என் மலர்
நீங்கள் தேடியது "Siraj"
- ஜனாய் போஸ்லே ஜனவரி மாதம் 16ம் தேதி அவர் தனது 23வது பிறந்தநாளை கொண்டாடினார்.
- அந்த கொண்டாட்டத்தில் சிராஜ் கலந்துகொண்டது இணையத்தில் பேசுபொருளானது.
சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தில் கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் தினத்தையொட்டி இன்று நாடு முழுவதும் பெண்கள் தாங்கள் சகோதரர்களாக கருதும் ஆண்களுக்கு ராக்கி கயிறுகளை கட்டி மகிழ்ந்தனர்.
நாடு முழுக்க ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில்,இந்திய கிரிகெக்ட் வீரர் முகமது சிராஜுக்கு பிரபல பாடகி ஆஷா போஸ்லேவின் பேத்தி ஜனாய் போஸ்லே ராக்கி கயிறு கட்டி விட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.
ஜனாய் போஸ்லே ஜனவரி மாதம் 16ம் தேதி அவர் தனது 23வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்த கொண்டாட்டத்தில் சிராஜ் கலந்துகொண்டது இணையத்தில் பேசுபொருளானது. ஒருவரும் காதலிக்கிறார்கள் என்று கிசுகிசு பரவியது.
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜனாய் போஸ்லே முகமது சிராஜுக்கு ராக்கி கயிறு கட்டி விட்டுள்ளார்.
- நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் இங்கிலாந்தின் 3 விக்கெட்டை 106 ரன்னுக்குள் கட்டுப்படுத்தினர்.
- ஜோ ரூட்-ஹேரி புரூக் ஜோடி ரன்களை குவித்து ஆட்டத்தை மாற்றி விட்டது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்னும் , இங்கிலாந்து 247 ரன்னும் எடுத்தன. 23 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சில் 396 ரன் குவித்தது. இதனால் இங்கிலாந்துக்கு 374 ரன் இலக்காக இருந்தது. 374 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை விளை யாடியது. நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன் எடுத்து இருந்தது.
ஹேரி புரூக் ( 111), ஜோ ரூட் (105) ஆகியோர் சதம் அடித்தனர். டக்கெட் 54 ரன் எடுத்தார். ஜேமி சுமித் 2 ரன்னுடனும் , ஓவர்டன் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். பிரஷித் கிருஷ்ணா 3 விக்கெட்டும், முகமது சிராஜ் 2 விக்கெட் டும், ஆகாஷ் தீப் 1 விக்கெட் டும் கைப்பற்றினார்கள்.
இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இங்கிலாந்து வெற்றிக்கு மேலும் 35 ரன்னே தேவை. கைவசம் 4 விக்கெட் உள்ளது.
எஞ்சிய 4 விக்கெட்டை வீழ்த்தினால் இந்தியா வெற்றி பெறும். இந்திய பந்துவீச்சாளர்கள் சாதிப்பார்களா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
80-வது ஓவருக்கு பிறகு இந்திய அணி புதிய பந்தை எடுக்கும். அதற்கு முன்பு இங்கிலாந்து 35 ரன்னை எடுக்க முயற்சிக்கும். அந்த அணி 76.2 ஓவர்கள் ஆடியுள்ளது. இங்கிலாந்து வேகப்பந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய வரவில்லை. மேலும் இந்திய அணி 2-வது இன்னிங்சை ஆடிய போது பந்தும் வீசவில்லை.
2-வது இன்னிங்சில் அவர் பேட்டிங் செய்ய வருவது சந்தேகம் என கருதப்பட்டது. ஆனால் கிறிஸ் வோக்ஸ் பேட்டிங் செய்யலாம் என்று அந்த அணி வீரர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது, 'தேவைப் பட்டால் கிறிஸ் வோக்ஸ் பேட்டிங் செய்ய தயார். அவரால் பேட்டிங் செய்ய முடியும்' என்றார்.
நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் இங்கிலாந்தின் 3 விக்கெட்டை 106 ரன்னுக்குள் கட்டுப்படுத்தினர். 4-வது விக்கெட்டான ஜோ ரூட்-ஹேரி புரூக் ஜோடி ரன்களை குவித்து ஆட்டத்தை மாற்றி விட்டது.
ஹேரி புரூக்கின் கேட்சை சிராஜ் தவற விட்டது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. கேட்ச் பிடித்து விட்டு அவர் எல்லை கோட்டை விட்டு வெளியே சென்று விட்டார். அப்போது புரூக் 19 ரன்னில் இருந்தார்.
இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய பவுலர்கள் கடுமையாக போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.
