என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "U19 World Cup"

    • முதலில் பேட் செய்த இந்திய அணி 48.4 ஓவரில் 238 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அபிக்யான் 80 ரன்னும், வைபவ் சூர்யவன்ஷி 72 ரன்னும் எடுத்தனர்.

    ஜார்ஜியா:

    19 வயதுக்கு உட்பட்டவருக்கான (யு19) ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 7-ம் தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். லீக் முடிவில் 4 பிரிவில் இருந்தும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும். இந்தச் சுற்றில் விளையாடும் 6 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இதன் முடிவில் 2 பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக 49 ஓவராக குறைக்கப்பட்டது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி 48.4 ஓவர்களில் 238 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அபிக்யான் 80 ரன்னும், வைபவ் சூர்யவன்ஷி 72 ரன்னும் எடுத்தனர்.

    வங்கதேச அணி சார்பில் அல் பஹத் 5 விக்கெட்டும், இக்பால் எமான், ஹக்கிம் தமிம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. மழை மீண்டும் குறுக்கிட்டதால் வங்கதேச அணி 29 ஓவரில் 165 இலக்கு என நிர்ணயிக்கப்பட்டது.

    ஹக்கிம் தமிம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். ரிபாத் பெக் 37 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், வங்கதேச அணி 28.3 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் விஹான் மல்கோத்ரா 4 விக்கெட்டும், கிலான் படேல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகி விருதை விஹான் மல்கோத்ரா வென்றார்.

    • முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா 107 ரன்னில் சுருண்டது.
    • டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவுக்கு 96 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் இன்று தொடங்கியது. இந்தியா "பி" பிரிவில் இடம் பிடித்துள்ளது. இந்தியா இன்று தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய அமெரிக்கா ஹெனில் படேல் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 107 ரன்னில் சுருண்டது. அமெரிக்கா அணியால் 35.2 ஓவர்களை மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது.

    பின்னர் 108 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 2 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். இந்தியா 4 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்திருக்கும்போது வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் மழை பெய்தது. இதனால் நீண்ட நேரம் ஆட்டம் தடைபட்டது.

    மழை நின்றபின் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. அப்போது டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவுக்கு 37 ஓவரில் 96 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    வேதாந்த் திரிவேதி (2), ஆயுஷ் மாத்ரே (19), விஹான் மல்ஹோத்ரா (18) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அபிஜியான் கந்து ஆட்டமிழக்காமல் 41 பந்தில் 42 ரன்கள் சேர்க்க இந்தியா 17.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • தொடக்க நாளில் இந்திய அணி அமெரிக்காவை எதிர்கொள்கிறது.
    • ஆயுஷ் மாத்ரே தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது

    19 வயதுக்குட்பட்டவருக்கான ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை 1988-ம் ஆண்டு ஐ.சி.சி. அறிமுகப்படுத்தியது.

    இதுவரை 15 போட்டி தொடர் நடைபெற்றுள்ளது. கடைசியாக 2024-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா பட்டம் வென்றது.

    16-வது ஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்டவருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய 2 நாடுகள் இணைந்து நடத்துகிறது.இந்தப் போட்டி நாளை (15- ந் தேதி) தொடங்குகிறது. பிப்ரவரி 7-ந் தேதி வரை இந்த போட்டி நடைபெறு கிறது.

    இதில்16 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள நாடுகள் விவரம்:-

    ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஜப்பான் (ஏ பிரிவு), இந்தியா, வங்காளதேசம், நியூசிலாந்து, அமெரிக்கா (பி பிரிவு), இங்கிலாந்து, பாகிஸ்தான், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து (சி பிரிவு), தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், தான்சானியா (டி பிரிவு).

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் 4 பிரிவில் இருந்தும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த சுற்றில் விளையாடும் 6 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இதன் முடிவில் 2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    தொடக்க நாளில் 3 ஆட்டம் நடக்கிறது. இந்திய அணி அமெரிக்காவை எதிர்கொள்கிறது. ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டி தொடரில் இந்திய அணி 5 முறை உலக கோப்பையை வென்றுள்ளது.

    நாளை நடைபெறும் மற்ற ஆட்டங்களில் ஜிம்பாப்வே - ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் - தான் சானியா அணிகள் மோதுகின்றன.

    • உலக கோப்பை தொடருக்கு முன்பாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி விளையாடுகிறது.
    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சூர்யவன்ஷி செயல்படுவார்.

    மும்பை:

    19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 15 முதல் பிப்ரவரி 6 வரை நடக்கவுள்ளது. இந்த தொடர் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறுகிறது.

    இந்நிலையில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமிக்கப்பட்டுள்ளார்.

    உலக கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடுகிறது. இந்த தொடரில் வைபவ் சூர்யவன்ஷி கேப்டனாகவும் ஆரோன் ஜார்ஜ் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    ஏனெனில் ஆயுஷ் மாத்ரே மற்றும் விஹான் மல்ஹோத்ரா காயம் காரணமாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தவறவிடுகின்றனர்.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஜனவரி 3, 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் பெனோனியில் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.

    U19 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:-

    ஆயுஷ் மத்ரே (கேப்டன்), விஹான் மல்ஹோத்ரா (துணை கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, ஆரோன் ஜார்ஜ், வேதாந்த் திரிவேதி, அபிக்யான் குண்டு (விக்கெட் கீப்பர்), ஹர்வன்ஷ் சிங் (விக்கெட் கீப்பர்), ஆர்எஸ் அம்ப்ரிஷ், கனிஷ்க் சௌஹான், கிலன் ஏ படேல், மொஹமத் சிங் ஏனான், டிஹில், குமார், டெனில், ஹெனில்.

    • சூப்பர் சிக்ஸ் சுற்றில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின.
    • இதில் 214 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது

    ப்ளூம்போன்டைன்:

    15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடந்துவருகிறது. நேற்று சூப்பர் சிக்ஸ் சுற்று தொடங்கியது.

    சூப்பர் சிக்ஸ் சுற்றின் முதல் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 295 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய முஷீர் கான் 131 ரன்கள் குவித்தார்.

    நியூசிலாந்து சார்பில் மேசன் கிளார்க் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

    இதையடுத்து, 296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது நியூசிலாந்து. இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி விரைவில் விக்கெட்டுகளை இழந்தது.

    இறுதியில், நியூசிலாந்து 28.1 ஓவரில் 81 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 214 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    இந்திய அணி சார்பில் சாமி பாண்டே 4 விக்கெட்டுகளும், ராஜ் லிம்பானி, முஷீர் கான் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்திய அணியின்முஷீர் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    • முதலில் ஆடிய இந்தியா 297 ரன்கள் குவித்தது.
    • இதில் இந்திய வீரர்கள் 2 பேர் சதமடித்து அசத்தினர்.

    புளோம்பாண்டீன்:

    15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. தற்போது சூப்பர் சிக்ஸ் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் குரூப் 1 பிரிவில் இந்தியா இடம் பெற்றிருந்தது. முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தை 214 ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

    இந்நிலையில், இந்திய அணி தனது 2-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் நேற்று நேபாளத்துடன் மோதியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 297 ரன்கள் குவித்தது. சச்சின் தாஸ் 116 ரன்னும், உதய் சஹாரன் 100 ரன்னும் குவித்தனர்.

    நேபாள அணி சார்பில் குல்சன் ஜா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    இதையடுத்து, 298 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாளம் களமிறங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய நேபாளம் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 165 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் இந்தியா 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

    இந்தியா சார்பில் சவுமி பாண்டே 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். நடப்பு தொடரில் இந்திய அணி தோல்வியே சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×