என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "KKR"
- ஹர்திக் பாண்ட்யாவை குஜராத் அணி தக்கவைத்துக் கொண்டது.
- ஒருவேளை அவர் மும்பை அணிக்கு சென்றால் சுப்மன கில் கேப்டனாக செயல்படுவார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். வீரர்களை தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளவும், விடுவிக்கவும் இயலும்.
ஒவ்வொரு அணியும் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்டவர்கள் விவரத்தை நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.
10 அணிகளிலும் 174 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். 81 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில்தான் அதிகமான வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 3 அணிகள்தான் அதிகமான வீரர்களை தக்க வைத்துள்ளன.
சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ், பிரிட்டோரியஸ், அம்பதி நாயுடு, மகாலா, ஜேமிசன், பகத் வர்மா, சேனாபதி, ஆகாஷ் சிங் ஆகிய 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் டோனி விளையாடுவது உறுதியாகி உள்ளது.

குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டயா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்புவார் என்று கடந்த சில தினங்களாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இந்த அறிவிப்பின்போது குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில் வீரர்களின் பரிமாற்றம் வருகிற 12-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஹர்திக் பாண்ட்யாவை தங்களது அணிக்கு கொண்டுவர மும்பை அணி தொடர்ந்து முயற்சிக்கும் என்று தெரிகிறது. அந்த முயற்சி வெற்றி பெற்றால், குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் செயல்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீரர்கள் விடுவிப்புக்கு பிறகு 10 அணிகளிடமும் ரூ.262.95 கோடி கையிருப்பு இருக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம்தான் அதிகபட்சமாக ரூ. 40.75 கோடி கையிருப்பு உள்ளது. அந்த அணி 11 வீரர்களை விடுவித்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 வீரர்களை வெளியேற்றி உள்ளதால் ரூ. 31.4 கோடி கைவசம் இருக்கிறது.
ஐதராபாத் அணி ரூ.34 கோடியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.32.7 கோடியும், பஞ்சாப் கிங்ஸ் ரூ.29.1 கோடியும், டெல்லி கேப்பிடல்ஸ் ரூ.28.95 கோடியும், குஜராத் ரூ.23.15 கோடியும், மும்பை இந்தியன்ன்ஸ ரூ.15.25 கோடியும், ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.14.5 கோடியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ரூ.13.15 கோடியும் கையிருப்பாக வைத்துள்ளன.
- கடந்த 2022-ம் ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி அறிமுகமானது.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய கவுதம் கம்பீர் 2 முறை சாம்பியன் பட்டத்தை பெற்றுக் கொடுத்தார்.
கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. பிசிசிஐ மூலமாக நடத்தப்படும் இந்த தொடரானது ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இதில், கடந்த 2022-ம் ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி அறிமுகமானது. இந்த அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் செயல்பட்டு வந்தார். அணியில் ஆலோசகராக கவுதம் கம்பீர் இருந்தார்.
இந்த நிலையில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியிலிருந்து கம்பீர் விலகினார். அவர் கேப்டனாக இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கே ஆலோசராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய கவுதம் கம்பீர் 2 முறை சாம்பியன் பட்டத்தை பெற்றுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர், பந்து வீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல், பீல்டிங் பயிற்சியாளர் ஜாண்டி ரோட்ஸ் மற்றும் ஸ்ட்ரேடெஜி ஆலோசகராக பிசிசிஐயின் முன்னாள் தலைமை தேர்வாளர் எம்.எஸ்.கே பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தான் கம்பீர் அந்த அணியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.
- கிரிக்கெட், இந்த வார்த்தை 90-ஸ் கிட்ஸ் முதல் தற்போது வரை பலரது வாழ்க்கையில் ஒன்றிணைந்து இருக்கிறது.
- 90-ஸ் கிட்ஸ் குடும்ப வாழ்க்கையில் கிரிக்கெட் பல பிரச்சனைகளை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்.
கிரிக்கெட், இந்த வார்த்தை 90-ஸ் கிட்ஸ் முதல் தற்போது வரை பலரது வாழ்க்கையில் ஒன்றிணைந்து இருக்கிறது. கிரிக்கெட் 90-ஸ் கிட்ஸ் குடும்ப வாழ்க்கையில் பல பிரச்சனைகளை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். பலர் இன்ஸ்டா பக்கத்தில் கிரிக்கெட் விளையாட செல்வதும், மனைவியிடம் திட்டு மற்றும் அடி வாங்குவதும் போல வீடியோக்கள் காமெடியாக இருந்தாலும் சிலரது வாழ்க்கையில் உண்மையிலேயே அப்படி நடந்து கொண்டிருக்கிறது.
கிரிக்கெட் குறித்த பல சுவாரஸ்மான மற்றும் நெகிழ்ச்சியான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் தற்போது கேகேஆர் நிர்வாகம் ஒரு கிரிக்கெட் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் வீல் சேர் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன் பந்தை அடிக்க, அதை ஒரு பில்டர் டைவ் அடித்து பிடித்தது நெகிழ்ச்சியாக இருந்தது. விராட் கோலி போன்ற வீரர்கள் டைவ் அடிப்பது போல, அந்த வீரர் அப்படி செய்தது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சமூக வலைதள பக்கங்களில் கேள்விகள் கேட்கப்படும்.
