search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDvsNZ"

    • விராட் கோலி 117 ரன்களில் தனது விக்கெட்டை பறிக் கொடுத்தார்.
    • நியூசிலாந்து சார்பில் டிம் சௌதீ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி சிறப்பான துவக்கத்தை கொடுத்தது. ரோகித் சர்மா 29 பந்துகளில் 47 ரன்களை விளாசி அவுட் ஆனார். இதில் 4 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும்.

    இவருடன் ஆடிய சுப்மன் கில் 65 பந்துகளில் 79 ரன்களை குவித்த நிலையில், காயம் காரணமாக களத்தை விட்டு வெளியேறினார். அடுத்து வந்த விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 50-வது சதத்தை அடித்த விராட் கோலி 117 ரன்களில் தனது விக்கெட்டை பறிக் கொடுத்தார். 

    ஷ்ரேயஸ் அய்யர் தன் பங்கிற்கு 105 ரன்களையும், கே.எல். ராகுல் 39 ரன்களையும் குவிக்க, இந்திய அணி போட்டி முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்களை குவித்துள்ளது. நியூசிலாந்து சார்பில் டிம் சௌதீ 3 விக்கெட்டுகளையும், போல்ட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

    • உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகளில் இந்தியா தோல்வியை சந்திக்கவில்லை.
    • நியூசிலாந்து அணி விளையாடிய 9 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று இருக்கிறது.

    உலகக் கோப்பை 2023 தொடரின் அரையிறுதி போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நவம்பர் 19-ம் தேதி நடைபெறும் இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும்.

    நடப்பு உலகக் கோப்பை தொடரில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி இன்றைய போட்டியிலும் வெற்றிநடையை தொடருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்-ஐ தேர்வு செய்து இருக்கிறது. 

    • நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. இதில், நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், சிராஜ், பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

    இதில், தற்போது இந்திய அணி 15.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அங்கு ஏற்பட்ட பனி மூட்டம் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    நியூசிலாந்து அணி 155 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்ததையடுத்து இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.
    கான்பூர்:

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 345 ரன்கள் குவித்த நிலையில், நியூசிலாந்து 296 ரன்கள் சேர்த்தது. பின்னர் 49 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா, 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது டிக்ளேர் செய்தது. இதனால் மொத்தம் 283 ரன்கள் இந்தியா முன்னிலைப் பெற்றது. 

    இதையடுத்து  284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 4ம் நாள் ஆட்டநேர முடிவில், ஒரு விக்கெட் இழப்பிற்கு 4 ரன்கள் எடுத்திருந்தது. டாம் லாதம் 2 ரன்களுடனும், வில்லியம் சோமர்வில் ரன்கள் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    அரை சதம் அடித்த டாம் லாதம்

    இன்று கடைசி நாள் ஆட்டத்தின்போது, 279 ரன்கள் தேவை என்ற நிலையில் இருவரும் இன்று களம் இறங்கினர். இந்திய ஆடுகளத்தில் கடைசி நாள் ஆட்டத்தில் 279 ரன்கள் எடுப்பது மிகவும் கடினம். இதனால் இந்தியா எளிதில் வெற்றி பெறும் என கருதப்பட்டது.

    ஆனால், மதிய உணவு இடைவேளை வரை முதல் செசனில் டாம் லாதம், வில்லியம் சோமர்வில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். அஸ்வின், அக்சார் பட்டேல், உமேஷய் யாதவ், இஷாந்த் சர்மா, ஜடேஜா ஆகியோர் மாறிமாறி ஓவர்கள் வீசியும் பலன் அளிக்கவில்லை.

    நியூசிலாந்து அணி மதிய உணவு இடைவேளை 35 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் சேர்த்திருந்தது. அதன்பின்னர் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பத் தொடங்கியது. சோமர்வில் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். அரை சதம் கடந்த டாம் லாதம் 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார். தேநீர் இடைவேளைக்கு பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. 

    வில்லியம்சன் விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியில் ஜடேஜா

    கேப்டன் வில்லியம்சன் 24 ரன்கள் மட்டுமே சேர்த்தார். பின்வரிசை வீரர்களும் விரைவில் ஆட்டமிழந்தனர். 155 ரன்களில் 9  விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால், கடைசி விக்கெட் ஜோடியான அஜாஸ் பட்டேல், ரச்சின் ரவீந்திரா இருவரும் நங்கூரம் போல் நிலைத்து நின்றனர். அவர்களின் விக்கெட்டை வீழ்த்த இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்தும் பலனில்லை. இதனால் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. எனவே, போட்டி டிராவில் முடிந்தது. 

    இப்போட்டியில் நியூசிலாந்து அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றியிருக்கிறார் ரச்சின் ரவீந்திரா. நீண்ட நேரம் களத்தில் நின்ற இவர் 91 பந்துகள் தாக்குப்பிடித்து ஆடினார். 
    ×