என் மலர்
நீங்கள் தேடியது "முஸ்தபிசுர் ரகுமான்"
- முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்துள்ளது.
- ஐ.பி.எல். போட்டியில் முஷ்தபிசுர் விளையாட இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது
ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் 7 வங்கதேச வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். இதில் வேகப்பந்து வீரர் முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருவதால் ஐ.பி.எல். போட்டியில் முஷ்தபிசுர் ரகுமான் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பல்வேறு இந்து அமைப்புகள் வங்கதேச வீரர் ஐ.பி.எல்.லில் விளையாட கூடாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன.
வங்கதேச கிரிக்கெட் வீரரை ஒப்பந்தம் செய்த அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கானை தேச துரோகி என்று பா.ஜ.க, இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. அவரை அணியில் இருந்து விலக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன.
இந்நிலையில், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பிசிசிஐ கோரியது.
இந்த நிலையில் பிசிசிஐ-யின் உத்தரவை ஏற்று, முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்துள்ளது.
IPL-ல் இருந்து முஸ்தபிசுர் நீக்கப்பட்ட நிலையில், ஆவேசமாக பேசிய வங்கதேச விளையாட்டு அமைச்சக ஆலோசகர் ஆசிப் நஸ்ருல், "டி20 உலக கோப்பையில் வங்கதேசத்தின் போட்டிகள் அனைத்தையும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும். IPLல் ஒப்பந்தம் போட்ட பிறகும், வங்கதேச வீரர் இந்தியாவில் விளையாட முடியாதென்றால், எப்படி வங்கதேச வீரர்களால் பாதுகாப்பாக உணர முடியும்?
IPL போட்டிகளை வங்கதேசத்தில் ஒளிபரப்ப தடை செய்ய வேண்டும் என ஆலோசனை கூறியுள்ளேன். மேலும் எந்த சூழ்நிலையிலும் வங்கதேசத்தையோ எங்கள் வீரர்களையோ அவமதிப்பதை பொறுத்துக் கொள்ள மாட்டோம். அடிமை மனநிலையில் இருந்து எப்போதோ விடுபட்டு விட்டோம்" என்று தெரிவித்தார்.
- முஷ்தபிசுர் ரகுமான் ஐ.பி.எல். போட்டியில் விளையாட இந்துக்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
- முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்துள்ளது.
ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் 7 வங்கதேச வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். இதில் வேகப்பந்து வீரர் முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருவதால் ஐ.பி.எல். போட்டியில் முஷ்தபிசுர் ரகுமான் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பல்வேறு இந்து அமைப்புகள் வங்கதேச வீரர் ஐ.பி.எல்.லில் விளையாட கூடாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன.
வங்கதேச கிரிக்கெட் வீரரை ஒப்பந்தம் செய்த அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கானை தேச துரோகி என்று பா.ஜ.க, இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. அவரை அணியில் இருந்து விலக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன.
இந்நிலையில், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பிசிசிஐ கோரியது. இந்த நிலையில் பிசிசிஐ-யின் உத்தரவை ஏற்று, முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து தனியார் ஊடகத்தில் பேசிய முஸ்தபிசுர் ரகுமான், "என்னை அணியில் இருந்து விடுவித்துவிட்டால், என்னால் வேறு என்ன செய்ய முடியும்?" என்று விரக்தியுடன் தெரிவித்தார்.
முஷ்தபிசுர் ரகுமான் ஐ.பி.எல். போட்டியில் 60 ஆட்டத்தில் 65 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். அவர் கடந்த காலங்களில் ஐதராபாத், மும்பை, ராஜஸ்தான், சென்னை அணிகளுக்காக ஆடி இருந்தார்.
- வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதால் இரு நாடுகளுக்கு இடையில் பதற்றம்.
