என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    U19 உலக கோப்பை: இந்திய அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லுமா? இங்கிலாந்துடன் நாளை பலப்பரீட்சை
    X

    U19 உலக கோப்பை: இந்திய அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லுமா? இங்கிலாந்துடன் நாளை பலப்பரீட்சை

    • இந்திய அணி 6-வது தடவையாக சாம்பியன் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
    • இந்திய அணி 11-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

    ஹராரே:

    16-வது 19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

    இதன் இறுதிப்போட்டி நாளை (6-ந்தேதி) நடைபெறுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு தொடங்குகிறது.

    ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி இந்தப் போட்டி தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த அணி இதுவரை தோல்வி எதையும் சந்திக்கவில்லை.

    இதனால் இந்திய அணி கோப்பையை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி 5 முறை 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. 2000, 2008, 2012, 2018, 2022 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்று இருந்தது.

    11-வது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணி 6-வது தடவையாக சாம்பியன் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. இந்திய அணி லீக் ஆட்டங்களில் அமெரிக்கா (6 விக்கெட்), வங்கதேசம் (18 ரன்), நியூசிலாந்து (7 விக்கெட்), சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஜிம்பாப்வே (204 ரன்), பாகிஸ்தான் (58 ரன்) ஆகிய அணிகளை வீழ்த்தி இருந்தது. நேற்று நடந்த அரைஇறுதியில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

    இங்கிலாந்து அணி 2-வது முறையாக கோப்பையை வெல்லும் வேட் கையில் உள்ளது. அந்த அணி 1998-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது. 3-வது தடவையாக இறுதிப்போட்டியில் விளையாடுகிறது.

    இங்கிலாந்து அணியும் தோல்வி எதையும் சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. அந்த அணி லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான் (36 ரன்), ஜிம்பாப்வே (8 விக்கெட்), ஸ்காட்லாந்து (252 ரன்), சூப்பர் சிக்ஸ் சுற்றில் வங்காள தேசம் (7விக்கெட்), நியூசிலாந்து (65 ரன்), ஆகியவற்றை வீழ்த்தி இருந்தது. அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவை 27 ரன் வித்தியாசத்தில் தோற்க டித்தது.

    Next Story
    ×