இந்தியா வெற்றி பெற்றால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடியும். இங்கிலாந்து வென்றால் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
- இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 407 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- ஜேமி ஸ்மித் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
பர்மிங்காம்:
இங்கிலாந்து, இந்தியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து 269 ரன்களில் வெளியேறினார். ஜடேஜா 89 ரன்னில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் ஜெய்ஸ்வால் 87 ரன்னில் வெளியேறினார்.
இங்கிலாந்து சார்பில் பஷீர் 3 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ், ஜோஷ் டங் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. 25 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து இங்கிலாந்து தத்தளித்தது.
இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 77 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் 18 ரன்னும், ஹாரி புரூக் 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் விரைவில் அவுட்டாகினர். 84 ரன்களுக்குள் 5 விக்கெட்டை இழந்தது.
6வது விக்கெட்டுக்கு ஹாரி புரூக்குடன் ஜேமி ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. இருவரும் சதமடித்தனர்.
6வது விக்கெட்டுக்கு 304 ரன்கள் சேர்த்த நிலையில், ஹாரி புரூக் 158 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 407 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜேமி ஸ்மித் 184 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியா சார்பில் சிராஜ் 6 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
180 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா 2வது இன்னிங்சை தொடர்ந்தது. மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் 244 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
- இந்திய அணியின் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் திடீரென ஓய்வு முடிவை அறிவித்தார்.
- இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி தொடங்குகிறது.
லண்டன்:
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. இவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென ஓய்வு முடிவை அறிவித்தார். ஆனாலும், ஒருநாள் போட்டியில் தொடர்ந்து விளையாட இருக்கிறார்.
ஓய்வுபெற்ற போதிலும் இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் நடவடிக்கைகளை விராட் கோலி கண்காணிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், லீட்சில் தொடக்க ஆட்டத்திற்கு சில நாட்களுக்கு முன் புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், துணை கேப்டன் ரிஷப் பண்ட், சிராஜ் மற்றும் சிலரை லண்டனில் உள்ள தனது வீட்டிற்கு விராட் கோலி அழைத்துள்ளார்.
கென்ட்டில் நடந்த அணிகளுக்கு இடையேயான போட்டி முடிந்ததைத் தொடர்ந்து திங்கட்கிழமை இந்தியாவுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனவே வீரர்கள் கோஹ்லியுடனான சந்திப்பிற்கு தயாராக இருந்தனர். இந்தச் சந்திப்பில் வரவிருக்கும் தொடர் பற்றிய பேச்சுவார்த்தைகள் முதல் கில் மற்றும் பண்ட் இளம் அணியை எவ்வாறு அணிதிரட்ட முடியும் என்பது வரை விவாதம் நடைபெற்றது என்றும், இந்த விவாதம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது எனவும் தெரிகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி லீட்சில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐசிசி ஆடவர் ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியல் வெளியானது.
- இதில் இந்திய வீரர் முகமது சிராஜ் முதல் இடம் பிடித்துள்ளார்.
துபாய்:
ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது.
பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்தியாவின் இளம் வீரர் சுப்மன் கில் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில், பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்தியாவின் முகமது சிராஜ் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் 2வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா 3வது இடத்திலும் உள்ளனர்.
இந்தியாவின் குல்தீப் யாதவ் 4வது இடத்திலும், பாகிஸ்தானின் ஷாகின் அப்ரிடி 5வது இடத்தில் உள்ளனர்.
இந்திய வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா 8வது இடத்திலும், முகமது ஷமி 10வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.
- முதல் டெஸ்ட் மேட்சில் இந்தியாவை தென் ஆப்பிரிக்கா வென்றது
- ஐபிஎல் தோன்றியதும் பல பேஸ் பவுலர்கள் வந்து விட்டனர் என்றார் கவாஸ்கர்
தென் ஆப்பிரிக்காவில், இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க அணியினருக்கு இடையே 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் மேட்ச் தொடர் நடைபெற்றது.
முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியுற்றது.
நேற்று, கேப் டவுன் நகரில் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் இரண்டாம் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா முதலில் ஆடியது.
இந்திய வலது கை வேகப்பந்து வீச்சாளரான மொகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜஸ்பித் பும்ரா மற்றும் முகேஷ் குமார், இருவரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
சிராஜ், 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது அவரது பவுலிங் வரலாற்றில் சாதனை நிகழ்வாகும்.
இந்திய வேகப்பந்து தாக்குதலை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஒவ்வொருவராக ஆட்டமிழந்து 55 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனார்கள்.
இறுதியில் இந்திய அணி வென்று, தொடரை சமன் செய்தது.

