என் மலர்

  நீங்கள் தேடியது "virat kholi"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இங்கிலாந்து கேப்டன் பட்லர் ஐ.சி.சி. கனவு அணிக்கு கேப்டனாக தேர்வு பெற்றுள்ளார். விக்கெட் கீப்பர் மற்றும் தொடக்க வீரரும் ஆவார்.
  • இந்தியா தரப்பில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர். ஹர்திக் பாண்ட்யாவுக்கு 12-வது வீரர் வாய்ப்பு கிடைத்து உள்ளது.

  மெல்போர்ன்:

  ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பையை பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி கைப்பற்றியது. அந்த அணி இறுதி போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

  20 ஓவர் உலக கோப்பை போட்டியின் அடிப்படையில் மதிப்பு மிக்க வீரர்கள் கொண்ட அணியை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) வெளியிட்டுள்ளது. வல்லுனர்கள் குழு ஐ.சி.சி. 20 ஓவர் கோப்பை கனவு அணியை தேர்வு செய்தது.

  இந்த அணியில் இந்தியா தரப்பில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர். ஹர்திக் பாண்ட்யாவுக்கு 12-வது வீரர் வாய்ப்பு கிடைத்து உள்ளது. விராட் கோலி இந்த தொடரில் 296 ரன்கள் எடுத்து முதல் இடத்தை பிடித்தார். சூர்யகுமார் யாதவ் 234 ரன்கள் எடுத்துள்ளார்.

  இங்கிலாந்து கேப்டன் பட்லர் ஐ.சி.சி. கனவு அணிக்கு கேப்டனாக தேர்வு பெற்றுள்ளார். விக்கெட் கீப்பர் மற்றும் தொடக்க வீரரும் ஆவார். மற்றொரு தொடக்க வீரர் அலெக்ஸ் ஹால்ஸ் ஆவார்.

  ஐ.சி.சி. கனவு அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் (பேட்டிங் வரிசையில் இருந்து) வருமாறு:-

  அலெக்ஸ் ஹால்ஸ், பட்லர் (கேப்டன், இங்கிலாந்து), விராட் கோலி, சூர்ய குமார் யாதவ் (இந்தியா), பிலிப்ஸ் (நியூசிலாந்து), சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே), ஷதாப் கான் (பாகிஸ்தான்), சாம் கரன் (இங்கிலாந்து) ஆன்ரிச் நோர்க்கியா (தென் ஆப்பிரிக்கா), மார்க்வுட் (இங்கிலாந்து), ஷகீன்ஷா அப்ரிடி (பாகிஸ்தான்) 12-வது வீரர்:- ஹர்திக் பாண்ட்யா (இந்தியா)

  போட்டியை நடத்திய ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஒருவர் கூட ஐ.சி.சி. கனவு அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கிரிக்கெட் வீரர் விராட் கோலி அறையை சிலர் படம் பிடித்து வீடியோ வெளியிட்டனர்.
  • இதனை கண்டிக்கும் வகையில் நடிகை அனுஷ்கா ஷர்மா பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

  இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று பெர்த் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா தோல்வியடைந்தது. இந்த போட்டி முடிவடைந்த பின்னர், இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன விராட் கோலி, ஒரு வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, ஓட்டல் ஊழியர் தன்னுடைய அறையை படம் பிடித்து வெளியிட்ட வீடியோ என பதிவிட்டுள்ளார். மேலும், தனது அறையில் தன்னுடைய தனியுரிமை மீறப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.


  அனுஷ்கா ஷர்மா பதிவு

  விராட் கோலி பதிவிட்ட அந்த வீடியோவை அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த பதிவில், "கடந்த காலத்தில் சில ரசிகர்கள் இரக்கமோ கருணையோ காட்டாத சில சம்பவங்களை நானும் அனுபவித்திருக்கிறேன். அது மிகவும் மோசமான விஷயம். சில சுயக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நலம். இதே போல் உங்கள் படுக்கையறையில் நடந்தால் சும்மா இருப்பீர்களா" என குறிப்பிட்டுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு புதிய கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது.
  லண்டன்:

  உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து- தென் ஆப்பரிக்கா அணிகள் மோதுகின்றன. இன்று தொடங்கி வரும் ஜூலை மாதம் 14ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளது.

