என் மலர்
நீங்கள் தேடியது "எம்எஸ் தோனி"
- ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளது.
- சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னையில் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்.
ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னையில் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தீபக் சாஹர் மற்றும் முன்னாள் சிஎஸ்கே கேப்டன் தோனி ஆகியோர் இடையே சில செல்ல சண்டைகள் களத்தில் அரங்கேறியுள்ளது. சாஹரை வம்பிலுப்பதை அடிக்கடி தோனி செய்து வந்தார். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

அதிக முறை தோனியிடம் சாஹர் திட்டு வாங்கிக் கொண்டே இருப்பார். பல நகைச்சுவையான வீடியோக்களும் இதில் அடங்கும். அந்த வகையில் களத்தில் மட்டும் இல்லாமல் வாட்ஸ் அப் சேட்டிலும் இவர்களது செல்ல சண்டை விட்டு வைக்கவில்லை.
அவர்கள் இருவருக்கும் இடையிலான நகைச்சுவையான உரையாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், "மஹி பாய், உங்கள் பழைய வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். உங்களை நான் ரொம்பவே மிஸ் செய்கிறேன்" என்று தீபக் சாஹர் கூறியுள்ளார்.
அதற்கு தனது பாணியில் பதிலளித்த தோனி, "சரி.. ஆனால் நான் உன்னை கொஞ்சம் கூட மிஸ் பண்ணவில்லை" என பதில் அளித்தார்.
இருந்தாலும் விடாத தீபக் சாஹர், "சரி, நான் உங்களை நேரில் வந்து பார்க்கப் போகிறேன்" எனக் கூற, அதற்கு தோனி "நீ வரவே வேண்டாம்" என கலாய்த்துள்ளார்.
தோனிக்கும் தீபக் சாஹருக்கும் இடையிலான இந்த வாட்ஸ் அப் சேட் சிஎஸ்கே ரசிகர்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
சாஹரை கலாய்ப்பதை விட தோனிக்கு வேறு எந்த வேலையும் பிடித்தமானதாக இருக்காது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த சீசனுக்கான ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது.
- எம்.எஸ். தோனி பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தீவிர பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
ஐ.பி.எல். 2026 சீசன் வருகிற 28-ந்தேதி தொடங்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியும் முயற்சி முகாமை ஏற்பாடு செய்துள்ளது. வீரர்கள் முகாமில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எம்.எஸ். தோனியும், பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தீவிர பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த சீசனுக்கான ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், புதிய ஜெர்ஸியில் தோனி இருக்கும் புகைப்படத்தை சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ளது.
- தோனி பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தீவிர பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
- நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவி சாக்ஷி குறித்து தோனி நெகிழ்ந்து பேசியுள்ளார்.
ஐ.பி.எல். 2026 சீசன் வருகிற 28-ந்தேதி தொடங்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியும் முயற்சி முகாமை ஏற்பாடு செய்துள்ளது. வீரர்கள் முகாமில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எம்.எஸ். தோனியும், பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தீவிர பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவி சாக்ஷி குறித்து தோனி நெகிழ்ந்து பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், "என்னால் இந்த முழு உலகோடும் சண்டையிட முடியும், ஆயிரம் மன அழுத்தங்களைக் கூட கையாள முடியும். ஆனால் அதற்கு என் மனைவி என் பக்கம் இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
- டி20 உலகக் கோப்பை தொடரின் 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின.
- இந்த போட்டியை தோனி, அவரது மனைவி நேரில் கண்டு களித்தனர்.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இந்த போட்டியின் போது, தோனியின் மனைவி சாக்ஷி செய்த ஒரு செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதன்படி போட்டியின் 18-வது ஓவரில் ஜஸ்பிரித் பும்ரா வீசிய பந்தை இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் நேராக அவரிடமே அடித்தார். பந்து தரையில் பட்டு பும்ராவிடம் சென்றது. ஆனால், விஐபி கேலரியில் அமர்ந்து போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த சாக்ஷி தோனி, அது 'கேட்ச்' என்று தவறாக நினைத்து இருக்கையில் இருந்து குதித்து உற்சாகமாகக் கொண்டாடத் தொடங்கினார்.