இது குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானான சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்தார்.
அவர் கூறியிருப்பதாவது:
அனைத்து புகழும் கபில் தேவையே சாரும். இந்தியாவில் சுழற்பந்து வீச்சாளராக மட்டுமே இருக்க வேண்டிய கட்டாயமில்லை என நிரூபித்தவர் அவர்.
தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் புது பந்து பவுலிங் செய்யும் போது சாதகமான சூழ்நிலை நிலவும்.
கிரிக்கெட் உலகம் வியக்கும் வகையில் இந்திய அணிக்கு பலம் சேர்க்க வேகப்பந்து வீச்சாளர்கள் தோன்றியுள்ளனர். அதிலும் குறிப்பாக ஐபிஎல் (IPL) தோன்றிய பிறகு கடந்த 10-12 வருடங்களில் இந்தியாவில் பல வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாகி உள்ளனர்.
வலது கரம் மற்றும் இடது கரம் என இரண்டு வகையிலும் சிறப்பாக பந்து வீச பவுலர்கள் தற்போது உண்டு. ஒருவர் இல்லையென்றால் அவரின் இடத்தை நிரப்ப மற்றொருவர் இருக்கிறார். பும்ரா இல்லாத போது ஷமி களமிறங்கி திறமையை வெளிப்படுத்தினார்.
இவையனைத்துமே கபில் தேவிற்கு நாம் செலுத்தும் மரியாதையாகும்.
இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்தார்.
நாளை மறுநாள் இந்தியாவிற்காக கிரிக்கெட்டில் முதல் உலக கோப்பையை வென்ற அணியின் கேப்டன் கபில் தேவின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
- மலையாளத்தில் உருவான மஞ்சுமல் பாய்ஸ் படம் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகி உலகளவில் 241 கோடி ரூபாய் வசூலித்தது
- மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
மலையாளத்தில் உருவான மஞ்சுமல் பாய்ஸ் படம் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகி உலகளவில் 241 கோடி ரூபாய் வசூலித்து பெறும் வெற்றியை பெற்றது. மலையாள திரையுலகில் மிகப்பெரிய வசூலை குவித்த படங்களின் பட்டியலில் இத்திரைப்படம் முதல் இடத்தில் இருக்கிறது.
சமீபத்தில், இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், மஞ்சுமல் பாய்ஸ் படத்திற்காக தான் 7 கோடியை முதலீடு செய்திருந்ததாகவும், ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், தற்போது வரை தனக்கு லாபத்தில் ஒரு ரூபாய் கூட பணம் அளிக்கவில்லை எனவும், முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டது. இந்நிலையில், மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
அதன்படி, இத்தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷான் ஆண்டனியை கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வரவழைத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மற்ற தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், பாபு ஷாஹிர் ஆகியோரும் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் கிடைத்த பணத்தை கருப்பு பணமாக மறைத்து வைத்துள்ளார்களா என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் இசையமைப்பாளர் இளையராஜா அவரது கண்மணி அன்போடு காதலன் பாடலை அனுமதியின்றி உபயோகித்ததாக வழக்கு தொடர்ந்தார், தற்பொழுது இந்த பிரச்சனையும் ஓங்கி எழுந்துள்ளது. இந்த வழக்கிற்கு தயாரிப்பாளரான ஷான் ஆண்டனியிடம் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
- சிராஜ்-க்கு டி20 தொடரில் ஓய்வும் ஒருநாள் மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் அணியில் இடம் பெறுவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடர் வருகிற 22-ந் தேதி தொடங்கி பிப்ரவரி 12-ந் தேதி முடிகிறது.
இதனை தொடர்ந்து 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இடம் பெறும் வீரர்களே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து எதிரான தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய வீரர்கள் சிலர் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் சிராஜ்-க்கு டி20 தொடரில் ஓய்வும் ஒருநாள் மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் அணியில் இடம் பெறுவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஜெய்ஸ்வால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் ஓபராக செயல்படுகிறார். வாஷிங்டன் சுந்தர் மற்றும் அர்ஷ்தீப் சிங் இரு தொடரிலும் தேர்ந்தெடுக்கபடலாம் எனவுக் தகவல் வெளியாகி உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியை வருகிற 12-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கெடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- 2022 இல் இருந்து தற்போது வரை ஒருநாள் போட்டிகளில் சிராஜ் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- முகமது சிராஜ் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பெறாதது பேசுபொருளாகியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வீரர்கள் விவரம்:-
1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. சுப்மன் கில் (துணை கேப்டன்) 3. விராட் கோலி 4. ஷ்ரேயாஸ் ஐயர் 5. கேஎல் ராகுல் 6. ஹர்திக் பாண்ட்யா 7. குல்தீப் யாதவ் 8. அக்சர் படேல் 9. வாஷிங்டன் சுந்தர் 10. பும்ரா (உடற்தகுதியுடன் இருந்தால்) 11. முகமது சமி 12. அர்ஷ்தீப் சிங் 13. ஜடேஜா 14. ரிஷப் பண்ட் 15. ஜெய்ஸ்வால் 16. ஹர்ஷித் ராணா (இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மட்டும்)
இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக திகழ்ந்து வந்த முகமது சிராஜ் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பெறாதது பேசுபொருளாகியுள்ளது.
