என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டி20 தரவரிசை: டாப் 10-ல் இடம் பிடித்த இஷான் கிஷன்... முதல் இடத்தில் பாகிஸ்தான் வீரர்
- இஷான் கிஷன் 17 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார்.
- டி20 பந்து வீச்சு தரவரிசையில் ஜிம்பாப்வே வீரர் பிராட் எவன்ஸ் 10 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏ குரூப்-ல் இடம் பெற்ற இந்திய அணி, 3 போட்டிகளில் விளையாடி 3 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
3 போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் 2 போட்டியில் அரை சதம் அடித்து அசத்தினார்.
இந்த நிலையில் ஐசிசி ஆடவருக்கான டி20 தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி இஷான் கிஷன் 17 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணியின் ரிக்கல்டன் 22 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை பிடித்துள்ளார். இலங்கை வீரர் பதும் நிசங்கா 3 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். திலக் வர்மா 1 இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
டி20 பந்து வீச்சு தரவரிசையை பொறுத்தவரை ஜிம்பாப்வே அணி வீரர் பிராட் எவன்ஸ் 10 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரர்களில் பும்ரா 6 இடங்கள் முன்னேறி 15-வது இடத்திற்கும் அக்சர் படேல் 4 இடங்கள் முன்னேறி 14-வது இடத்திற்கு முன்னேறி உள்ளனர். இதை தவிர பெரிய அளவில் மாற்றம் இல்லை.
ஆல் ரவுண்டர்களில் பாகிஸ்தான் வீரர் சைம் அயூப் முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரர்களில் ஷிவம் துபே 3 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார்.






