என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Matheesha Pathirana"

    • சி.எஸ்.கே. அணியில் இருந்து கான்வே, ரச்சின் ரவீந்திரா கழற்றி விடப்பட்டுள்ளனர்.
    • மேலும் பல வீரர்களை விடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான மினி ஏலம் டிசம்பர் 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது.

    இதற்காக தக்க வைக்கப்படும் வீரர்கள், வெளியேற்றப்படும் வீரர்கள் மற்றும் பரிமாற்ற முறை வீரர்கள் விவரத்தை இன்று மாலைக்குள் வெளியிட கெடு விதிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதே போல சி.எஸ்.கே. அணியில் இருந்து ஜடேஜா, சாம்கரண் ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இடம் மாறியுள்ளனர். இதற்கு இரு அணி நிர்வாகிகளும் ஒப்புக் கொண்டனர். இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் இன்று காலை வெளியானது.

    10 அணிகளும் 32 வீரர்களை விடுவிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில் சி.எஸ்.கே. அணியில் இருந்து கான்வே, ரச்சின் ரவீந்திரா கழற்றி விடப்பட்டுள்ளனர். இவர்கள் அடுத்த மாதம் நடைபெறும் மினி ஏலத்தில் பங்குபெற உள்ளனர்.

    மேலும் விஜய் சங்கர், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, ஓவர்டன், குர்ஜப்னீத் சிங், முகேஷ் சவுத்ரி, கமலேஷ் நாகா் கோட்டி ஆகியோரையும் விடுவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    குறிப்பாக பத்திரனாவை விடுவிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை மினி ஏலத்தில் மிகவும் மலிவான விலையில் திரும்பப் பெற அவர்கள் முயற்சிப்பார்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

    • இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
    • பாகிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடரும் நடைபெற உள்ளது.

    கொழும்பு:

    இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் முத்தரப்பு டி20 தொடரில்

    விளையாடுகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடர் மற்றும் முத்தரப்பு டி20 தொடர்களுக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒருநாள் தொடரில் 5 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுசங்கா நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக எசான் மலிங்கா அணியில் இணைந்துள்ளார்.

    மிலான் ரத்நாயக, நுவனிது பெர்னாண்டோ, துனித் வெல்லாலகே மற்றும் நிசான மதுஷ்கா ஆகியோருக்கு பதிலாக கமில் மிஷ்ரா, லஹிரு உதார, பிரமோத் மதுசான் மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிசங்கா, லஹிரு உதார, கமில் மிஷ்ரா, குசால் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, பவன் ரத்நாயக, வனிந்து ஹஸரங்க, மஹீஸ் தீக்ஷன, ஜெப்ரி வெண்டர்சே, துஷ்மந்த சமீர, அசித பெர்னாண்டோ, பிரமோத் மதுசான், எசான் மலிங்கா

    இதேபோல், பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக நடைபெறவுள்ள முத்தரப்பு டி 20 தொடருக்கான இலங்கை அணியில் முக்கிய சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    சுழற்பந்து வீச்சாளரான மதீஷ பதிரன அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக அசித பெர்னாண்டோ அணிக்கு திரும்பியுள்ளார்.

    சரித் அசலங்க (கேப்டன்), பதும நிசங்கா, குசால் மெண்டிஸ், குசால் பெரேரா, தசுன் ஷனகா, கமில் மிஷ்ர, கமிந்து மெண்டிஸ், பானுக ராஜபக்ஷ, ஜனித் லியனகே, வனிந்து ஹஸரங்க, மஹீஸ் தீக்ஷன, துஷான் ஹேமந்த, துஷ்மந்த சமீர, நுவான் துஷார, அசித பெர்னாண்டோ, எசான் மாலிங்க

    இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் இம்மாதம் 11-ம் தேதி தொடங்குகிறது. முத்தரப்பு டி20 தொடர் 17-ம் தேதி ஆரம்பிக்க உள்ளது.

    • சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றனர்.
    • புள்ளிப்பட்டியலில் 8 மற்றும் 9-வது இடங்களில் இந்த இரண்டு அணிகளும் இடம் பெற்றுள்ளனர்.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சாம்பியன் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றனர். இதனால் புள்ளிப்பட்டியலில் 8 மற்றும் 9-வது இடங்களில் இந்த இரண்டு அணிகளும் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் இந்த இரு அணிகளில் இடம் பிடித்த வேகப்பந்து வீச்சாளர்களான டிரெண்ட் போல்ட் (மும்பை), பத்திரனா (சென்னை) ஆகியோர் பந்து வீச்சில் அரிதான ஒரு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.

    அந்த வகையில் அவர்கள் இருவரும் 4 ஓவர்கள் பந்து வீசி 50-க்கும் கூடுதலான ரன்களை வாரி வழங்கியுள்ளனர். போல்ட் ஆர்சிபி அணிக்கு எதிராக 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 57 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார்.

    அதேபோல சென்னை வீரர் பத்திரனா 4 ஓவர்களில் ஒரு விக்கெட்டும் எடுக்காமல் 52 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். இந்த இரு பந்துவீச்சாளர்களும் இப்படி ரன்களை வாரி வழங்குவது அரிதான சம்பவமாக பார்க்கப்படுகிறது. 