சாக்ஷி தவறுதலாகக் கொண்டாடுவதைக் கண்ட எம்.எஸ். தோனி, உடனடியாக அவரை அமைதிப்படுத்தினார். பந்து தரையில் பட்டு வந்ததைச் சைகை மூலம் சுட்டிக்காட்டிய தோனி, சிரித்துக்கொண்டே சாக்ஷியை "உட்காரு" என்று கூறினார்.
தோனியின் இந்த ரியாக்ஷனும், சாக்ஷியின் குழந்தைத்தனமான கொண்டாட்டமும் சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
- தற்போது ஐபிஎல் தொடருக்காக சென்னையில் பயிற்சியில் உள்ளார்
- ராஞ்சியில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியதாக அவருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ராஞ்சியில் உள்ள தனது இல்லத்திற்கு அருகே அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மார்ச் 1 ஆம் தேதி, கான்கே ரிங் சாலையில் பிர்சா வேளாண் பல்கலைக்கழகம் அருகே அவரது சொகுசு கார் அதிவேகத்தில் சென்றதை அங்குள்ள தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பதிவு செய்ததையடுத்து, மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 183-ன் கீழ் அவருக்கு டிஜிட்டல் முறையில் 'இ-சலான்'அனுப்பப்பட்டுள்ளது.
இந்தக் கண்காணிப்பு அமைப்பு நகரின் முக்கிய சந்திப்புகள் மற்றும் ரிங் ரோடு (வட்டச் சாலை) பகுதிகளில் 24/7 செயல்பாட்டில் உள்ளது என்றும், இது அதிவேகம், சிக்னலை மீறுதல் மற்றும் பிற போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணித்து வருகிறது என்றும் ராஞ்சி போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளார். இத்தகைய விதிகளை மீறும் யாராக இருந்தாலும் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தற்போது தோனி ஐபிஎல் 2026 போட்டிகளுக்காகச் சென்னையில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், ராஞ்சியில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- எம்.எஸ். தோனி பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
- தோனியுடன் அவரது மனைவி சாக்ஷி டேபிள் டென்னிஸ் விளையாடுகிறார்.
ஐ.பி.எல். 2026 சீசன் வருகிற 28-ந்தேதி தொடங்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியும் முயற்சி முகாமை ஏற்பாடு செய்துள்ளது. வீரர்கள் முகாமில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எம்.எஸ். தோனியும், பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தீவிர பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், தோனியுடன் டேபிள் டென்னிஸ் விளையாடும் புகைப்படத்தை அவரது மனைவி சாக்ஷி சிங் பகிர்ந்துள்ளார்.
- கடந்த முறை ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி இடத்தை பிடித்தது.
- இந்த முறை சிஎஸ்கே மற்ற அணிகளுக்கு கடும் சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.பி.எல். 2026 சீசன் வருகிற 28-ந்தேதி தொடங்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியும் முயற்சி முகாமை ஏற்பாடு செய்துள்ளது. வீரர்கள் முகாமில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எம்.எஸ். தோனியும், பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தீவிர பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
கடந்த முறை ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி இடத்தை பிடித்தது. தற்போது ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே, சஞ்சு சாம்சன், பிரேவிஸ், ஷிவம் துபே போன்ற நட்சத்திர பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இதனால் சிஎஸ்கே மற்ற அணிகளுக்கு கடும் சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் Communications Partner ஆக Vi நிறுவனம் இணைந்தது. அடுத்த 3 வருடங்களுக்கு இந்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும், பயனர்களுக்கு நல்ல அனுபவங்கள் கிடைக்கும் எனவும் Vi நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
- ஐபிஎல் 2026 சீசன் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது.
