என் மலர்
கிரிக்கெட் (Cricket)

32, 33, 36 பந்துகளில் சதம்.. போட்டி போட்டு அதிவேக சதங்களை விளாசிய இந்திய வீரர்கள்
- பீகார் அணியில் சூர்யவன்ஷி, சகிபுல் கனி சதம் விளாசினர்.
- ஜார்க்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷன் சதம் விளாசினார்.
33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இதன் 'எலைட்' வகைப்பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'பிளேட்' வகைப்பிரிவில் நாகாலாந்து, பீகார், மிசோரம், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் அங்கம் வகிக்கின்றன.
இந்நிலையில் இந்த தொடரில் 3 இந்திய வீரர்கள் அதிரடியான ஆட்டத்தின் மூலம் அதிவேக சதம் அடித்து பல சாதனைகளை குவித்து வருகின்றனர். பிளேட் வகைப்பிரிவில் அருணாச்சல பிரதேசம் அணிக்கு எதிரான போட்டியில் பீகார் அணியை சேர்ந்த இளம் வீரர் சூர்யவன்ஷி 36 பந்தில் சதம் விளாசினார். இதன்மூலம் குறைந்த பந்தில் சதம் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் அவர் இடம் பிடித்தார்.
இதே போட்டியில் பீகார் அணியின் கேப்டன் சகிபுல் கனி 32 பந்தில் சதம் விளாசி சாதனை படைத்தார். இதன்மூலம் வைபவ் சாதனையை சகிபுல் முறியடித்தார்.
எலைட் வகைப்பிரிவில் கர்நாடகா அணிக்கு எதிரான போட்டியில் ஜார்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷன் 33 பந்தில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
ஒரு இந்தியரின் வேகமான லிஸ்ட் ஏ சதங்கள்:
32 பந்துகள்: சகிபுல் கனி (பீகார்)
33 பந்துகள்: இஷான் கிஷன் (ஜார்க்கண்ட்)
35 பந்துகள்: அன்மோல்பிரீத் சிங் (பஞ்சாப்)
36 பந்துகள்: வைபவ் சூர்யவன்ஷி (பீகார்)
40 பந்துகள்: யூசுப் பதான் (பரோடா)
41 பந்துகள்: உர்வில் படேல் (குஜராத்)
42 பந்துகள்: அபிஷேக் சர்மா (பஞ்சாப்)
முதல் தர கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த வீரர்கள்:-
29 பந்துகள் - ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க்
31 பந்துகள் - ஏபி டி வில்லியர்ஸ்
32 பந்துகள்: சகிபுல் கனி
33 பந்துகள்: இஷான் கிஷன்
35 பந்துகள் - அன்மோல்பிரீத் சிங்
36 பந்துகள் - கோரி ஆண்டர்சன்
36 பந்துகள் - வைபவ் சூர்யவன்ஷி
37 பந்துகள் - ஷாஹித் அப்ரிடி






