டி20 உலகக் கோப்பை: இந்திய அணி 300 ரன்கள் அடிக்கும் என்ற டேல் ஸ்டெயின் பதிவு இணையத்தில் வைரல்

டாஸ் வென்ற அமெரிக்கா பவுலிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 161 ரன்கள் எடுத்தது.
டி20 உலகக் கோப்பை: இந்திய அணி 300 ரன்கள் அடிக்கும் என்ற டேல் ஸ்டெயின் பதிவு இணையத்தில் வைரல்
Published on

10-வது ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. மும்பையில் இன்று நடந்த 3வது லீக் போட்டியில் இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற அமெரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. முதலில் இந்திய அணி முன்னணி விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியஅமெரிக்க அணி 20 ஓவரில் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இப்போட்டி தொடங்குவதற்கு முன்னர் இந்திய அணியை நம்பி '300 ரன்கள் Loading' என தென்னாப்பிரிக்கா முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் போட்ட பதிவு இணையத்தில் வைரலானது.

ஆனால் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் 161 ரன்கள் மட்டுமே இந்தியா எடுத்தது. சொல்லப்போனால் 2 அணிகள் சேர்த்து எடுத்த ரன்கள் கூட 300 என்ற இலக்கை தொடவில்லை என்று நெட்டிசன்கள் கிண்டலடித்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com