என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "mega auction"
- அதிக பட்சமாக ரிஷப் பண்டை எல்.எஸ்.ஜி. அணி ரூ. 27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
- வைபவ் சூர்யவன்ஷி (13 வயது) ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட இளம் வீரர் ஆனார்.
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பு ஆகியவை ஏற்கனவே முடிந்து விட்டன. 10 அணிகளும் மொத்தம் 46 வீரர்களை தக்க வைத்துள்ளன.
இதனை தொடர்ந்து ஐ.பி.எல். வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் 2 நாட்கள் நடைபெற்று முடிந்தது. 2 நாட்களில் 182 வீரர்களுக்காக 639.15 கோடியை 10 அணி உரிமையாளர்கள் செலவிட்டுள்ளனர்.
அதிக பட்சமாக ரிஷப் பண்ட் (ரூ. 27 கோடி, எல்.எஸ்.ஜி.), ஷ்ரேயாஸ் அய்யர் (ரூ. 26.75 கோடி, பஞ்சாப்) மற்றும் வெங்கடேஷ் ஐயர் (ரூ. 23.75 கோடி, கே.கே.ஆர்) ஆகிய மூவரும் அதிக விலைக்கு வாங்கப்பட்டவர்கள். 13 வயதான வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட இளம் வீரர் ஆனார். ராஜஸ்தான் அணி அவரை ரூ 1.10 கோடிக்கு வாங்கியது.
சுழற்பந்து வீச்சாளர்களில் அதிக விலைக்கு யுஸ்வேந்திர சாஹல் ஏலம் போனார். ரூ. 18 கோடிக்கு பஞ்சாப் அணி அவரை ஏலத்தில் எடுத்தது.
ஏலத்தின் 2-வது நாளில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார் ரூ. 10.75 கோடிக்கு ஏலம் போனார். அவரை ஆர்சிபி தட்டி தூக்கியது.
- மீண்டும் சென்னை அணிக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
- டோனியுடனும், கெய்க்வாட் தலைமையிலும் களமிறங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ஜெட்டா:
18-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் ஜெட்டா நகரில் நேற்றும் இன்றும் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரரான சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.9.75 கோடிக்கு வாங்கியுள்ளது.
அஸ்வின் 2008 முதல் 2015 வரை ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியுள்ளார். தற்போது 9 வருடங்களுக்கு பின் மீண்டும் அஸ்வின் சென்னை அணியில் இணைந்திருப்பது ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.
Yellove Bol. ?#UngalAnbuden Ashwin ?#SuperAuction @ashwinravi99 pic.twitter.com/drAzxRBt5U
— Chennai Super Kings (@ChennaiIPL) November 24, 2024
இது குறித்து அஸ்வின் வீடியோ வெளியிட்டு கூறியதாவது:-
வாழ்க்கை ஒரு வட்டம் என சொல்வார்கள். 2008 முதல் 2015-ம் ஆண்டு வரை முதல் முறையாக மஞ்சள் ஜெர்சியை அணிந்து சென்னை அணிக்கு விளையாடியதில் இருந்து, அந்த அணிக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். சென்னை அணியில் விளையாடியது, கற்றுக்கொண்டது தான் சர்வதேச போட்டிகளில் நான் இவ்வளவு தூரம் பயணிக்கு உதவியுள்ளது. சென்னை அணிக்காக நான் கடைசியாக விளையாடி கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆகிவிட்டது. 2015-ல் கடைசியாக விளையாடியேனேன்.
எப்படி சொல்வது என தெரியவில்லை. சென்னை அணி மீண்டும் என்னை தேர்வு செய்துள்ளது. விலை, ஹோம்கமிங் என பல்வேறு விதமாக கூறினாலும், 2011-ம் ஆண்டு சண்டை போட்டு என்னை ஏலத்தில் எடுத்தது போன்று மீண்டும் எடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் சிறந்த உணர்ச்சிகள் அது.
