என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
எனது கிரிக்கெட் வாழ்க்கையில் டோனி தான் என் அப்பா- சிஎஸ்கே வீரர் பத்திரனா நெகிழ்ச்சி
- சென்னை சூப்பர் கிங்ஸ் 5 வெற்றி, 5 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது
- கடந்த ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய பத்திரனா 19 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்
17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.
நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 5 வெற்றி, 5 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 11-வது போட்டியில் பஞ்சாப் கிங்சை நாளை (5-ந் தேதி) மீண்டும் சந்திக்கிறது. இந்த ஆட்டம் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவில் மாலை 3.30 மணிக்கு நடக்கிறது.
இந்நிலையில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி தம்மை மற்றொரு அப்பாவைப் போல பார்த்துக் கொள்வதாக பத்திரனா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
பத்திரனாவின் வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில்,
"என்னுடைய அப்பாவுக்கு பின் கிரிக்கெட் வாழ்க்கையில் டோனி பெரும்பாலும் என் அப்பாவின் வேலையை செய்கிறார். எப்போதும் என் மீது அக்கறையை காட்டும் அவர் நான் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய சில ஆலோசனைகளை கொடுக்கிறார். எனது வீட்டில் இருக்கும் போது கிட்டத்தட்ட எனது அப்பா காட்டும் அக்கறையை அவர் இங்கே காட்டுகிறார். அதுவே போதும் என்று நினைக்கிறேன்.
களத்திலும் களத்திற்கு வெளியேயும் அவர் நிறைய விஷயங்களை என்னிடம் சொல்ல மாட்டார். சிறிய விஷயங்களை மட்டுமே சொல்வார். ஆனால் அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். அது எனக்கு நிறைய தன்னம்பிக்கையையும் கொடுக்கும்" என்று அவர் கூறினார்.
கடந்த ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய பத்திரனா 19 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இந்த சீசனில் இதுவரை 13 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்