என் மலர்
நீங்கள் தேடியது "இஷான் கிஷன்"
- இந்த தொடருக்கான கிழக்கு மண்டல அணியின் கேப்டனாக இஷான் கிஷன் நியமிக்கப்பட்டிருந்தார்.
- இஷான் கிஷன் விலகிய நிலையில் கிழக்கு மண்டல அணியின் கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் வரும் 28-ம் தேதி முதல் பெங்களூருவில் தொடங்கவுள்ளது. இதில் மேற்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளன.
வடக்கு மண்டலம், கிழக்கு மண்டலம், வடகிழக்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டல அணிகள் பிளே ஆப் (காலிறுதி) போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான கிழக்கு மண்டல அணியின் கேப்டனாக இஷான் கிஷன் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், துலீப் டிராபி தொடரில் இருந்து இஷான் கிஷன் நீக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகி உள்ளதாக ஒடிசா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அவருக்கு ஆஷிர்வாட் ஸ்வைன் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனால் கிழக்கு மண்டல அணியின் கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இங்கிலாந்து தொடரில் முகமது ஷமிக்கு இடமில்லை.
- இந்த நிலையில் துலீப் டிராபி அணியில் இடம் பிடித்துள்ளார்.
துலீப் டிராபி 2025 சீசனுக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மண்டலம் (East Zone) அணிக்கு இஷான் கிஷன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த முகமது ஷமி அணியில் இடம் பிடித்துள்ளார். இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி Standy player ஆக இடம் பிடித்துள்ளார்.
கிழக்கு மண்டலம் (East Zone) அணி விவரம்:-
இஷான் கிஷன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), அபிமன்யு ஈஸ்வரன் (துணைக் கேப்டன்), சந்தீப் பட்நாயக், விராட் சிங், டெனிஸ் தாஸ், ஸ்ரீதாம் பாம், ஷரன்தீப் சிங், குமார் குஷாக்ரா, ரியான் பராக், உட்கார்ஷ் சிங், மணிஷி, சுராஜ் சிந்து ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், முகமது ஷமி
Standy players:- முக்தார் ஹுசைன், ஆசர்வாத் ஸ்வெயின், வைபவ் சூர்யவன்ஷி, ஸ்வாஸ்டிக் சமல், சுதிப் குமார் கராமி, ராகுல் சிங்.
கிழக்கு மண்டலம் அணி முதல் போட்டியில் ஆகஸ்ட் 28ஆம் தேதி வடக்கு மண்டலம் அணியை எதிர்கொள்கிறது.
- இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகி உள்ளார்.
- 5-வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்ய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு ஆலோசித்து வருகிறது.
காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகி உள்ளார்.
தற்போது நடந்து வரும் 4-வது டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்சில் தேவைபட்டால் ரிஷப்பண்ட் பேட்டிங் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் விக்கெட் கீப்பிங் பணியை துருவ் ஜூரெல் கவனித்து வருகிறார்.
இதற்கிடையே 5-வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்ய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு ஆலோசித்து வருகிறது. இதில் இங்கிலாந்தில் கவுண்டி டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் இஷான் கிஷனை அணியில் சேர்க்க முடிவு செய்து அவருக்கு தேர்வுக் குழு அழைப்பு விடுத்தது.
ஆனால் தான் கணுக்கால் காயம் காரணமாக அவதிப்படுவதாகவும், இதனால் தன்னால் 5-வது டெஸ்டில் ஆட முடியாது என்றும் இஷான் கிஷன் மறுப்பு தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதையடுத்து வேறு வீரர்களை தேர்வுக்குழு பரிசீலித்து வருகிறது. இந்த நிலையில் ரிஷப் பண்ட்டுக்கு மாற்றாக தமிழகத்தை சேர்ந்த ஜெகதீசனை அணியில் சேர்க்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- ரிஷப்பண்ட் 37 ரன்னில் இருக்கும் போது காயத்தால் வெளியேறினார்.
- ஸ்கேன் எடுக்கப்பட்டதில் ரிஷப் பண்டிற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து- இந்தியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரா போர்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 264 ரன் எடுத்து இருந்தது.
