என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

Rare Off IPL: பந்து வீச்சில் அரை சதம் அடித்த போல்ட்- பத்திரனா
- சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றனர்.
- புள்ளிப்பட்டியலில் 8 மற்றும் 9-வது இடங்களில் இந்த இரண்டு அணிகளும் இடம் பெற்றுள்ளனர்.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சாம்பியன் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றனர். இதனால் புள்ளிப்பட்டியலில் 8 மற்றும் 9-வது இடங்களில் இந்த இரண்டு அணிகளும் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இந்த இரு அணிகளில் இடம் பிடித்த வேகப்பந்து வீச்சாளர்களான டிரெண்ட் போல்ட் (மும்பை), பத்திரனா (சென்னை) ஆகியோர் பந்து வீச்சில் அரிதான ஒரு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.
அந்த வகையில் அவர்கள் இருவரும் 4 ஓவர்கள் பந்து வீசி 50-க்கும் கூடுதலான ரன்களை வாரி வழங்கியுள்ளனர். போல்ட் ஆர்சிபி அணிக்கு எதிராக 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 57 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார்.
அதேபோல சென்னை வீரர் பத்திரனா 4 ஓவர்களில் ஒரு விக்கெட்டும் எடுக்காமல் 52 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். இந்த இரு பந்துவீச்சாளர்களும் இப்படி ரன்களை வாரி வழங்குவது அரிதான சம்பவமாக பார்க்கப்படுகிறது.