அன்புடென் ஃபேன்ஸ் என்பதை கடந்த 9-10 ஆண்டுகளாக பார்க்கிறேன். ராஜஸ்தான் அணிக்காக விளையாடும்போதெல்லாம், சென்னை அணிக்கு எதிராக களமிறங்கும்போது கடினமாக இருந்தது. அந்த அணிக்கு விளையாடும்போது ரசிகர்கள் எனக்காக குரல் எழுப்பமாடார்கள். இந்நிலையில் மீண்டும் அணிக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. டோனியுடனும், கெய்க்வாட் தலைமையிலும் களமிறங்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
- இந்த ஆண்டு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.
- என் திறமைக்கு இப்போது அதிக மதிப்பு இருக்கும் என்று தெரியும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக ஐந்து வீரர்களை தக்க வைத்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, மதிஷா பதிரானா மற்றும் டோனி ஆகிய ஐந்து வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்துள்ளது.
இந்நிலையில் கடந்த மெகா ஏலத்திலும் அவர்கள் என்னைத் தக்கவைக்கவில்லை என சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் தீபக் சாஹர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே என்னை ஏலம் எடுக்கும் என்று நான் நம்புகிறேன். கடந்த மெகா ஏலத்திலும் அவர்கள் என்னைத் தக்கவைக்கவில்லை. ஆனால் பல முயற்சிகளை செய்து என்னைத் திரும்ப வாங்கினர். இந்த ஆண்டு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என் திறமைக்கு இப்போது அதிக மதிப்பு இருக்கும் என்று தெரியும்.
- 42 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் அவரது அடிப்படை விலையாக ரூ.1.25 கோடியாக நிர்ணயம் செய்துள்ளார்.
- இதுவரை எந்த அணியும் என்னை தொடர்புகொண்டு பேசவில்லை.
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 18-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமானது இம்மாத 24, 25 தேதிகளில் நடைபெறம் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த ஏலத்திற்கு முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் சேர்ந்து 46 வீரர்களை தக்க வைத்துள்ளன. மற்ற வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள்.
இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரரும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகருமான ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல்முறையாக ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துள்ளார். 42 வயதான அவரது அடிப்படை விலை ரூ.1.25 கோடியாக நிர்ணயம் செய்துள்ளார். ஆண்டர்சன் டி20 போட்டியில் கடைசியாக 2014-ல் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்தது தொடர்பாக சம்ஸ் ஆண்டர்சன் மனம் திறந்து பேசியுள்ளார்.
ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்த ஜேம்ஸ் ஆண்டர்சன், "தொடர்ந்து கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது. அதனால்தான் ஐபிஎல் ஏலத்தில் நான் பதிவு செய்துள்ளேன். நான் நல்ல உடல்தகுதியுடன் இருக்கிறேன் என்று நம்புகிறேன். இதுவரை எந்த அணியும் என்னை தொடர்புகொண்டு பேசவில்லை. ஆனாலும் நம்பிக்கையுடன் ஐபிஎல் ஏலத்திற்கு காத்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- ஏலத்திற்கு முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் சேர்ந்து 46 வீரர்களை தக்க வைத்துள்ளன.
- 42 வயதான அவரது அடிப்படை விலை ரூ.1.25 கோடியாக நிர்ணயம்.
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 18-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது இம்மாத 24, 25 தேதிகளில் நடைபெறம் என பிசிசிஐ நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்த ஏலத்திற்கு முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் சேர்ந்து 46 வீரர்களை தக்க வைத்துள்ளன. மற்ற வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள்.
இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரரும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகருமான ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல்முறையாக ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துள்ளார். 42 வயதான அவரது அடிப்படை விலை ரூ.1.25 கோடியாக நிர்ணயம். டி20 போட்டியில் கடைசியாக 2014-ல் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் ஏலத்திற்கு 1,165 இந்தியர், 409 வெளிநாட்டவர் என்று மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 48 இந்தியர்கள் உள்பட 320 வீரர்கள் சர்வதேச போட்டியில் ஆடியவர்கள் ஆவர்.