ரிஷப்பண்ட் 37 ரன்னில் இருக்கும் போது காயத்தால் வெளியேறினார். அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் ரிஷப் பண்டிற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பண்ட் விலகினார். இதனால் 2-வது இன்னிங்சில் ரிஷப் பண்ட் விளையாடமாட்டார். இது இந்திய அணிக்கு பின்னடைவாகும்.
ரிஷப் பண்டிற்கு பதிலாக இஷான் கிஷன் இந்திய அணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- பல சமயங்களில், நமது மனம் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் வேலை செய்யத் தவறிவிடும்.
- இஷான் கிஷனின் நேர்மையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஐதராபாத்:
ஐதராபாத்தில் நேற்றிரவு நடத்திய 41-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் ஐதராபாத் வீரர் இஷான் கிஷன் அவுட் ஆனது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தீபக் சாஹர் பந்து வீச்சில் இஷான் கிஷன் பேட்டை உரசுவது போல் சென்றது. ஆனால் விக்கெட் கீப்பரோ, மும்பை வீரர்களோ யாரும் அப்பீல் செய்யவில்லை.
நடுவர் இஷான் கிஷன் வெளியேறியதையடுத்து யோசித்து கொண்டே அவுட் கொடுத்தார். ஆனால் இஷான் கிஷன் ரிவ்யூவும் கேட்காமல் பெவிலியன் நோக்கி நடந்தார். ஆனால் ரீப்ளேயில் பந்து பேட்டில் உரசவில்லை என்பது தெரியவந்தது. களநடுவர் மற்றும் இஷான் கிஷனின் இந்த செயல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பல சமயங்களில், நமது மனம் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் வேலை செய்யத் தவறிவிடும். அது மூளை மங்கிப்போனதைத்தான் குறிக்கிறது. இஷான் கிஷன் குறைந்த பட்சம் நடுவர் தனது முடிவை எடுக்கும் வரை காத்திருக்கலாம். நடுவரை அவரது வேலையை செய்ய விடுங்கள். அதற்காக அவர் பணமும் வாங்குகிறார்.
இஷான் கிஷனின் நேர்மையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பந்து பேட்டில் பட்டிருந்தால் கூட அது புரிந்துகொள்ளத்தக்கதாக இருந்திருக்கும். ஆனால் அது அவுட்டும் இல்லை. நடுவரும் உறுதியற்றவராக இருந்தார். ஆனால் திடீரென இஷான் ஆடுகளத்தை விட்டு வெளியேறியது குழப்பமானது.
என்று கூறினார்.
- தீபக் சாஹர் வீசிய பந்து இஷான் கிஷனின் பேட்டில் படவில்லை.
- இஷான் கிஷன் 1 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
ஐதராபாத்:
ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் மும்பை- ஐதராபாத் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இதில் போல்ட் வீசிய 2-வது ஓவரிலேயே டிராவிஸ் ஹெட் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்த இஷான் கிஷன் களமிறங்கினார்.
இந்நிலையில் தீபக் சஹர் வீசிய 3-வது ஓவரின் முதல் பந்து இஷான் கிஷனுக்கு பின் பக்கமாக சென்றது. அதனை விக்கெட் கீப்பர் ரிக்கல்டன் எளிதாக பிடித்தார். அப்போது நடுவர் ஒய்டு கொடுப்பதற்காக கைகளை உயர்த்திய போது, திடீரென இஷான் கிஷன் நடக்க தொடங்கினார்.
இதனால் உடனடியாக மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பவுலர் தீபக் சாஹர் ஆகியோர் அவுட் கோரிக்கை வைத்தனர். அதன்பின் நடுவர் யோசித்து கொண்டே அவரது கையை உயர்த்தி அவுட் கொடுத்தார்.
சந்தேகத்தின் அடிப்படையில் இஷான் டிஆர்எஸ் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இஷான் கிஷன் அதை கேட்காமல் உடனடியாக பெவிலியன் சென்றார்.
