என் மலர்
கிரிக்கெட் (Cricket)

நியூசிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து மனம் திறந்த சூர்யகுமார்!
- முதல் 3 டி20 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்தியா கைப்பற்றியது
- 4 ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்தது. இதையடுத்து 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 18.4 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை நியூசிலாந்து வெற்றி கொண்டது.
முதல் 3 டி20 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்தியா கைப்பற்றியுள்ள நிலையில் நியூசிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
தோல்விக்கு பின்பு பேசிய கேப்டன் சூர்யகுமார், "நியூசிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் வேண்டுமென்றேதான் 6 பேட்டர்களுடன் நாங்கள் விளையாடினோம். 200 ரன்களை சேஸ் செய்யும்போது 2-3 விக்கெட்டுகளை இழந்தாலும் எங்களின் திறன் எப்படி உள்ளது என்பதை பரிசோதிக்கவே இவ்வாறு செய்தோம். டி20 உலக கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள அனைவருமே இந்த போட்டியில் இடம்பெற வேண்டும் என நினைத்தோம்" என்று தெரிவித்தார்.






