என் மலர்
நீங்கள் தேடியது "வைபவ் சூர்யவன்ஷி"
- முதலில் பேட்டிங் செய்த பீகார் அணி 177 ரன்கள் எடுத்தது.
- இதனையடுத்து விளையாடிய மகாராஷ்டிரா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா:
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் பீகார் - மகாராஷ்டிரா (குரூப் பி) அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மகாராஷ்டிரா அணியின் கேப்டன் பிரித்வி ஷா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பீகார் அணி தொடக்க ஆட்டக்காரர் ஆன வைபவ் சூர்யவன்ஷியின் அபார சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் அடித்தது. சூர்யவன்ஷி 108 ரன்களுடனும், ஆயுஷ் லோஹருகா 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதனையடுத்து 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய மகாராஷ்டிரா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன பிரித்வி ஷா அதிரடியாக ஆடி அணிக்கு வலு சேர்த்தார். வெறும் 30 பந்துகளில் 66 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த வீரர்களில் நிரஜ் ஜோஷி 30 ரன்கள், ரஞ்சித் நிகாம் 27 ரன்கள், நிகில் நாய்க் 22 ரன்கள் ஆகியோரின் கணிசமான பங்களிப்பால் மகாராஷ்டிரா அணி 19.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் அடித்த 3 விக்கெட்டுள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிரித்வி ஷா ஆட்ட நாயகன் விருது வென்றார்.
முன்னதாக இந்த போட்டியில் சதம் விளாசியதன் மூலம் புதிய சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். அதன்படி சையது முஸ்தாக் அலி கோப்பை தொடரில் இளம் வயதில் சதம் விளாசிய வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். வைபவ் 61 பந்துகளில் 108 ரன்களை விளாசினார். 14 ஆண்டுகள் 250 நாட்களில் வைபவ் சதம் அடித்து இந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.
- முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 297 ரன்கள் குவித்தது
- வைபவ் சூர்யவன்ஷி 42 பந்தில் 15 சிக்சர், 11 பவுண்டரிகளுடன் 144 ரன்கள் குவித்தார்.
தோஹா:
இளம் வீரர்களுக்கான ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
நேற்று நடைபெற்ற குரூப் ஏ லீக் போட்டியில் இந்தியா ஏ அணி, ஐக்கிய அரபு எமிரேட்ஸை எதிர்கொண்டது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 297 ரன்கள் குவித்தது
தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி ருத்ர தாண்டவம் ஆடி 32 பந்துகளில் சதமடித்து வரலாறு படைத்தார். அவர் 42 பந்தில் 15 சிக்சர், 11 பவுண்டரிகளுடன் 144 ரன்கள் குவித்தார். கேப்டன் ஜிதேஷ் சர்மாவும் அதிரடியாக ஆடி 32 பந்தில் 6 சிக்சர், 8 பவுண்டரியுடன் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த இன்னிங்சில் இந்திய அணி 25 சிக்சர், 24 பவுண்டரிகள் அடித்தது.
வைபவ் சூர்யவன்ஷி 15 சிக்ரும், ஜிதேஷ் சர்மா 6 சிக்சரும் அடித்தனர்.
அடுத்து ஆடிய யுஏஇ அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஏ அணி குரூப் ஏ பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியா ஏ அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 32 பந்துகளில் சதம் அடித்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான போட்டியில் அவர் இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்தினார்.
- முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 243 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- வைபவ் சூர்யவன்ஷி 78 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.
19 வயதுகுட்பட்டோருக்கான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 3 போட்டிகளையும் வென்று அசத்தியது.
இதனையடுத்து ஆஸ்திரேலியா அண்டர்-19 அணிக்கும் இந்தியா அண்டர்-19 அணிக்கும் இடையிலான முதல் யூத் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள இயான் ஹீலி ஓவலில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 243 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சத்தத்தை பதிவு செய்துள்ளார்.
அவர் 78 பந்தில் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து விளையாடிய அவர் 86 பந்தில் 113 ரன்கள் விளாசி அவுட் ஆனார். இதில் 9 பவுண்டரிகளும் 8 சிக்சர்களும் அடங்கும்.
அவரது அதிரடியான ஆட்டம் அனைவரையும் கவர்ந்துள்ளது. அவர் இந்திய அணிக்கான தேர்வில் சீக்கிராமாக இடம் பிடிப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சூர்யவன்ஷி 7 போட்டிகளில் விளையாடி 252 ரன்கள் குவித்தார்.
- குஜராத் அணிக்கு எதிராக மிகக் குறைந்த பந்துகளில் சதம் அடித்து வரலாற்று சாதனை ஒன்றினையும் நிகழ்த்தி இருந்தார்.
நடைபெற்று முடிந்த 2025-ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் மெகா ஏலத்தின் போது மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் அறிமுகமான வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
14 வயதான அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 7 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் என 252 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.