இதனையடுத்து இஷான் கிஷனுக்கு வீசப்பட்ட பந்தை ஸ்னிக்கோமீட்டரில் சோதனை செய்தனர். அப்போது தீபக் சஹர் வீசிய பந்து இஷான் கிஷனின் பேட்டில் மற்றும் அவரது உடம்பில் கூட படவில்லை என்பது தெரிய வந்தது. இதனை ஓய்வு அறையில் பார்த்து கொண்டிருந்த இஷான் கிஷன் தலையில் அடித்துக் கொண்டார்.
பேட்டில் படாமல் இஷான் கிஷன் எதற்காக நடந்து சென்றார், எதற்காக டிஆர்எஸ் அப்பீல் கூட செய்யவில்லை என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதனால் ரசிகர்கள் இஷான் கிஷனின் விஸ்வாசம் எப்போதும் அம்பானிக்கு தான் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.
- பிசிசிஐ-ன் A+ பிரிவில் விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா, ஜடேஜா இடம் பிடித்துள்ளனர்.
- B பிரிவில் சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம்பெற்றனர்
இந்திய கிரிக்கெட் அணியின் 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.
2024 அக்டோபர் 1, முதல் 2025 செப்டம்பர் 30, வரையிலான இந்த வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் 34 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
பிசிசிஐ-ன் வருடாந்திர ஒப்பந்தத்தில் A+ பிரிவில் விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா, ஜடேஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
A பிரிவில் சிராஜ், கே.எல்.ராகுல், சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, ரிஷப் பண்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
B பிரிவில் சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம்பெற்றனர்
C பிரிவில் ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ், ஷிவம் துபே, பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன்,அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, படிதார் , சர்பராஸ் கான், துருவ் ஜூரல், நிதிஷ்குமார் ரெட்டி, இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, ஆகாஷ் தீப், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷத் ராணா ஆகிய 19 பேர் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் மீண்டும் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, அபிஷேக் சர்மா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் முதல் முறையாக ஒப்பந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
A+ பட்டியலில் உள்ள வீரர்களுக்கு ரூ.7 கோடியும், A பட்டியலில் உள்ள வீரர்களுக்கு ரூ.5 கோடியும், B உள்ள வீரர்களுக்கு ரூ.3 கோடியும், C உள்ள வீரர்களுக்கு ரூ.1 கோடியும் சம்பளமாக வழங்கப்படும்.
- 27-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்- ஐதராபாத் அணிகள் மோதி வருகிறது.
- இந்த போட்டியில் நகைச்சுவையான ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய 27-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்- ஐதராபாத் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் 229 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷ்ரேயாஸ் 82 ரன்கள் குவித்தார்.
இந்நிலையில் இந்த போட்டியில் நகைச்சுவையான ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. அந்த சம்பவத்தை அரங்கேற்றியது ஐதராபாத் அணியின் இஷான் கிஷன். பஞ்சாப் அணி வீரர் அடித்த பந்தை சிறப்பாக டைவ் அடித்து தடுத்தார்.
அதன்பிறகு பந்தை எடுத்து கீப்பரிடம் எறிவதற்காக பந்தை தேடிய போது அவரது கண்ணில் பந்து தென்படவில்லை. இதனால் அருகில் இருந்த பேட் கம்மின்ஸ் பந்தை எடுத்து கீப்பரிடம் எறிந்தார். இந்த சம்பவம் ரசிகர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- முதலில் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில் 286 ரன்களைக் குவித்தது.
- அடுத்து ஆடிய ராஜஸ்தான் 242 ரன்களை மட்டுமே எடுத்தது.
ஐதராபாத்:
ஐபிஎல் 2025 சீசனின் 2வது போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 286 ரன்களைக் குவித்தது. இஷான் கிஷன் 106 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். சிறப்பாக அடிய டிராவிஸ் ஹெட் அரை சதமடித்து 67 ரன்னில் அவுட்டானார்.
இதையடுத்து, 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. முதலில் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய அந்த அணியின் 3 விக்கெட்டுகள் விரைவில் வீழ்ந்தன. பவர்பிளே முடிவில் ராஜஸ்தான் 3 விக்கெட்டுக்கு 77 ரன்கள் எடுத்தது.
4வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன்-துருவ் ஜுரல் ஜோடி பொறுப்புடன் ஆடி 111 ரன்கள் சேர்த்தது. சஞ்சு சாம்சன், துருவ் ஜுரல் அரை சதம் கடந்தனர். துருவ் ஜுரல் 70 ரன்னும், சஞ்சு சாம்சன் 66 ரன்னும் எடுத்தனர்.
6வது விக்கெட்டுக்கு ஹெட்மயர்-ஷ்உபம் துபே ஜோடி 80 ரன்களை சேர்த்துப் போராடியது. ஹெட்மயர் 42 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஐதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
- முதலில் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில் 286 ரன்களைக் குவித்தது.
- இஷான் கிஷன் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார்.
ஐதராபாத்:
ஐபிஎல் 2025 சீசனின் 2வது போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
அதன்படி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் களமிறங்கியது. அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். பவர்பிளே முடிவில் ஐதராபாத் 94 ரன்களைக் குவித்தது.
சிறப்பாக அடிய டிராவிஸ் ஹெட் அரை சதமடித்து 67 ரன்னில் அவுட்டானார். அபிஷேக் சர்மா 24 ரன்னும், நிதிஷ் ரெட்டி 30 ரன்னும், கிளாசன் 34 ரன்னும் எடுத்தனர்.
ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 45 பந்துகளில் 6 சிக்சர், 10 பவுண்டரி உள்பட சதமடித்து அசத்தினார்.
இறுதியில், ஐதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 286 ரன்களைக் குவித்தது. இஷான் கிஷன் 106 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- வங்காளதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.
- இரட்டைச் சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் நான்காவதாக இணைந்துள்ளார்.
சிட்டகாங்:
வங்காளதேசம் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்டாகாங்கில் இன்று நடைபெறுகிறது. டாஸ்வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.
இப்போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். 85 பந்துகளில் சதம் கடந்த அவர், 126 பந்துகளில் இரட்டைச் சதம் என்ற சாதனையை எட்டினார். இதில் 23 பவுண்டரிகள், 9 சிக்சர்களும் அடங்கும். இது அவர் அடிக்கும் முதல் இரட்டை சதம் ஆகும்.
இரட்டைச் சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் நான்காவதாக இணைந்துள்ளார் இஷான் கிஷன். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா ஆகியோர் இரட்டை சதம் அடித்துள்ளனர்.
- முதலில் ஆடிய இந்தியா 8 விக்கெட்டுக்கு 409 ரன்களை குவித்துள்ளது..
- இஷான் கிஷன் இரட்டைச் சதமடித்தார். விராட் கோலி சதமடித்தார்.
சிட்டகாங்:
வங்காளதேசம் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்டாகாங்கில் இன்று நடைபெறுகிறது.
டாஸ்வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர் ஷிகர் தவான் 3 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இளம் வீரர் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். 85 பந்துகளில் சதம் கடந்த அவர், 126 பந்துகளில் இரட்டைச் சதம் என்ற சாதனையை எட்டினார். இதில் 23 பவுண்டரிகள், 9 சிக்சர்களும் அடங்கும். இது அவர் அடிக்கும் முதல் இரட்டை சதம் ஆகும்.
இரட்டைச் சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் நான்காவதாக இணைந்துள்ளார் இஷான் கிஷன். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா ஆகியோர் இரட்டை சதம் அடித்துள்ளனர்.
அவருக்கு பக்கபலமாக விராட் கோலியும் விளையாடினார். கோலி சதமடித்தார். 2வது விக்கெட்டுக்கு இஷான் கிஷன், விராட் கோலி ஜோடி 290 ரன்களை குவித்தது.
இஷான் கிஷன் 210 ரன்னும், விராட் கோலி 113 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர். ஷ்ரேயஸ் அய்யர் 3 ரன்னும், கே.எல்.ராகுல் 8 ரன்னும், அக்சர் படேல் 20 ரன்னும் எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்களை குவித்தது.
இதையடுத்து, 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்க உள்ளது.