  இந்த தொடரில் 45 லீக் போட்டிகள், 3 நாக்-அவுட் போட்டிகள் என சுமார் 12 நகரங்களில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெறும். இதில் 10 அணிகள் ஒன்றுடன் ஒன்று மோத உள்ளன.  இந்நிலையில் உலக கோப்பை தொடங்குவதை முன்னிட்டு, கிரிக்கெட்டின் பிறப்பிடமான லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் நம்பர் 1 வீரரான விராட் கோலியை கவுரப்படுத்தும் விதமாக அவரது மெழுகு சிலை தத்ரூபமாக வைக்கப்பட்டுள்ளது.  விராட் கோலியின் இந்த மெழுகு சிலை வரும் ஜூலை 15ம் தேதி வரை காட்சிக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு லண்டனில் இருக்கும் கோலியின் ரசிகர்கள் நேரில் சென்று பார்வையிட்டு செல்ஃபி எடுத்துக் கொண்டு சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.     

  விராட் கோலியுடன் இணைந்து கிரிக்கெட் ஜாம்பவான் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் மெழுகு சிலையும் வைக்கப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேப்டன் பதவியில் 4 ஆயிரம் ரன் எடுத்த 4-வது இந்தியர் என்ற பெருமையை தற்போதைய இந்திய கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். #ViratKholi #INDvAUS
  இந்திய அணி கேப்டன் விராட்கோலியின் பேட்டிங் நாளுக்கு நாள் சிறப்பாக இருந்து வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் செஞ்சூரி எடுத்த அவர் நேற்றைய 3-வது ஆட்டத்திலும் சதம் அடித்தார். 95 பந்தில் 123 ரன்கள் குவித்தார்.

  27-வது ரன்னை எடுத்தபோது கேப்டன் பதவியில் கோலி 4 ஆயிரம் ரன்னை தொட்டார். 66 இன்னிங்சில் அவர் இந்த ரன்னை எடுத்தார். இதன்மூலம் கேப்டன் பதவியில் 4 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் எடுத்தவர் என்ற சாதனையை கோலி படைத்தார். இதற்கு முன்பு டிவில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா) கேப்டன் பதவியில் 77 இன்னிங்சில் 4 ஆயிரம் ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது.

  கேப்டன் பதவியில் 4 ஆயிரம் ரன் எடுத்த 4-வது இந்தியர் என்ற பெருமையை கோலி பெற்றார். இதற்கு முன்பு அசாருதீன், கங்குலி, டோனி ஆகியோர் எடுத்து இருந்தனர்.

  ஒருநாள் போட்டியில் கோலியின் 41-வது செஞ்சூரியை பதிவு செய்தார். கேப்டன் பதவியில் 19-வது சதமாகும். ஒருநாள் போட்டியில் அதிக சதம் எடுத்து சாதனை படைத்த டெண்டுல்கரை முந்த அவருக்கு இன்னும் 9 செஞ்சூரிகளே தேவை. டெண்டுல்கர் 49 சதம் அடித்துள்ளார்.

  சர்வதேச போட்டியில் கோலியின் 66-வது சதமாகும். 2-வது இடத்தில் உள்ள பாண்டிங்கை முந்த 6 செஞ்சூரிகளே தேவை.

  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலியின் 8-வது சதமாகும். இன்னும் ஒரு சதம் அடித்தால் டெண்டுல்கரை சமன் செய்வார். டெண்டுல்கர் 9 சதம் எடுத்து இருந்தார். #ViratKholi #INDvAUS
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் எங்களது பேட்டிங் சிறப்பாக இல்லை என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். #INDvAUS #ViratKholi
  விசாகப்பட்டினம்:

  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் தோல்வியை தழுவியது.

