என் மலர்
நீங்கள் தேடியது "INDvUSA"
- டாஸ் வென்ற அமெரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 161 ரன்கள் எடுத்தது.
மும்பை:
10-வது ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. மும்பையில் இன்று நடந்த 3வது லீக் போட்டியில் இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற அமெரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. முதலில் இந்திய அணி முன்னணி விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நிதானமாக ஆடினார். அரை சதம் கடந்த அவர் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி 84 ரன்கள் குவித்தார். இதில் 4 சிக்சர், 10 பவுண்டரியும் அடங்கும்.
அமெரிக்காவின் வான் ஷால்க்விக் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அமெரிக்கா களமிறங்கியது. மிலிந்த் குமார், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி ஜோடி 4வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்தது. மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. சஞ்சய்கிருஷ்ணமூர்த்தி 37 ரன்னும், மிலிந்த் குமார் 34 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் ஷுபம் ரஞ்சனே 37 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், அமெரிக்க அணி 20 ஓவரில் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் சிராஜ் 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
- இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை 6 ரன்னில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
நியூயார்க்:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தியது. 2-வது போட்டியில் பாகிஸ்தானை 6 ரன்னில் வென்றது.
இந்நிலையில், இந்தியா, அமெரிக்கா அணிகள் இன்று நியூயார்க்கில் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, அமெரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
- டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய அமெரிக்கா 110 ரன்களை எடுத்தது.
நியூயார்க்:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 25-வது லீக் போட்டி நியூயார்க்கில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, அமெரிக்கா அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். முதல் பந்திலும், கடைசி பந்திலும் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஹர்திக் பாண்ட்யா ஒரு விக்கெட்டும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். முதல் 10 ஓவரில் அமெரிக்கா 42 ரன்களை எடுத்தது.
12-வது ஓவரில் 11 ரன்னும், 13-வது ஓவரில் 12 ரன்னும் எடுத்தது. நிதிஷ் குமார் 27 ரன்னிலும், ஸ்டீவன் டெய்லர் 24 ரன்னிலும் அவுட்டாகினர்.
இறுதியில், அமெரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களை எடுத்தது.
இந்தியா சார்பில் 4 ஓவர் வீசிய அர்ஷ்தீப் சிங் 9 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 111 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.
- பொறுப்புடன் ஆடிய சூர்யகுமார் அரைசதம் விளாசினார்.
- அமெரிக்கா தரப்பில் சௌரப் நேத்ரவல்கர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நியூயார்க்:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 25-வது லீக் போட்டி நியூயார்க்கில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, அமெரிக்கா அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். முதல் பந்திலும், கடைசி பந்திலும் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஹர்திக் பாண்ட்யா ஒரு விக்கெட்டும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். முதல் 10 ஓவரில் அமெரிக்கா 42 ரன்களை எடுத்தது.
12-வது ஓவரில் 11 ரன்னும், 13-வது ஓவரில் 12 ரன்னும் எடுத்தது. நிதிஷ் குமார் 27 ரன்னிலும், ஸ்டீவன் டெய்லர் 24 ரன்னிலும் அவுட்டாகினர்.
இறுதியில், அமெரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களை எடுத்தது.
இந்தியா சார்பில் 4 ஓவர் வீசிய அர்ஷ்தீப் சிங் 9 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 111 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, விராட் கோலி களமிறங்கினர். விராட் கோலி 0 ரன்னிலும் ரோகித் 3 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து வந்த ரிஷப் 18 ரன்னில் அவுட் ஆனார்.
இதனால் 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறியது. இதனையடுத்து துபே - சூர்யகுமார் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். பொறுப்புடன் ஆடிய சூர்யகுமார் யாதவ் அரை சதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் இந்திய அணி 18.2 ஓவரில் 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 50 ரன்னிலும் துபே 31 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். அமெரிக்கா தரப்பில் சௌரப் நேத்ரவல்கர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.