- ஏலத்திற்கு 1,165 இந்தியர், 409 வெளிநாட்டவர் என்று மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
- ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 25 வீரர்களை சேர்க்கலாம்.
புதுடெல்லி:
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி 10 அணிகளும் சேர்ந்து 46 வீரர்களை தக்க வைத்துள்ளன. மற்ற வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள்.
ஏலத்திற்கான இடமாக சவுதிஅரேபியாவின் ரியாத் மற்றும் ஜெட்டா ஆகிய நகரங்களை பரிசீலனை செய்த இந்திய கிரிக்கெட் வாரியம் இறுதியில் சவுதியின் துறைமுக நகரான ஜெட்டாவை தேர்வு செய்துள்ளது. இதன்படி ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களின் மெகா ஏலம் வருகிற 24 மற்றும் 25-ந்தேதி ஆகிய இரு நாட்கள் ஜெட்டாவில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.
ஏலத்திற்கு 1,165 இந்தியர், 409 வெளிநாட்டவர் என்று மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 48 இந்தியர்கள் உள்பட 320 வீரர்கள் சர்வதேச போட்டியில் ஆடியவர்கள் ஆவர்.
வெளிநாட்டு வீரர்களில் அதிகபட்சமாக தென்ஆப்பிரிக்காவில் இருந்து 91 பேரும், ஆஸ்திரேலியாவில் இருந்து 76 வீரர்களும், இங்கிலாந்தை சேர்ந்த 52 வீரர்களும் ஏலப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் இருந்து அணிகளின் விருப்பத்தின் அடிப்படையில் ஏலத்திற்கு முன்பாக இறுதிப்பட்டியல் தயாரிக்கப்படும்.
ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 25 வீரர்களை சேர்க்கலாம். தக்க வைத்துள்ள வீரர்கள் போக 204 இடங்களை ஏலத்தின் மூலம் நிரப்ப வேண்டி உள்ளது.
- ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜோஸ் பட்லரை விடுவித்தது.
- ஒரு வேளை இதுவே கடைசியாக இருக்கும் பட்சத்தில் ராஜஸ்தான் அணிக்கு நன்றி என பட்லர் கூறினார்.
ஐபிஎல் 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு அணியின் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் ராஜஸ்தான் அணி மட்டும் 6 வீரர்களை தக்க வைத்தது.
அந்த வகையில் 1. சஞ்சு சாம்சன் (ரூ. 18 கோடி), 2, ஜெய்ஸ்வால் (ரூ. 18 கோடி), 3. ரியான் பராக் (ரூ. 14 கோடி), 4. துருவ் ஜுரேல் (ரூ. 14 கோடி), 5. ஹெட்மையர் (ரூ. 11 கோடி), 6. சந்தீப் சர்மா (ரூ. 4 கோடி). ஆகியோரை தக்கவைத்துள்ளது.
இந்நிலையில் ஒரு வேளை இதுவே கடைசியாக இருக்கும் பட்சத்தில் ராஜஸ்தான் அணிக்கு நன்றி என தன்னை விடுத்தது குறித்து இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் உருக்கமாக பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒரு வேளை இதுவே கடைசியாக இருக்கும் பட்சத்தில் ராஜஸ்தான் அணிக்கு நன்றி. எனது கிரிக்கெட் பயணத்தின் சிறந்த தருணம் 2018ல் தான் தொடங்கியது. கடந்த 6 ஆண்டுகளில் இந்த பிங்க் ஜெர்ஸியில்தான் நான் நிறைய அற்புதங்களை நிகழ்த்தியுள்ளேன். என்னையும் என் குடும்பத்தையும் அணைத்து அரவணைத்துக்கொண்டதற்கு நன்றி.
- லக்னோ அணி கேஎல் ராகுலை கழற்றி விட்டது.
- டெல்லி அணி ரிஷப் பண்ட் மீது ஆர்வம் காட்டவில்லை.
