என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

என் கிரிக்கெட்டின் தந்தை- தோனி குறித்து பத்திரனா நெகிழ்ச்சி
- நான் தோனியை என் கிரிக்கெட் தந்தையாக கருதுகிறேன்.
- நான் சிஎஸ்கேவில் இருக்கும்போது அவர் எனக்கு ஆதரவு அளித்துள்ளார்.
இலங்கை வீரரான மதீஷா பத்திரனா, ஒரு இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். அவரது தனித்துவமான பந்துவீச்சு ஸ்டைல் காரணமாக "பேபி மலிங்கா" என்று அழைக்கப்படுகிறார். தோனி, சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனாக இருந்து தற்போது ஒரு வீரராக விளையாடி வருகிறார். அவர் பல இளம் வீரர்களை ஊக்குவித்து வருகிறார்.
அந்த வகையில் பத்திரனாவை ஊக்குவித்து வழிநடத்தியவர். அவர் சிஎஸ்கே அணிக்கு அறிமுகமானதில் இருந்து அவருக்கு அதிகமான ஆதரவை தோனி கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் நான் தோனியை என் கிரிக்கெட் அப்பாவாக நினைக்கிறேன் என சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
தோனி என் தந்தையைப் போன்றவர். ஏனென்றால் நான் சிஎஸ்கேவில் இருக்கும்போது அவர் எனக்கு அளிக்கும் ஆதரவு, வழிகாட்டுதல் எல்லாம் என் தந்தை என் வீட்டுல செஞ்சதைப் போலவே இருக்கு. அதனாலதான் நான் தோனியை என் கிரிக்கெட் தந்தையாக கருதுகிறேன்.
என்று பத்திரனா கூறினார்.