- முஷ்தபிசுர் ரகுமான் ஐ.பி.எல். போட்டியில் விளையாட இந்துக்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் 7 வங்கதேச வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். இதில் வேகப்பந்து வீரர் முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருவதால் ஐ.பி.எல். போட்டியில் முஷ்தபிசுர் ரகுமான் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பல்வேறு இந்து அமைப்புகள் வங்கதேச வீரர் ஐ.பி.எல்.லில் விளையாட கூடாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
வங்கதேச கிரிக்கெட் வீரரை ஒப்பந்தம் செய்த அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கானை தேச துரோகி என்று பா.ஜ.க, இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அவரை அணியில் இருந்து விலக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன.
இந்நிலையில், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பிசிசிஐ கோரியுள்ளது.
இது தொடர்பாக பேசிய BCCI செயலாளர் தேவஜித் சைகியா, "சமீபத்தில் நாடு முழுவதும் நடந்து வரும் சம்பவங்கள் காரணமாக, வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமானை விடுவிக்குமாறு கே.கே.ஆர். அணிக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவருக்கு பதிலாக மாற்று வீரர் யாரையாவது கேட்டால், அதை அனுமதிக்கும்" என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் பிசிசிஐ-யின் உத்தரவை ஏற்று, முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்துள்ளது.
முஷ்தபிசுர் ரகுமான் ஐ.பி.எல். போட்டியில் 60 ஆட்டத்தில் 65 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். அவர் கடந்த காலங்களில் ஐதராபாத், மும்பை, ராஜஸ்தான், சென்னை அணிகளுக்காக ஆடி இருந்தார்.
- 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது.
- அன்கேப்டு பிளேயர்கள் 2 பேரை 14.20 கோடிக்கு சி.எஸ்.கே. அணி வாங்கியது.
அபுதாபி:
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது. 10 அணிகளும் மொத்தமாக 173 வீரர்களை தக்க வைத்துள்ளனர்.
இன்று நடைபெறும் ஐ.பி.எல். ஏலத்தில் 350 வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.
இந்நிலையில், வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.20 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
- வங்காளதேசத்தின் முஸ்தபிசுர் ரகுமானை 2 கோடி ரூபாய்க்கு சென்னை அணி ஏலம் எடுத்தது.
- சென்னை அணி ரச்சின் ரவீந்திராவை 1.80 கோடிக்கும், ஷர்துல் தாக்குரை 4 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுத்துள்ளது.
துபாய்:
17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், வங்காளதேச அணியின் முஸ்தபிசுர் ரகுமானை 2 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.
சமீர் ரிஸ்வியை 8.40 கோடிக்கும், ஷர்துல் தாக்குரை 4 கோடிக்கும், ரச்சின் ரவீந்திராவை 1.80 கோடி ரூபாய்க்கும் சென்னை அணி ஏலம் எடுத்துள்ளது.
நடப்பு தொடரில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போனார்கள்.
- வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியின்போது இலங்கை வீரர் பத்திரனாவுக்கு காயம் ஏற்பட்டது.
- டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடிய பத்திரனா இல்லாதது சென்னை அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
சி.எஸ்.கே வீரர் பத்திரனாவுக்கு தொடை எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதால் வரும் ஐ.பி.எல் தொடரில் சில போட்டிகளில் அவர் பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியின்போது இலங்கை வீரர் பத்திரனாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் 4 முதல் 5 வாரங்கள் வரை அவர் ஓய்வு எடுக்க வேண்டுமென அறிவித்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடிய பத்திரனா இல்லாதது சென்னை அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. பத்திரனாவுக்கு பதிலாக, வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை விளையாட வைக்கலாம் என்று சென்னை அணி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 17 வயது வேகப்பந்து வீச்சாளர் குகதாஸ் மதுலன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நெட் பவுலராக இணைந்துள்ளார்
மலிங்காவைப் போன்ற பவுலிங் ஆக்ஷனைக் கொண்ட மதுலன் போட்டி ஒன்றில் வீசிய யார்க்கர் பந்தைப் பார்த்து, அவரை நெட் பவுலராக சேர்க்க சி.எஸ்.கேவிடம் டோனி பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.