  விசாகப்பட்டினத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்னே எடுக்க முடிந்தது.

  லோகேஷ் ராகுல் அதிகபட்சமாக 30 பந்தில் 50 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்) டோனி 29 ரன்னும் எடுத்தனர். நாதன் கோல்ட்டர் 3 விக்கெட்டும், பெகரன்டார்ப், ஆடம் ஜம்பா, கும்மின்ஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

  பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் கடைசி பந்தில் அந்த அணி வெற்றி பெற்றது.

  மேக்ஸ்வெல் 43 பந்தில் 56 ரன் (6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். பும்ரா 16 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். யுசுவேந்திர சாஹல், கர்ணல் பாண்டியா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

  எங்களது பேட்டிங் சிறப்பாக இல்லை என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஒப்புதல் அளித்து உள்ளார். தோல்வி குறித்து அவர் கூறியதாவது:-

  எங்களது பேட்டிங் சிறப்பாக இல்லை. ஆட்டத்தின் 15-வது ஓவர் வரை இந்த ஆடுகளம் பேட்டிங் செய்ய ஏதுவாகவே இருந்தது. ஆனால் உண்மையில் நாங்கள் பேட்டிங்கில் நன்றாக ஆடவில்லை. லோகேஷ் ராகுல் சிறப்பாக ஆடினார். அவரும், நானும் சிறந்த பார்ட்னர் ஷிப் அமைத்தோம்.

  126 ரன் என்பது போதுமான ஸ்கோர் இல்லை. நாங்கள் 150 ரன்னுக்கு மேல் எடுத்து இருக்கலாம். அப்படி எடுத்து இருந்தால் வெற்றிக்கான ஸ்கோராக இருந்து இருக்கும்.

  எங்களது பந்துவீச்சு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. 19-வது ஓவர் வரை நாங்களே நல்ல நிலையில் இருந்தோம். பும்ரா ஆச்சரியம் அளிக்கும் வகையில் அபாரமாக பந்துவீசினார்.

  புதுமுக வீரரான மான்யக் மிடில் ஓவரில் நன்றாக வீசினார். ஒட்டு மொத்தத்தில் எங்களைவிட ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடியது. அந்த அணியே வெற்றிக்கு தகுதியானது.

  உலககோப்பைக்கு முன்பு ராகுல், ரி‌ஷப் பந்துக்கு மேலும் கால அவகாசம் கொடுக்க விரும்புகிறார்.

  இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.

  இந்த வெற்றி மூலம் 3 போட்டிக்கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது 20 ஓவர் ஆட்டம் பெங்களூரில் வருகிற 27-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. #INDvAUS #ViratKholi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ரோகித் சர்மாவுக்கு நாளைய ஆட்டம் 200-வது ஒருநாள் போட்டியாகும். #RohitSharma #SachinTendulkar #ViratKholi #MSDhoni
  200-வது போட்டியில் விளையாடும் 14-வது இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித்சர்மா பெறுகிறார். டெண்டுல்கர் 463 போட்டியில் விளையாடி முதல் இடத்தில் உள்ளார்.

  தற்பேதுள்ள வீரர்களில் டோனி 334 போட்டியிலும், விராட்கோலி 222 போட்டியிலும் விளையாடி உள்ளனர்.

  31 வயதான ரோகித்சர்மா 199 ஒருநாள் போட்டியில் 193 இன்னிங்சில் 7799 ரன் எடுத்துள்ளார். சராசரி 48.14 ஆகும். 22 சதமும், 39 அரைசதமும் அடித்துள்ளார். அதிகபட்சம் 264 ரன் குவித்துள்ளார். #RohitSharma #SachinTendulkar #ViratKholi #MSDhoni
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பல சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு உள்ளது. #ViratKholi #AUSvIND

