அது எழுதப்பட்டிருந்தது, அதனால்தான் இன்று நான் இங்கே இருக்கிறேன் - மனம் திறந்த சிராஜ்

T20 உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக பந்துவீசிய சிராஜ் 3 விக்கெட் வீழ்த்தினார். இந்தியாவில் நடைபெறும் T20 உலகக்கோப்பையில் விளையாடுவது என் கனவு.
அது எழுதப்பட்டிருந்தது,  அதனால்தான் இன்று நான் இங்கே இருக்கிறேன்  - மனம் திறந்த சிராஜ்
Published on

10-வது ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. 3வது லீக் போட்டியில் இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதின.

இப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அமெரிக்கஅணி 20 ஓவரில் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய சிராஜ் 3 விக்கெட் வீழ்த்தினார். முதலில் டி20 உலகக்கோப்பையில் சிராஜ் இடம்பெறவில்லை. காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து ஹர்ஷித் ராணா விலகிய நிலையில் அவருக்கு பதிலாக முகமது சிராஜ் அணியில் இடம்பிடித்தார்.

போட்டிக்கு பிறகு பேசிய சிராஜ், "சூர்யா எனக்கு கால் செய்து உடனே அணியில் சேருங்கள் என்றார்.. விளையாடாதீர்கள் என்றேன். அவர் கிண்டல் செய்கிறார் என நினைத்தேன். இந்தியாவில் நடைபெறும் T20 உலகக்கோப்பையில் விளையாடுவது என் கனவு. அது எழுதப்பட்டிருந்தது. அதனால்தான் இன்று நான் இங்கே இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com