- ஆறுதல் பரிசாக 100 பேருக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் 'ஜெர்சி' வழங்கப்பட உள்ளது.
சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நடத்தும் பரிசுப்போட்டியில் பங்கேற்று ஐ.பி.எல். கிரிக்கெட்டை நேரில் காண 25 இலவச டிக்கெட்களை தட்டி செல்லலாம்.
சென்னை டி.என்.பி.எல். தொடரில் அதிக முறை கோப்பை வென்ற அணி என்ற பெருமையுடன் வலம் வரும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் ஐ.பி.எல். தொடருக்காக இலவச டிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது.
அதன்படி சென்னை சேப்பாக்கத்தில் வரும் 14-ந் தேதி நடைபெறவிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 61-வது லீக் போட்டியை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு, இலவச டிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.
இதற்காக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சமூக வலைதள பக்கங்களில் கேள்விகள் கேட்கப்படும். அவற்றிற்கு பதில் அளிப்பதோடு போட்டியாளர்களுக்கு சில 'டாஸ்க்'குகளும் கொடுக்கப்படும். அவை அனைத்தையும் சிறப்பாக நிறைவு செய்த 12 வெற்றியாளர்களுக்கு 25 ஐ.பி.எல். டிக்கெட்டுகளை வெல்லலாம். மேலும், ஆறுதல் பரிசாக 100 பேருக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் 'ஜெர்சி' வழங்கப்பட உள்ளது.
- இன்று அவர் இருக்கும் இடத்தை அடைய மிகத்தீவிரமாக உழைத்திருக்கிறார்.
- இளம் வீரர்களுக்கும் சிறுவர்களுக்கும் அவர் வாழ்க்கை மிகச்சிறந்த பாடம்.
ஐபிஎல் 16-வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் டாப் 2 இடங்களில் வலுவாக இருப்பதால் அவை இரண்டும் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும். எஞ்சிய 2 இடங்களுக்கு டெல்லி கேப்பிட்டள்ஸ் மற்றும் சன்ரைசர்ஸை தவிர மற்ற அனைத்து அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த சீசனில் சில இளம் வீரர்கள் அபாரமாக விளையாடி அசத்தியுள்ளனர். திலக் வர்மா, ரிங்கு சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் ஷர்மா ஆகிய வீரர்கள் மிகச்சிறப்பாக விளையாடிவருகின்றனர். இவர்களில் அபிஷேக்கை தவிர மற்ற மூவரும் இந்திய அணியில் ஆடுமளவிற்கு வளர்ந்துவிட்டனர். இவர்கள் மூவரும் விரைவில் இந்திய அணியில் ஆடுவார்கள் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கூறிவருகின்றனர்.
இந்நிலையில் கேகேஆர் வீரர் ரிங்கு சிங் விரைவில் இந்திய அணிக்காக ஆடுவார் என்று ஹர்பஜன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசியதாவது:-
ரிங்கு சிங்கிற்கு இந்திய அணியில் மிக விரைவில் வாய்ப்பு கிடைக்கும். அதற்கு இன்னும் ரொம்ப தூரம் இல்லை. இன்று அவர் இருக்கும் இடத்தை அடைய மிகத்தீவிரமாக உழைத்திருக்கிறார்.
அவர் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கைக்குத்தான் முழு கிரெடிட். இளம் வீரர்களுக்கும் சிறுவர்களுக்கும் ரிங்கு சிங்கின் வாழ்க்கை மிகச்சிறந்த பாடம்.
என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
- கொல்கத்தா அணியின் சுழலில் சிக்கி பெங்களூர் 123 மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
- 81 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2023 16-வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 9-வது போட்டியில் கொல்கத்தா நைட் டைர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டுப்ளெசிஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 204 ரன்களை குவித்தது. இதனையடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி ஆடியது.
கொல்கத்தா அணியின் சுழலில் சிக்கி பெங்களூர் 123 மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் 81 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் மற்றும் சுயாஷ் ஷர்மா ஆகியோ இணைந்து 9 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன்னதாக 2012-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக 8 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.
இந்த சாதனையைத் தான் வருண் சக்கரவர்த்தி (4 விக்கெட்டு), சுயாஷ் ஷர்மா (3 விக்கெட்டு), சுனில் நரைன் (2 விக்கெட்டு) ஆகியோர் சேர்ந்து மொத்தமாக 9 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 9 விக்கெட்டுகள் (2023)
சென்னை சூப்பர் கிங்ஸ் - 8 விக்கெட்டுகள் (2012)
சென்னை சூப்பர் கிங்ஸ் - 8 விக்கெட்டுகள் (2019)
சென்னை சூப்பர் கிங்ஸ் - 8 விக்கெட்டுகள் (2019)
- ரோகித் சர்மா தினேஷ் கார்த்திக் 14 முறை டக் அவுட் ஆகியுள்ளனர்.