  ‘இந்திய கேப்டன் விராட் கோலி சில சாதனைகளை நோக்கி பயணிக்கிறார். இன்னும் 8 ரன்கள் எடுக்கும் போது, ஆஸ்திரேலிய மண்ணில் ஆயிரம் ரன்களை கடந்த 4-வது இந்தியர் என்ற சிறப்பை பெறுவார். இந்த தொடரில் 2 சதங்கள் அடித்தால், ஆஸ்திரேலியாவில் அதிக சதங்கள் நொறுக்கிய இந்தியர் என்ற சாதனையை சச்சின் தெண்டுல்கரிடம் (6 சதம்) இருந்து தட்டிப்பறிப்பார்’. #ViratKholi #AUSvIND
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன மகேந்திர சிங் டோனி டி20 தொடர்களில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். #MSDhoni #INDvWI #INDvAUS
  வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒரு நாள் தொடர் முடிந்ததும் இந்திய அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 4–ந்தேதி கொல்கத்தாவில் நடக்கிறது. அதைத்தொடர்ந்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலில் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது.

  இந்த ஆறு டி20 போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரன் குவிக்க தடுமாறி வரும் இந்திய விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான 37 வயதான டோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அணியில் நிலையான இடத்தை பிடித்த பிறகு டோனி நீக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

  வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 20 ஓவர் தொடருக்கு மட்டும் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அணியில் தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  யோ-யோ டெஸ்டில் பாஸ் என்றால் இந்திய அணியில் இடம். இல்லையென்றால் புறப்பட வேண்டியதுதான் என்கிறார் ரவி சாஸ்திரி. #ENGvIND
  இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள் உடற்தகுதியில் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் யோ-யோ டெஸ்ட் என்ற முறையை கையாண்டு வருகிறது.

  உள்ளூர் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வாகும்போது அவர்கள் யோ-யோ டெஸ்டில் பாஸ் ஆக வேண்டும். அம்பதி ராயுடு, சஞ்சு சாம்சன், முகமது ஷமி ஆகியோர் யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் இங்கிலாந்து தொடரை இழந்தனர்.

  யோ-யோ டெஸ்ட் குறித்து முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்காக இன்று அயர்லாந்து புறப்பட்டுச் சென்றது.  புறப்படுவதற்கு முன்பு இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டியளித்தார். அப்போது, ‘‘யோ-யோ டெஸ்ட் கட்டாயம். யோ-யோ டெஸ்ட் தொடர்பான தத்துவம் மிகவும் எளிதானது. நீங்கள் இந்த டெஸ்டில் பாஸ் ஆனால் இந்திய அணியில் விளையாடலாம். இல்லையென்றால் புறப்பட வேண்டியதுதான். யாராவது ஒருவர் ஒரு முடிவில் உறுதியாக இருக்காலாம். மற்றவர்களுக்காக இந்திய அணி செல்ல முடியாது. இந்திய அணி கேப்டன் இதில் உறுதியாக உள்ளார். அதன்பின் தேர்வாளர்கள், ஒட்டுமொத்த அணி நிர்வாகம் இதே முடிவில் உள்ளது’’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பயிற்சியின் போது ஏற்பட்ட முதுகெலும்பு காயம் காரணமாக விராட் கோலி, இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. #ViratKholi #CountyCricket #slipdiscinjury

  புதுடெல்லி:

  இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூலை 3-ம் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தின் போது 5 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி கவுண்டி கிளப் அணியான சுர்ரேவில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

  மேலும் இந்த தொடருக்கு தயாராகும் வகையில் ஜூன் 14 முதல் 18-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இருந்தும், அயர்லாந்துக்கு எதிரான தொடரில் இருந்தும் விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். 

  இந்நிலையில் உடற்பயிற்சி செய்யும் போது, கோலியின் முதுகெலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த காயம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும், பெரிய அளவிலான சிகிச்சை தேவையில்லை எனவும் கூறப்படுகிறது. ஆனால் காயம் காரணமாக ஓய்வு தேவை என பிசிசிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் கோலி கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. #ViratKholi #CountyCricket #slipdiscinjury
  ×