அதிலும் குறிப்பாக 200-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடும் அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மிகக் குறைந்த பந்துகளில் சதம் அடித்து வரலாற்று சாதனை ஒன்றினையும் நிகழ்த்தி இருந்தார்.
இந்நிலையில் மிகத் திறமை வாய்ந்த இளம் வீரராக பார்க்கப்படும் வைபவ் சூர்யவன்ஷி தனது அடுத்த கட்ட கிரிக்கெட் கரியரை வெகு சிறப்பாக ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டும்? என்று குறித்த சில ஆலோசனைகளை இந்திய அணியின் முன்னாள் வீரரான அம்பதி ராயுடு வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
வைபவ் சூர்யவன்ஷியிடம் பிரைன் லாராவை போன்ற பேட்டிங் டெக்னிக் இருப்பதால் அவரிடம் ஆலோசனைகளை பெற்று தன்னிடம் இருக்கும் சிறு சிறு குறைகளை நிவர்த்தி செய்தால் மிகப்பெரிய வீரராக மாறக்கூடிய வாய்ப்பு அவரிடம் உள்ளது. அவருடைய பேட் வேகம் என்பது மிகச் சிறப்பாக உள்ளது. பந்தை அவர் அடிக்கும் விதம் அற்புதமாக இருக்கிறது. ஆனாலும் இன்னும் அவர் அதனை மெருகேற்ற வேண்டியது அவசியம்.
எனவே அவரைப் போன்று பேட்டிங் செய்யும் லாராவிடமிருந்து பேட்டிங் செய்யும் நுட்பத்தை அவர் கற்றுக் கொண்டால் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுக்க அனைத்து தகுதிகளும் வைபவ் சூர்யவன்ஷியிடம் உள்ளது.
என்று அம்பதி ராயுடு கூறினார்.
- வைபவ் சூர்யவன்ஷி 78 பந்தில் 13 பவுண்டரி, 10 சிக்சர்களுடன் 143 ரன்கள் விளாசினார்.
- 52 பந்தில் அதிவேக சதம் அடித்து சூர்யவன்ஷி அசத்தினார்.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற 4ஆவது போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 363 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 78 பந்தில் 13 பவுண்டரி, 10 சிக்சர்களுடன் 143 ரன்கள் விளாசினார். 52 பந்தில் சூர்யவன்ஷி சதம் விளாசினார்.
இதன்மூலம் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக பாகிஸ்தான் வீரர் கம்ரான் குலாம் 53 பந்தில் சதம் அடித்திருந்தார்.
மேலும், 10 சிக்சர்கள் அடித்து ஒரு போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் 35 பந்தில் சதம் விளாசி சாதனைப் படைத்திருந்தார்.
அதிவேக சதம் விளாசி 143 ரன்கள் குவித்த பின்பு பேசிய வைபவ் சூர்யவன்ஷி, "சுப்மன் கில் 100 மற்றும் 200 ரன்கள் எடுத்தபோது அவரிடமிருந்து எனக்கு நிறைய உத்வேகம் கிடைத்தது. அடுத்தப் போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன். 50 ஓவர்களும் களத்தில் நிலைத்து நின்று விளையாட முயல்வேன். எவ்வளவு அதிக ரன்கள் குவிக்கிறேனோ, அணிக்கு அவ்வளவு சாதகம் தான்" என்று தெரிவித்தார்.
- பாகிஸ்தான் வீரர் கம்ரான் குலாம் 53 பந்தில் சதம் அடித்திருந்தார்.
- சூர்யவன்ஷி 52 பந்தில் சதம் விளாசி சாதனைப் படைத்துள்ளார்.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 4ஆவது போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 363 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 78 பந்தில் 13 பவுண்டரி, 10 சிக்சர்களுடன் 143 ரன்கள் விளாசினார்.
52 பந்தில் சதம் விளாசினார். இதன்மூலம் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக பாகிஸ்தான் வீரர் கம்ரான் குலாம் 53 பந்தில் சதம் அடித்திருந்தார்.
மேலும், 10 சிக்சர்கள் அடித்து அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் 35 பந்தில் சதம் விளாசி சாதனைப் படைத்திருந்தார்.
- வைபவ் சூர்யவன்ஷி 31 பந்துகளில் 86 ரன்கள் அடித்து அவுட்டானார்.
- 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2 -1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள U19 இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 பலநாள் போட்டிகளில் விளையாடுகிறது. ஜூன் 27 முதல் ஜூலை 7 வரை 5வது ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது.
அவ்வகையில் நேற்று U19 இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
மழை காரணமாக போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 269 என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியால் 34.3 ஓவர்களில் 274 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்ஷி 31 பந்துகளில் 86 ரன்கள் அடித்து அவுட்டானார்.