- சிஎஸ்கே பயிற்சி முகாமை தொடங்கியுள்ளது.
ஐ.பி.எல். 2026 சீசன் வருகிற 28-ந்தேதி தொடங்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியும் முயற்சி முகாமை ஏற்பாடு செய்துள்ளது. வீரர்கள் முகாமில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எம்.எஸ். தோனியும், பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தீவிர பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
பேட்டிங்கிற்கு தயாராகும் எம்.எஸ். தோனியின் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ளது.
கடந்த முறை ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி இடத்தை பிடித்தது. தற்போது ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே, சஞ்சு சாம்சன், பிரேவிஸ், ஷிவம் துபே போன்ற நட்சத்திர பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இதனால் சிஎஸ்கே மற்ற அணிகளுக்கு கடும் சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- எல்லோரும் ஒரே மாதிரி நடத்தப்பட வேண்டும்.
- உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் அனுபவம் மிக முக்கியம்.
2027-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இடம்பெறுவார்களா என்பது தற்போது வரை முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆனால் விராட் கோலியின் இடம் கிட்டத்தட்ட உறுதியாகத் தெரிகிறது. சமீபத்திய தொடர்களில் (ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்றவை) சிறப்பாக விளையாடி உள்ளார். அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர் போன்றவர்கள் அவரை 2027 திட்டத்தில் முக்கியமாகக் கருதுகின்றனர்.
அதே சமயத்தில் ரோகித் சர்மா, சமீப தொடர்களில் சில சிறப்பான இன்னிங்ஸ் ஆடியுள்ளார், ஆனால் சில போட்டிகளில் சொதப்பியுள்ளார். இருப்பினும், அணி அவரை முக்கியமாகக் கருதுகிறது.
இந்நிலையில் இருவரும் 2027-ம் ஆண்டு நடக்கும் உலகக் கோப்பை தொடரில் இடம் பெறுவார்களாக என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இது குறித்து தோனி கூறியதாவது:-
அடுத்த உலகக் கோப்பையில் ஏன் விளையாடக் கூடாது? என்னைப் பொறுத்தவரை, உடற்தகுதியை வயது தீர்மானிக்காது. அவர்களது பெர்ஃபார்மன்ஸ், பிட்னஸ் தான் தீர்மானிக்கும்.
உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் அனுபவம் மிக முக்கியம். அனுபவம் மற்றும் ஃபிட்னஸ் இருந்தால் ஏன் விளையாடக்கூடாது.
ஆனால் ஒரு விஷயம் தெளிவுபடுத்தப்பட வேண்டும். எல்லோரும் ஒரே மாதிரி நடத்தப்பட வேண்டும். நான் டெப்யூ செய்தபோது 24 வயது, யாரும் என்னிடம் வயது பற்றி எதுவும் சொல்லவில்லை. அதே போல், 1, 2, 5 அல்லது 10 வருடங்கள் விளையாடினாலும், வயது பற்றி யாரும் எதுவும் சொல்லக் கூடாது.
அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டால், அணியில் இருப்பார்கள். சிறப்பாகச் செயல்படாவிட்டால், இருக்க மாட்டார்கள் என தோனி கூறினார்.
- சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் உள்ளார்.
- இந்த முறை சிஎஸ்கெ அணி டிரெடிங் மூலம் சஞ்சு சாம்சனையும் அணியில் சேர்த்துள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்எஸ் தோனி. எம்எஸ் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
அவர் இரண்டு முறை கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ஆனால் பல்வேறு காரணங்களால் மீண்டும் கேப்டன் பதவிக்கு திரும்ப வேண்டியிருந்தது. தற்போது, ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக உள்ளார். மேலும் இந்த முறை சிஎஸ்கெ அணி டிரெடிங் மூலம் சஞ்சு சாம்சனையும் அணியில் சேர்த்துள்ளது.