2022ம் ஆண்டில் இருந்து தற்போது வரை ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முகமது சிராஜ் தான் முதலிடத்தில் உள்ளார். 2022 இல் இருந்து தற்போது வரை ஒருநாள் போட்டிகளில் அவர் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில், முகமது சிராஜ் இந்திய அணியில் இடம் பெறாதது குறித்து பேசிய கேப்டன் ரோகித், "இன்னிங்சில் பந்து பழையதாகும்போது சிராஜின் பந்துவீச்சு எடுபடவில்லை. அதனால்தான் அவரை அணியில் எடுக்கவில்லை" என்று தெரிவித்தார்.
- மாற்று வீரர்களாக இந்திய அணியில் இடம் பெறுகின்றனர்.
- காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா, தீபக் சாஹர் அணியில் இருந்து விலகினர்.
8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் 16-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது.
காயம் காரணமாக நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்த தொடரில் பங்கேற்காதது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. மேலும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரும் காயமடைந்துள்ளதால் இந்திய அணியில் இடம் பெறவில்லை.
இந்நிலையில் மாற்று வீரர்கள் பட்டியலில் புதிதாக வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ், ஷர்துல் தாக்குர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று அவர்கள் ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்கின்றனர். எனினும் மூன்று பேரில் யார் அணியில் இடம் பெறுவார்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
ஷமியின் உடற்தகுதி மதிப்பீடு செய்யப்பட்ட பிறகே அவர் அணியில் இடம் பெறுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அணி பெர்த்தில் இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. பின்னர் பிரிஸ்பேனுக்குச் செல்லும் இந்தியா வீரர்கள் அங்கு இரண்டு ஆட்டங்களில் விளையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நீண்ட காலமாக விளையாடாமல் இருந்து திடீரென்று கொரோனாவில் இருந்து குணமடைந்து வந்ததும் கம்பேக் கொடுப்பது கடினமாகும்.
- பும்ராவுக்கு பதிலாக சிராஜை தேர்வு செய்யலாம் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16-ந் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் துவங்குகிறது. இத்தொடரில் கோப்பையை வெல்வதற்காக உலகின் நம்பர் ஒன் டி20 அணியான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உள்பட 16 அணிகள் களமிறங்குகின்றன.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா காயத்தால் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். அதனால் அவருக்கு பதிலாக தீபர் சாஹர் அல்லது முகமது சமி இடம் பெறலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தீபக் சாஹர் காயம் காரணமாக விலகி உள்ளார். இதனால் முகமது சமி ஆடும் லெவனில் இடம் பெறுவதும் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் பும்ராவுக்கு பதிலாக சமியை தேர்வு செய்வதற்கு மாற்றாக சிராஜை தேர்வு செய்யலாம் என்று சுனில் கவாஸ்கர் காரணத்துடன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் பும்ராவுக்கு பதிலாக சிராஜை தேர்வு செய்வேன். ஏனெனில் அவர் சிறப்பாக பந்து வீசுகிறார். சமி நீண்ட காலமாக விளையாடாமல் இருக்கிறார். அப்படிப்பட்ட அவர் ஒருசில பயிற்சி போட்டிகளில் மட்டும் விளையாடி விட்டு நேரடியாக உலக கோப்பையில் விளையாடுவது நிச்சயம் சரியான வழியல்ல.
இருப்பினும் தற்சமயத்தில் 15ஆவது வீரராக யாரும் தேர்வு செய்யப்படாத நிலையில் சமி ஆஸ்திரேலியாவுக்கு செல்வாரா இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் அவர் எந்த டி20 கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை என்பதே பிரச்சனையாகும்.
அவரிடம் தரமும் திறமையும் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நீண்ட காலமாக விளையாடாமல் இருந்து திடீரென்று கொரோனாவில் இருந்து குணமடைந்து வந்ததும் கம்பேக் கொடுப்பது கடினமாகும்.
இவ்வாறு சுனில் கவாஸ்கர் கூறினார்.






