search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூர்யகுமார் யாதவ்"

    • இந்தியா வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது.
    • இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரராக சாம்சன் களமிறங்க உள்ளார்.

    குவாலியர்:

    இந்தியா-வங்கதேச அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குவாலியரில் இன்று நடக்கிறது. வங்கதேச கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் மோதிய 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

    இதைத்தொடர்ந்து இந்தியா-வங்கதேச அணிகள் இடையிலான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீமந்த் மாதவ்ராவ் சிந்தியா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா களமிறங்குவார் என இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை சஞ்சு சாம்சன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    • வங்கதேசத்துக்கு எதிரான, T20 போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
    • 3 வருடங்களுக்கு பிறகு தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இந்திய டி20 அணிக்கு தேர்வு

    இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் மட்டும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

    சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான, T20 போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணியில் அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் (WK) , ரிங்கு சிங் ,ஹர்திக் பாண்டியா, ரியான் பராக் ,நிதிஷ் குமார் ரெட்டி ,சிவம் துபே ,வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னாய் , அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

    சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், குல்தீப் யாதவ், அக்சர் படேல் மற்றும் ரிஷப் பண்ட ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

    சஞ்சு சாம்சன் முதன்மை விக்கெட் கீப்பர்-பேட்டராகவும் ஜிதேஷ் சர்மா பேக்கப் கீப்பராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    3 வருடங்களுக்கு பிறகு தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இந்திய டி20 அணிக்கு தேர்வாகியுள்ளார்.

    ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி 150 கிமீ வேகத்தில் பந்து வீசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய மயங்க் யாதவ் முதன்முறையாக இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார்.

    • விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 7-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
    • விநாயகர் சிலைகள் அடங்கிய மண்டல்களில் கண்காட்சி வைக்கப்படுவது வழக்கம்.

    அகமதாபாத்:

    விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கடந்த 7-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விநாயகர் சிலைகள் அடங்கிய மண்டல்களில் கண்காட்சியும் வைக்கப்பட்டு வருவது வழக்கம்.

    இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்டு இருந்த ஒரு மண்டல் பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    அதில், சமீபத்தில் இந்தியா டி20 உலகக் கோப்பை வெல்ல காரணமாக அமைந்த சூர்யகுமார் யாதவின் கேட்ச் தத்ரூபமாக அமைக்கப்பட்டு இருந்தது.

    இதைக்கண்ட சிலர் அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

    • இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • தற்போது உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டியில் ஆர்வம் காட்டி வருகிறார்.

    இந்தியாவின் டி20 அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்ய குமார் யாதவ். இலங்கை தொடருக்கான இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதிரடி வீரரான இவர் டி20 கிரிக்கெட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார். டெஸ்ட் போட்டியில் இடம் பிடித்து விளையாட விரும்புகிறார். இந்த அணி வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடினால்தான் தேசிய அணியில் இடம் என பிசிசிஐ தெரிவித்திருந்தது.

    இதனால் புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் சூர்யகுமார், ஷ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இந்தியா வங்கதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

    இந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பதுதான் முக்கியம் என இவர்கள் கருதுகிறார்கள். விரைவில் துலீப் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா "சி" அணியில் சூர்யகுமார் இடம் பிடித்துள்ளார்.

    இந்த நிலையில்தான் புச்சிபாபு கிரிக்கெட்டில் தமிழக அணிக்கு எதிராக விளையாடும்போது, சூர்யகுமாருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் காரணமாக துலீப் டிராபி தொடரில் விளையாடுவாரா? என்பது சந்தேகம்தான்.

    இதனால் இந்திய டெஸ்ட் அணியில் விளையாட விரும்பும் சூர்யகுமாருக்கு காயம் வழிவிடுமா? என்பதை பார்க்க வேண்டும்.

    தமிழ்நாடு அணிக்கெதிராக மும்பைக்காக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 38 பந்தில் 30 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடங்கும். தமிழ்நாடு லெவன் 379 ரன்கள் எடுத்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் 156 ரன்னில் சுருண்டது.

    சூர்யகுமார் யாதவ் முதல் தர கிரிக்கெட்டில் 82 போட்டிகளில் 5,628 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 43.62 ஆகும். சூர்யகுமார் யாதவ் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடியுள்ளார்.

    • பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் மனு பாக்கர் இரு வெண்கலம் கைப்பற்றினார்.
    • இந்திய டி20 அணி கேப்டனாக சூர்யகுமார் நியமனம் செய்யப்பட்டார்.

    புதுடெல்லி:

    சமீபத்தில் நடந்த பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் வீராங்கனை இரு வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றி அசத்தினார்.

    இந்நிலையில், துப்பாக்கி சுடும் வீராங்கனையான மனு பாக்கர் கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவை சமீபத்தில் சந்தித்தார்.

    இதுதொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த மனுபாக்கர், இந்தியாவின் மிஸ்டர் 360 உடன் ஒரு புதிய விளையாட்டின் நுட்பங்களைக் கற்றுக்கொள்வது என தலைப்பிட்டுள்ளார்.

    மனு பாக்கர் பேட்டராகவும், சூர்யகுமார் யாதவ் துப்பாக்கி சுடும் வீரராகவும் போஸ் கொடுத்தனர். இரு வீரர்களுக்கு இடையிலான உரையாடல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    டி20 உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச், இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவியதுடன், கோப்பையை கைப்பற்றவும் உதவியது. இதனால் இந்திய டி20 அணி கேப்டனாக சூர்யகுமார் நியமிக்கப்பட்டார்.


    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.
    • நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ஆடி 26 பந்தில் 7 சிக்சர்கள் உள்பட 65 ரன்கள் குவித்தார்.

    டிரினிடாட்:

    வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய ஸ்டப்ஸ் 76 ரன்கள் எடுத்தார்.

    175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 17.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ஆடி 26 பந்தில் 7 சிக்சர்கள் உள்பட 65 ரன்கள் குவித்தார்.

    ஷாய் ஹோப் அரைசதம் அடித்த நிலையில் 51 ரன்னிலும், அலிக் அத்தானஸ் 40 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    இந்நிலையில், நிக்கோலஸ் பூரன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவை முந்தி 3-வது இடம்பிடித்தார்.

    இந்தப் பட்டியலில் முதலிடத்தில் 205 சிக்சர்களுடன் ரோகித் சர்மாவும், 173 சிக்சர்களுடன் மார்ட்டின் கப்தில் 2வது இடத்திலும் உள்ளனர். நிக்கோலஸ் பூரன் 139 சிக்சருடன் 3வது இடம் பிடித்துள்ளார்.

    137 சிக்சருடன் ஜோஸ் பட்லர் 4வது இடமும், 136 சிக்சருடன் சூர்யகுமார் யாதவ் 5வது இடத்திலும் உள்ளனர்.

    • பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • இந்தியாவில் ஒவ்வொரு மணிநேரமும் 4 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகின்றனர்.

    கொல்கத்தாவில் 31 வயது பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தியாவில் தினமும் 86 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. சொல்லப்போனால் ஒவ்வொரு மணிநேரமும் 4 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகின்றனர். அவ்வகையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக இந்தியா மாறி வருவதாக புள்ளிவ்விரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், இந்திய டி20 கிரிக்கெட் அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி வைத்துள்ளார்.

    அதில், உங்கள் வீட்டு பெண்களை பாதுகாத்து கொள்ளுங்கள் என்று சொல்வதை விடுத்து, உங்கள் வீட்டு ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை மதிக்க சொல்லிக் கொடுங்கள். அப்பா, அண்ணன், கணவன், நண்பன் என அனைவருக்கும் பெண்களை மதிக்க சொல்லிக் கொடுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • நாளை தொடங்கும் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அந்த ரசிகர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. கடந்த செவ்வாய் கிழமை அன்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியை சூப்பர் ஓவரில் இந்திய அணி வென்றது. இந்த வெற்றி இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றதும் கிடைத்த முதல் வெற்றியாகும்.

