்ரா:

    இந்திய அணி மற்றும் ஐபிஎல்லில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக  திகழ்ந்து வருபவர் தீபக் சாஹர். இவர் வேகப்பந்துவீச்சாளராக இருந்தாலும், அணிக்கு தேவையான நேரத்தில் சிறப்பாக பேட் செய்து  ஆல்ரவுண்டரை போல செயல்பட்டு வருகிறார்.

    இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ.14 கோடிக்கு சிஎஸ்கே அணிக்கு தேர்வான இவர், காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை.

    இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை அணியின் பிளே ஆப் போட்டியின் போது தனது நீண்ட நாள் தோழியான ஜெயா பரத்வாஜிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். ஜெயாவும் காதலுக்கு மைதானத்திலே சம்மதம் தெரிவித்த நிலையில், இவர்கள் கடந்த 1 வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்தனர். 

    இந்நிலையில் தீபக் சஹார், தனது காதலி ஜெயாவை ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று பிரமாண்டமான முறையில் திருமணம் செய்துகொண்டனர். இதில் ராகுல் சாஹர் உள்ளிட்ட நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

    தீபக் சாஹரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியில் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் டோனி, விராட் கோலி,  மற்றும் இந்திய அணியின் பிற வீரர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×