தோனி பிறகு அணியின் கீப்பராக சஞ்சு செயல்படுவார் என சொல்லப்படுகிறது. எனவே ஐபிஎல் 2026 இல் தோனி இம்பெக்ட் வீரராக விளையாடுவாரா அல்லது விக்கெட் கீப்பராக விளையாடுவாரா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
இந்நிலையில் எம்எஸ் தோனி, வரவிருக்கும் ஐபிஎல் 2026 தொடருக்காக பயிற்சி செய்யத் தொடங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூல வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- நான் 2015-ல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றேன்.
- ஒரு நாள் நாங்கள் இருவரும் ஒன்றாக ஒரு போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்துவிட்டார். தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் கிரிக்கெட் குறித்து தானும் தனது மனைவியும் பேசிய நகைச்சுவையான சம்பவம் குறித்து எம் எஸ் தோனி கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது:-
நான் 2015-ல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றேன். அதனால் என் குடும்பத்துடன் செலவிட எனக்குக் கொஞ்சம் கூடுதல் நேரம் கிடைத்தது. பொதுவாக, நானும் என் மனைவியும் கிரிக்கெட் பற்றி அதிகம் பேசுவதில்லை. ஆனால் ஒரு நாள் நாங்கள் இருவரும் ஒன்றாக ஒரு போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.
பந்துவீச்சாளர் ஒரு வைடு வீசினார். பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு வெளியே வந்து ஸ்டம்பிங் செய்யப்பட்டார். என் மனைவி உடனடியாக, அவர் அவுட் இல்லை, வைடு பந்தில் ஸ்டம்பிங் செய்ய முடியாது என்று கூறினார்.
அவள் அவுட் இல்லை என்று சொல்லி முடிப்பதற்குள், அந்த பேட்ஸ்மேன் ஏற்கெனவே திரும்பி நடக்கத் தொடங்கிவிட்டார். அவரை மீண்டும் அழைப்பார்கள் என்று அவள் உறுதியாக நம்பினாள்.
நான் அவளிடம், 'நோ-பால் பந்தில் மட்டும்தான் ஸ்டம்பிங் செய்தால் அவுட் கிடையாது. வைடு பந்தில் அவுட் உண்டு என்று கூறினேன். அதற்கு அவள், 'உங்களுக்கு ஒன்றும் தெரியாது, பாருங்கள், நடுவர்கள் அவரை மீண்டும் அழைப்பார்கள்' என்று பதிலளித்தாள் என தோனி கூறினார்.
- ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி, ரிஷப் பண்ட், ருதுராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
- விராட் கோலி, ரிஷப் பண்ட், ருதுராஜ் ஆகியோருக்கு எம்எஸ் தோனி தனது வீட்டில் விருந்து வைத்துள்ளார்.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் சமீபத்தில் முடிந்தது. இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றி சாதனை படைத்தது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் வருகிற 30-ந் தேதி ராஞ்சியில் தொடங்குகிறது. இதற்காக ராஞ்சி வந்த இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்ற விராட் கோலி, ரிஷப் பண்ட், ருதுராஜ் ஆகியோருக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே வீரருமான எம் எஸ் தோனி தனது வீட்டில் விருந்து வைத்துள்ளார்.
அதற்காக 3 பேரும் நேற்று இரவு தோனி வீட்டுக்கு சென்றனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
3 பேரும் தோனி வீட்டிற்குள் சென்றது மற்றும் வெளி வந்த புகைப்படம் மற்றும் வீடியோ மட்டுமே சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வீட்டிற்குள் என்ன நடந்தது என்பது குறித்தும் அவர்கள் விருந்தில் என்ன சாப்பிட்டார்கள் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார்களா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தோனி, கோலி, ரிஷப் பண்ட் ஆகிய 3 பேரும் சாப்பிடுவது போன்ற AI புகைப்படத்தை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் சமூக வலைதளங்களில் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்திற்கு வெறுப்பவர்கள் மட்டுமே இதை AI என கூறுவார்கள் எனவும் தலைப்பிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.