    இதனை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாளை தொடங்கும் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில், பயிற்சியில் ஈடுபட்டு இருந்த விராட் கோலியை இலங்கை ரசிகர்கள் கேலி செய்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. பயிற்சில் ஈடுபட்ட கோலியை பார்த்து ரசிகர்கள்'சோக்லி சோக்லி' என்று அழைத்ததும், அதற்கு அவர் கோபமடைந்த சம்பவம் அரங்கேறியது.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்டோர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ரசிகர் ஒருவர் கோலியை 'சோக்லி சோக்லி' என்று அழைப்பதும் இதனால் வருத்தமடையும் கோலி, அந்த ரசிகரை பார்த்து 'இங்கே இல்லை' என்று கூறுகிறார்.

    இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அந்த ரசிகர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    • விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
    • கோலி 125 போட்டிகளில் விளையாடி மைல்கல்லை கடந்தார்.

    இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் சூர்யகுமார் யாதவ். முழு நேர கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தனது பயணத்தை வெற்றியுடன் துவங்கியுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 43 ரன்களில் இலங்கையை வீழ்த்திய இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 58 ரன்களை விளாசி இருக்கிறார். போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து, போட்டியின் ஆட்ட நாயகன் விருது சூர்யகுமார் யாதவுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது வென்றதன் மூலம் சூர்யகுமார் யாதவ் விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றுள்ளார். சூர்யகுமார் யாதவ் 69 போட்டிகளில் விளையாடி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். மறுபக்கம் விராட் கோலி 125 போட்டிகளில் விளையாடி இந்த மைல்கல்லை கடந்தார்.

    விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடிய கடைசி போட்டி 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த போட்டி முடிந்ததும் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    அதிக ஆட்டநாயகன் விருது வென்ற வீரர்கள்:

    சூர்யகுமார் யாதவ் 69 போட்டிகளில் 16 முறை (இந்தியா)

    விராட் கோலி 126 போட்டிகளில் 16 முறை (இந்தியா)

    சிக்கந்தர் ராசா 91 போட்டிகளில் 15 முறை (ஜிம்பாப்வே)

    முகமது நபி 129 போட்டிகளில் 14 முறை (ஆப்கானிஸ்தான்)

    ரோகித் சர்மா 159 போட்டிகளில் 14 முறை (இந்தியா)

    • டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இந்தியா 213 ரன்களை குவித்தது.

    பல்லகெலே:

    இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால், சுப்மன் கில் இறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால் பவர்பிளே முடிவில் இந்திய அணி 74 ரன்களை சேர்த்தது.

    முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்த நிலையில் சுப்மன் கில் 34 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஜெய்ஸ்வால் 40 ரன்னில் அவுட்டானார்.

    தொடர்ந்து இறங்கிய சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் ஜோடி பொறுப்புடன் ஆடியது. அதிரடியாக ஆடிய சூர்யகுமார் 26 பந்தில் அரை சதம் அடித்து 58 ரன்னில் ஆட்டமிழந்தார். பாண்ட்யா 9 ரன்னில் அவுட்டானார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 49 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களைக் குவித்தது.

    இலங்கை அணி சார்பில் பதிரனா 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.

    • இந்திய டி20 அணி கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படுகிறார்.
    • தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற கம்பீருக்கு இது முதல் தொடராகும்.

    பல்லகெலே:

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    இந்திய டி20 அணி கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படுகிறார்.

    இந்நிலையில், இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் இன்று நடக்கிறது.

    டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கவுதம் கம்பீருக்கு இது முதல் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • புதிய பயிற்சியாளர் கம்பீர் தலைமையின் கீழ் இந்திய அணி முதல் தொடரில் விளையாடுகிறது.

    புதுடெல்லி:

    இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்டு தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதல் டி20 போட்டி பல்லேகலேவில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

    டி20 போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    புதிய பயிற்சியாளர் கம்பீர் தலைமையின் கீழ் இந்திய அணி முதல் தொடரில் விளையாடுகிறது. இதனால் அவரது செயல்பாடு மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் சூர்யகுமார் யாதவின் கேப்டன்ஷிப் மற்றும் இளம் வீரர்களின் ஆட்டம் ஆகியவையும் கவனிக்கப்படும்.

    இந்நிலையில், ரோகித் சர்மா ஒரு தலைவராக இருந்தார். கடந்த 10 ஆண்டுகளில் கேப்டன்சி பற்றி, குறிப்பாக ரோகித் சர்மாவிடம் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

    ×