என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதிஷா பதிரனா"

    • ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீனை ரூ.25.20 கோடிக்கு கொல்கத்தா அணி எடுத்துள்ளது.
    • இலங்கையின் மதீஷா பதிரனாவை ரூ.18 கோடிக்கு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் எடுத்தது.

    அபுதாபி:

    19-வது இந்தியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி வீரர்கள் ஏலம் அபுதாபியில் இன்று நடைபெற்றது.

    ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன், இலங்கையின் பதிரனா, இந்தியாவின் ரவி பிஷ்னோய், வெங்கடேஷ் அய்யர் உள்ளிட்டோர் அதிக விலை போவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த ஏலத்தில் அதிகபட்சமாக விலை போன டாப் 5 வீரர்கள் விவரம் வருமாறு:

    கேமரூன் கிரீன்: ரூ.25.20 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    மதிஷா பதிரனா: ரூ.18 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    லியாம் லிவிங்ஸ்டன்: ரூ.13 கோடி- சன் ரைசர்ஸ் ஐதராபாத்

    பிரசாந்த் விர்: ரூ.12.40 கோடி -சென்னை சூப்பர் கிங்ஸ்

    கார்த்திக் சர்மா: ரூ.12.40 கோடி -சென்னை சூப்பர் கிங்ஸ்

    • 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது.
    • வெங்கடேஷ் அய்யரை 7 கோடிக்கு வாங்கியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.

    அபுதாபி:

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது. 10 அணிகளும் மொத்தமாக 173 வீரர்களை தக்க வைத்துள்ளனர்.

    இன்று நடைபெறும் ஐ.பி.எல். ஏலத்தில் 350 வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.

    இந்நிலையில், இலங்கையைச் சேர்ந்த மதீஷா பதிரனாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.18 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

    ஏற்கனவே கேமரூன் கிரீனை ரூ.25.20 கோடிக்கு கே.கே.ஆர். வாங்கியது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கையை சேர்ந்த இளம் வீரர் மதிஷா பதிரனா வேகப்பந்து வீச்சு துறையில் நம்பிக்கை அளித்து வந்தார்.
    • நடப்பு சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    சென்னை:

    இந்தியாவில் நடைபெற்று வரும் 17-வது ஐ.பி.எல் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 போட்டிகளில் 5 வெற்றியும், 5 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது.

    அந்த அணிக்கு இலங்கையை சேர்ந்த இளம் வீரர் மதிஷா பதிரனா வேகப்பந்து வீச்சு துறையில் நம்பிக்கை அளித்து வந்தார். நடப்பு சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    இதனிடையே காயம் காரணமாக சில போட்டிகளை தவறவிட்ட அவர், சென்னை அணிக்கு கடைசியாக நடைபெற்ற பஞ்சாப்புக்கு எதிரான போட்டியிலும் களமிறங்கவில்லை.

    இந்நிலையில் தொடை தசையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள இலங்கை திரும்பி உள்ளார். இதனால் இவர் நடப்பு சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    ×