இதன்மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2 -1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 20 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதன்மூலம், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் போட்டியில் குறைந்த பந்துகளில் (20) அரைசதம் விளாசிய 2வது இந்தியர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
இதற்கு முன் 2016ல் நேபாளத்திற்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட்18 பந்துகளில் அரை சதம் விளாசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்போட்டியில் 9 சிக்ஸர்களை வைபவ் சூர்யவன்ஷி அடித்தார். இதன்மூலம் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் போட்டியில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
- ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடிய வைபவ் சூரியவன்ஷி U19 இந்திய அணியில் இடம்பிடித்தார்.
- ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் விளையாடி வருகிறது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள U19 இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 பலநாள் போட்டிகளில் விளையாடுகிறது. ஜூன் 27 முதல் ஜூலை 7 வரை 5வது ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது.
அவ்வகையில் நேற்று U19 இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 42.2 ஓவரில் 174 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து, 175 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 24 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
அதிரடியாக விளையாடிய வைபவ் சூரியவன்ஷி 19 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார்.
- குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சதம் விளாசி சாதனைப் படைத்தார்.
- தொடக்க வீரராக களம் இறங்கி பயமின்றி அதிரடியாக விளையாடியது அனைவரையும் ஈர்த்தது.
ஐபிஎல் 2025 சீசன் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 14 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி இடம் பிடித்திருந்தார். இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிராக 35 பந்துகளில் சதம் விளாசி சாதனைப் படைத்தார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் பீகார் சென்றிருந்த பிரதமர் மோடி, சூர்யவன்ஷி சந்தித்தது தொடர்பான படத்தை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பிரதமர் மோடி "பாட்னா விமான நிலையத்தில், இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்தேன். அவரது கிரிக்கெட் திறமைகள் நாடு முழுவதும் போற்றப்படுகின்றன. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- ஜூன் 27 முதல் ஜூலை 7 வரை 5வது ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது.
- வைபவ் சூரியவன்ஷி U19 இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள U19 இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 பலநாள் போட்டிகளில் விளையாடுகிறது. ஜூன் 27 முதல் ஜூலை 7 வரை 5வது ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் 14 வயது வைபவ் சூரியவன்ஷி U19 இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
இந்திய U19 அணி வீரர்கள்:
ஆயுஷ் மத்ரே (கேப்டன்), வைபவ் சூரியவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, மௌல்யராஜ்சிங் சாவ்தா, ராகுல் குமார், அபிக்யான் குண்டு (துணை கேப்டன் & WK), ஹர்வன்ஷ் சிங் (WK), ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க் சௌஹான், கிலான் படேல், ஹெனில் படேல், யுதாஜித் குஹா, ராவ் ராகவேந்திரா, முகமது ஏனான், ஆதித்யா சிங், அன்மோலி ரனா
- ராஜஸ்தான் அணி 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
- ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அரைசதம் அடித்து அசத்தினார்.
டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 62-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 187 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது ராஜஸ்தான் பெற்ற 4வது வெற்றி ஆகும்.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அரைசதம் அடித்து அசத்தினார்.
இந்நிலையில், போட்டி முடிந்து இரு அணி வீரர்களும் கைகுலுக்கும்போது தோனியின் காலை தொட்டு வைபவ் சூர்யவன்ஷி வணங்கினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
- கேலோ இந்தியா யூத் கேம்ஸ் விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
- அப்போது பேசிய அவர், பீகார் மண்ணின் மகன் வைபவ் சூர்யவன்ஷி சிறப்பாக விளையாடினார் என்றார்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் கேலோ இந்தியா யூத் கேம்ஸ் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
நான் ஐ.பி.எல். தொடர் பார்த்தேன். பீகார் மண்ணின் மகன் வைபவ் சூர்யவன்ஷி சிறப்பாக விளையாடினார். இந்த இளம் வயதில் அவர் பெரிய சாதனையை படைத்துள்ளார்.
இந்த சாதனையின் பின்னணியில் அவரது கடின உழைப்பு உள்ளது. அவர் தனது திறமையை வெளிக்கொண்டு வர பல போட்டிகளில் விளையாடியுள்ளார்.
நீங்கள் எவ்வளவு அதிகமாக விளையாடுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் பிரகாசிப்பீர்கள். முடிந்தவரை விளையாட்டு போட்டிகளில் பங்கெடுத்துக் கொள்ளவேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எப்போதும் விளையாட்டுத் துறைக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.
புதிய கல்வி கொள்கையான தேசிய கல்வி கொள்கையில் விளையாட்டை கல்வியின் ஒரு பகுதியாக மாற்றி உள்ளோம். நாட்டில் நல்ல வீரர்களுடன் சிறந்த விளையாட்டு நிபுணர்களை உருவாக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும் என தெரிவித்தார்.
பீகாரின் சமஸ்திபூர் பகுதியைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் ஐ.பி.எல். தொடரில் விளையாடும் இளம் வீரர் என்ற பெருமையை சூர்யவன்ஷி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