- பியூஷ் சாவ்லா, ஹர்பஜன் சிங், பார்தீவ் படேல், ரகானே, அம்பதி ராயுடு ஆகியோர் 13 முறையும் டக் அவுட் ஆகியுள்ளனர்.
ஐபிஎல் 2023:
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டம் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இதில் பெங்களூர் அணியும் கொல்கத்தா அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கத்தில் சரிவை சந்தித்தாலும் கடைசி அதிரடியாக விளையாடி 204 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி 123 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

இந்த போட்டியில் டக் அவுட் ஆனதன் மூலம் கொல்கத்தா வீரர் மந்தீப் சிங் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களாக இருந்த மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக்கை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை மந்தீப் சிங் பிடித்துள்ளார்.
15 முறை மந்தீப் சிங் டக் அவுட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மா தினேஷ் கார்த்திக் 14 முறையும் பியூஷ் சாவ்லா, ஹர்பஜன் சிங், பார்தீவ் படேல், ரகானே, அம்பதி ராயுடு ஆகியோர் 13 முறையும் டக் அவுட் ஆகியுள்ளனர்.
- இங்கிலாந்தின் அதிரடி தொடக்க வீரரான அவர் 2019 உலகக்கோப்பை வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
- ஏப்ரல் 5-ம் தேதியன்று பெங்களூருவுக்கு எதிரான தன்னுடைய 2-வது போட்டியில் கொல்கத்தா மோதுகிறது.
ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2 கோப்பைகளை வென்று 3-வது வெற்றிகரமான அணியாக திகழும் கொல்கத்தா 2014-க்குப்பின் 3-வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் இத்தொடரில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் காயத்தால் வெளியேறியதால் நிதிஷ் ராணா புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
அவரது தலைமையில் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா தோற்றது. ஏப்ரல் 5-ம் தேதியன்று நடைபெறும் பெங்களூருவுக்கு எதிரான தன்னுடைய 2-வது போட்டியில் வெற்றி பாதைக்கு திருப்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தால் விலகிய நிலையில் அவருக்கான மாற்று வீரரை கொல்கத்தா அணி நிர்வாகம் அறிவிக்காமல் இருந்து வந்த நிலையில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் வாங்கப்பட்டுள்ளதாக கொல்கத்தா அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இங்கிலாந்தின் அதிரடி தொடக்க வீரரான அவர் 2019 உலகக்கோப்பை வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதுவரை 64 போட்டிகளில் 1522 ரன்களை 137.62 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வருகிறார்.
மேலும் ஐபிஎல் தொடரில் 2017, 2018 ஆகிய சீசன்களில் டெல்லி அணிக்காக விளையாடியிருந்த அவர் கடைசியாக 2021 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார்.
- கேகேஆர் அணிக்காக விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்.
- 20 லட்சம் என்கிற அடிப்படை விலையில் கலந்துகொண்ட ஜெகதீசனை கொல்கத்தா அணி 90 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறயிருக்கும் 16-ஆவது ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் மினி ஏலமானது கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி கொச்சியில் நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் பல வெளிநாட்டு வீரர்கள் கோடி கணக்கில் ஏலத்தில் சென்றனர். அதேவேளையில் இந்திய வீரர்களுக்கும் இந்த ஏலத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. 400-க்கும் மேற்பட்ட வீரர்களில் இருந்து 80-க்கும் மேற்பட்ட வீரர்கள் மட்டுமே இந்த ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.
அந்தவகையில் இந்தியாவில் தற்போது ரஞ்சி தொடரானது நடைபெற்று வரும் இவ்வேளையில் உள்ளூர் அணிகளை சேர்ந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கவும் அனைத்து அணிகளும் ஆர்வம் காட்டின. அந்தவகையில் அண்மையில் நடைபெற்று முடிந்த விஜய் ஹசாரே தொடரில் 5 சதங்களை விளாசிய தமிழக வீரர் ஜெகதீசன் எந்த அணிக்காக தேர்வு செய்யப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது. இந்நிலையில் இந்த ஏலத்தில் 20 லட்சம் என்கிற அடிப்படை விலையில் கலந்துகொண்ட ஜெகதீசனை கொல்கத்தா அணி 90 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.
எதிர்வரும் சீசனில் விளையாடயிருப்பது குறித்து பேசிய தமிழக வீரர் நாராயணன் ஜெகதீசன் கூறுகையில்:-
ஒவ்வொரு வீரருக்கும் ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். அந்தவகையில் நானும் அடுத்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக நிறைய போட்டிகளில் விளையாடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
சென்னை அணியில் நான் இருந்த வரை டோனியிடம் இருந்து நிறைய விசயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன். நிச்சயம் அவற்றை எதிர்வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் வெளிப்படுத்தி உங்கள் அனைவரையும் மகிழ்விப்பேன் என்று தெரிவித்துள்ளார்.