ஐபிஎல் 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் ஒரு அணி தான் தக்க வைக்கும் வீரர்களின் இறுதி பட்டியலை நாளைக்குள் வெளியிட வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்திருக்கும் சூழ்நிலையில் ஒவ்வொரு அணியும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் சிஎஸ்கே நிர்வாகம் தாங்கள் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி ருதுராஜ், ஜடேஜா, துபே, பத்திரனா, டோனி ஆகியோரை தக்கவைத்துள்ளது.
லக்னோ அணி கேஎல் ராகுலை கழற்றி விட்டது. அந்த அணியில் பூரன், பிஷ்னோய், மயங்க் யாதவ், பதோனி, மோசின் கான் ஆகியோரை தக்கவைத்துள்ளது.
கொல்கத்தா அணி ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரசலை கழற்றி விட்டது. நரேன், ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி, ஹர்சித் ரானா ஆகியோரை தக்க வைத்துள்ளது.
ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மும்பை அணியில் ரோகித் சர்மா தக்கவைக்கப்பட்டுள்ளார். மேலும் பும்ரா, சூர்யகுமார் யாதவ், பாண்ட்யாவையும் மும்பை தக்கவைத்துள்ளது.
டெல்லி ரிஷப் பண்ட் மீது ஆர்வம் காட்டவில்லை. அந்த அணியில் அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஸ்டப்ஸ், அபிஷேக் போரல் ஆகியோரை தக்கவைத்துள்ளது.
ஆர்சிபி, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய அணிகள் இன்னும் தக்கவைத்த வீரர்கள் பட்டியலை வெளியிடவில்லை.
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 வீரர்களை ரீடெய்ன் செய்துள்ளது.
- ரீடெய்ன் செய்த 5 வீரர்களுக்காக சன்ரைசர்ஸ் அணி ரூ.75 கோடி செலவு செய்துள்ளது.
10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான மெகா ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடைபெற உள்ளது. மெகா ஏலத்திற்கு முன்பாக ரீடெய்ன் செய்யப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை அனைத்து அணிகளும் நாளைக்குள் வெளியிட வேண்டும் என்று பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 வீரர்களை ரீடெய்ன் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், கிளாசன், அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி என 5 வீரர்களை அந்த அணி ரீடெய்ன் செய்துள்ளது. ஒரு ரிடம் கார்டுடன் ஏலத்திற்கு அந்த அணி செல்ல உள்ளது.
ரீடெய்ன் செய்த 5 வீரர்களுக்காக சன்ரைசர்ஸ் அணி ரூ.75 கோடி செலவு செய்துள்ளது. அதில் கிளாசென் ரூ.23 கோடி, பாட் கம்மின்ஸ் 18 கோடி, அபிஷேக் சர்மா ரூ.14 கோடி, டிராவிஸ் ஹெட் ரூ. 14 கோடி, நிதிஷ் ரெட்டி ரூ. 6 கோடிக்கு ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளனர்.
இருப்பினும், ஏலத்தில் சன்ரைசர்ஸ் அணி வசம் ரூ.45 கோடி ரூபாய் மட்டுமே இருக்கும். வெறும் 45 கோடியில் 18-20 வீரர்களை வாங்க வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.
- கேகேஆர் அணி தங்களுடைய முதல் வீரராக சுனில் நரைனை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ரசல் வேறு அணிக்கு செல்ல திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
மும்பை:
ஐபிஎல் 2025-ம் ஆண்டு மெகா ஏலத்தில் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணியில் இடம் பிடிக்கப் போகிறார்கள் என்பது இன்னும் சற்று நாட்களில் தெரிந்துவிடும். வரும் அக்டோபர் 31-ம் தேதி மாலை 5 மணிக்கு ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பு எந்தெந்த அணி எந்தெந்த வீரர்களை தக்க வைக்க போகிறார்கள் என்பதை அறிவித்து விடும்.