    • நான் தோனியை என் கிரிக்கெட் தந்தையாக கருதுகிறேன்.
    • நான் சிஎஸ்கேவில் இருக்கும்போது அவர் எனக்கு ஆதரவு அளித்துள்ளார்.

    இலங்கை வீரரான மதீஷா பத்திரனா, ஒரு இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். அவரது தனித்துவமான பந்துவீச்சு ஸ்டைல் காரணமாக "பேபி மலிங்கா" என்று அழைக்கப்படுகிறார். தோனி, சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனாக இருந்து தற்போது ஒரு வீரராக விளையாடி வருகிறார். அவர் பல இளம் வீரர்களை ஊக்குவித்து வருகிறார்.

    அந்த வகையில் பத்திரனாவை ஊக்குவித்து வழிநடத்தியவர். அவர் சிஎஸ்கே அணிக்கு அறிமுகமானதில் இருந்து அவருக்கு அதிகமான ஆதரவை தோனி கொடுத்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நான் தோனியை என் கிரிக்கெட் அப்பாவாக நினைக்கிறேன் என சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தோனி என் தந்தையைப் போன்றவர். ஏனென்றால் நான் சிஎஸ்கேவில் இருக்கும்போது அவர் எனக்கு அளிக்கும் ஆதரவு, வழிகாட்டுதல் எல்லாம் என் தந்தை என் வீட்டுல செஞ்சதைப் போலவே இருக்கு. அதனாலதான் நான் தோனியை என் கிரிக்கெட் தந்தையாக கருதுகிறேன்.

    என்று பத்திரனா கூறினார்.

    • முதல் 3 ஓவரிலேயே 7 வைடு வீசினார்.
    • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பந்து வீசி வரும் பதிரனா 4 ஓவர்களை வீசி 33 ரன்களை விட்டுக்கொடுத்து உள்ளார். ர்

    ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங் செய்த இலங்கை அணி 50 முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது.

    இந்த போட்டியில் இலங்கை அணியில் இடம் பிடித்திருக்கும் பதிரனா ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு இலங்கை டி20 அணியில் இடம்பிடித்தார். தற்போது சிஎஸ்கேவில் டெத் ஓவரில் கலக்கிய பதிரானா ஒரு நாள் தொடரில் அறிமுகமாகிறார்.

    இந்நிலையில் இந்த போட்டியில் பந்து வீசி வரும் பதிரனா 4 ஓவர்களை வீசி 33 ரன்களை விட்டுக்கொடுத்து உள்ளார். முதல் 3 ஓவரிலேயே 7 வைடு வீசினார். அதில் வைடு பந்தில் ஒரு பவுண்டரி சென்றது குறிப்பிடத்தக்கது.

    பதிரனா சென்னை அணிக்காக சிறப்பாக வீசினார். அதனால் சென்னை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதனையடுத்து இவரின் அறிமுக ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என கூறலாம். இந்த போட்டியை பார்த்த ரசிகர்கள் சோகமான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் பலர் இன்னும் 6 ஓவர்கள் உள்ளது. அதில் மீண்டும் எழுவார் எனவும் சிலர் கூறி வருகின்றனர்.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
    • இந்த போட்டியில் இலங்கை வேகப்பந்து வீச்சாளரான பதிரனா இடம் பெறவில்லை.

    லக்னோ:

    13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    இந்த தொடரில் இன்று நடைபெற உள்ள 14-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன. இரு அணிகளுமே இந்த உலகக்கோப்பை தொடரில் வெற்றிக்கணக்கை தொடங்கவில்லை. எனவே முதல் வெற்றியை பெற இரு அணிகளுமே கடுமையாக போராட உள்ளன. இதனால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் இலங்கை வேகப்பந்து வீச்சாளரான பதிரனா இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக லஹிரு குமார இடம் பெற்றுள்ளார். முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய பதிரனா முதல் போட்டியில் 95 ரன்களும் 2-வது போட்டியில் 90 ரன்களையும் விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு;-

    ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலி, கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

    இலங்கை: பாதும் நிசாங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (கேப்டன்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, கருணாரத்னே, துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா, லஹிரு குமார, தில்ஷான் மதுஷங்க.

    • வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியின்போது இலங்கை வீரர் பத்திரனாவுக்கு காயம் ஏற்பட்டது.
    • டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடிய பத்திரனா இல்லாதது சென்னை அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

    சி.எஸ்.கே வீரர் பத்திரனாவுக்கு தொடை எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதால் வரும் ஐ.பி.எல் தொடரில் சில போட்டிகளில் அவர் பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.

    வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியின்போது இலங்கை வீரர் பத்திரனாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் 4 முதல் 5 வாரங்கள் வரை அவர் ஓய்வு எடுக்க வேண்டுமென அறிவித்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடிய பத்திரனா இல்லாதது சென்னை அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. பத்திரனாவுக்கு பதிலாக, வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை விளையாட வைக்கலாம் என்று சென்னை அணி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

    இந்நிலையில், இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 17 வயது வேகப்பந்து வீச்சாளர் குகதாஸ் மதுலன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நெட் பவுலராக இணைந்துள்ளார்

    மலிங்காவைப் போன்ற பவுலிங் ஆக்ஷனைக் கொண்ட மதுலன் போட்டி ஒன்றில் வீசிய யார்க்கர் பந்தைப் பார்த்து, அவரை நெட் பவுலராக சேர்க்க சி.எஸ்.கேவிடம் டோனி பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை சூப்பர் கிங்ஸ் 5 வெற்றி, 5 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது
    • கடந்த ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய பத்திரனா 19 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

    நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 5 வெற்றி, 5 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 11-வது போட்டியில் பஞ்சாப் கிங்சை நாளை (5-ந் தேதி) மீண்டும் சந்திக்கிறது. இந்த ஆட்டம் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவில் மாலை 3.30 மணிக்கு நடக்கிறது.

    இந்நிலையில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி தம்மை மற்றொரு அப்பாவைப் போல பார்த்துக் கொள்வதாக பத்திரனா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

    பத்திரனாவின் வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில்,

    "என்னுடைய அப்பாவுக்கு பின் கிரிக்கெட் வாழ்க்கையில் டோனி பெரும்பாலும் என் அப்பாவின் வேலையை செய்கிறார். எப்போதும் என் மீது அக்கறையை காட்டும் அவர் நான் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய சில ஆலோசனைகளை கொடுக்கிறார். எனது வீட்டில் இருக்கும் போது கிட்டத்தட்ட எனது அப்பா காட்டும் அக்கறையை அவர் இங்கே காட்டுகிறார். அதுவே போதும் என்று நினைக்கிறேன்.

    களத்திலும் களத்திற்கு வெளியேயும் அவர் நிறைய விஷயங்களை என்னிடம் சொல்ல மாட்டார். சிறிய விஷயங்களை மட்டுமே சொல்வார். ஆனால் அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். அது எனக்கு நிறைய தன்னம்பிக்கையையும் கொடுக்கும்" என்று அவர் கூறினார்.

    கடந்த ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய பத்திரனா 19 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இந்த சீசனில் இதுவரை 13 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கையை சேர்ந்த இளம் வீரர் மதிஷா பதிரனா வேகப்பந்து வீச்சு துறையில் நம்பிக்கை அளித்து வந்தார்.
    • நடப்பு சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    சென்னை:

    இந்தியாவில் நடைபெற்று வரும் 17-வது ஐ.பி.எல் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 போட்டிகளில் 5 வெற்றியும், 5 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது.

    அந்த அணிக்கு இலங்கையை சேர்ந்த இளம் வீரர் மதிஷா பதிரனா வேகப்பந்து வீச்சு துறையில் நம்பிக்கை அளித்து வந்தார். நடப்பு சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    இதனிடையே காயம் காரணமாக சில போட்டிகளை தவறவிட்ட அவர், சென்னை அணிக்கு கடைசியாக நடைபெற்ற பஞ்சாப்புக்கு எதிரான போட்டியிலும் களமிறங்கவில்லை.

    இந்நிலையில் தொடை தசையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள இலங்கை திரும்பி உள்ளார். இதனால் இவர் நடப்பு சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • முதல் ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக விளையாடிய பதிரனா 19 விக்கெட் எடுத்தார்.
    • சி.எஸ்.கே. அணிக்காக நான் விளையாடியது கடவுள் எனக்கு அளித்த பரிசு என்றார் பதிரனா.

    கொழும்பு:

    இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான டி20 அணியும், ரோகித் சர்மா தலைமையிலான ஒருநாள் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை டி20 அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளரான மதிஷா பதிரனா இடம்பெற்றுள்ளார்.

    பதிரனா 2022-ம் ஆண்டில் அறிமுகமான முதல் ஐ.பி.எல். தொடரில் சிஎஸ்கே அணிக்காக 19 விக்கெட் எடுத்து அசத்தியிருந்தார்.

    இந்நிலையில், இலங்கை பந்துவீச்சாளர் பதிரனா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    என் 19 வயது வரையிலும் எந்த இலங்கை கிரிக்கெட் அணியிலும் நான் இடம்பெறவில்லை. ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்வானதைத் தொடர்ந்து, இலங்கையின் பிரதான அணிக்குத் தேர்வாகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.

    சி.எஸ்.கே. அணிக்காக நான் விளையாடியது கடவுள் எனக்கு அளித்த பரிசு. சி.எஸ்.கே. அணிக்காக விளையாடும் வரை பலருக்கு என்னை தெரியாது. ஓய்வறையில் டோனியிடம் விஷயங்களைப் பகிர்ந்து கொண்டது என்னைப் போன்ற இளம் வீரர்களுக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று.

    நான் அடுத்த ஆண்டு சி.எஸ்.கே. அணியில் இருப்பேனா என தெரியாது. ஆனால் 2025 ஐ.பி.எல். தொடரை சி.எஸ்.கே. அணி நிச்சயம் வெல்லும் என தெரிவித்தார்.

    ×