அந்த வகையில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி மீதுதான் தற்போது அனைவரின் கவனமும் திரும்பி இருக்கிறது. கம்பீர் கொல்கத்தா அணியிலிருந்து தற்போது இந்திய அணிக்கு சென்றுள்ள நிலையில் கேகேஆர் அணியில் என்ன மாற்றம் நடக்கப்போகிறது என்று கேள்வி எழுந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் கேகேஆர் அணியில் முதல் வீரராக ரசல் தக்க வைக்கப்படுவார் என்ற செய்திகள் வெளியானது. ஆனால் அவர் வேறு அணிக்கு செல்ல திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் கேகேஆர் அணி தங்களுடைய முதல் வீரராக சுனில் நரைனை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி, ஹர்சித் ராணா ஆகியோரை தக்கவைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் மீது கேகேஆர் ஆர்வம் காட்டவில்லை. அவரை ஏலத்தில் எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
முக்கியமாக வருண் சக்கரவர்த்தி, ஹர்சித் ராணா, வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங் என நான்கு முக்கிய வீரர்களை தக்க வைத்துக்கொள்ள கேகேஆர் ஆர்வம் காட்டி வருகிறது.
- ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் சவுதி அரேபியாவில் நடக்கவுள்ளது.
- கடந்த 3 சீசன்களாக லக்னோ அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் செயல்பட்டு வந்தார்.
ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் சவுதி அரேபியாவில் நடக்கவுள்ளது. அதற்காக 10 அணிகளின் நிர்வாகங்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்த மெகா ஏலத்திற்கு முன்பு எந்தெந்த அணி எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்கிறோம் என்பதை வரும் அக்டோபர் 31-ம் தேதி மாலை 5 மணிக்குள் தெரிவிக்க வேண்டும்.
இந்நிலையில் லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 சீசன்களாக கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்டு வந்த நிலையில் அவரது ஆட்டம் அணியின் நிர்வாகத்துக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. இதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்திய அணியில் இடம் பிடித்த வேகபந்து வீச்சாளர் மயங்க் யாதவ், பூரன், ரவி பிஷ்னோய் ஆகியோரை ரீடெய்ன் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நவம்பர் 24 மற்றும் 25-ம் தேதி மெகா ஏலம் நடத்துவதில் ஒரு சிக்கல் இருக்கிறது.
- ஆஸ்திரேலிய இந்தியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறும்.
மும்பை :
ஐபிஎல் 2025-ம் ஆண்டிற்கான மெகா ஏலம் வரும் நவம்பர் மாதம் 24 மற்றும் 25-ம் தேதி சவுதி அரேபியாவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மெகா ஏலம் நடைபெறும். கடந்த ஐபிஎல் மெகா ஏலம் 2022-ம் ஆண்டு நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் நடக்க இருக்கிறது.
ஐபிஎல் மெகா ஏலத்தை சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதற்காக பிசிசிஐ குழு தற்போது சவுதி அரேபியாவுக்கு சென்று எந்த இடத்தில் நடத்துவது, சாத்தியக்கூறுகள் என்ன என்பது குறித்து ஆராய்ந்து வருகிறது.
நவம்பர் 24 மற்றும் 25-ம் தேதி மெகா ஏலம் நடத்துவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஆஸ்திரேலிய இந்தியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறும். இந்த போட்டி டிஸ்னி ஹாட் ஸ்டாரில் தான் ஒளிபரப்பு செய்யப்படும்.
அதே வேலையில் ஐபிஎல் மெகா ஏலத்தை நடத்தினால் ஆஸ்திரேலிய போட்டிகளை யாரும் பார்க்க மாட்டார்கள். இதனால் தேதியை மாற்ற டிஸ்னி நிறுவனம் கோரிக்கை விடுக்குமா என்ற சந்தேகமும் இருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டி அதிகாலை 5 மணிக்கு தொடங்கி மதியம் 12 அல்லது ஒரு மணிக்கு முடிந்துவிடும்.
இதனால் ஐபிஎல் மெகா ஏலத்தை மதியம் தொடங்கி இரவு வரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பு எந்தெந்த அணி எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்கிறோம் என்பதை வரும் அக்டோபர் 31-ம் தேதி மாலை 5 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்