என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    பர்மிங்காம் டெஸ்ட்: மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 244 ரன்கள் முன்னிலை
    X

    பர்மிங்காம் டெஸ்ட்: மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 244 ரன்கள் முன்னிலை

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 407 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • ஜேமி ஸ்மித் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து 269 ரன்களில் வெளியேறினார். ஜடேஜா 89 ரன்னில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் ஜெய்ஸ்வால் 87 ரன்னில் வெளியேறினார்.

    இங்கிலாந்து சார்பில் பஷீர் 3 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ், ஜோஷ் டங் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. 25 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து இங்கிலாந்து தத்தளித்தது.

    இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 77 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் 18 ரன்னும், ஹாரி புரூக் 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் விரைவில் அவுட்டாகினர். 84 ரன்களுக்குள் 5 விக்கெட்டை இழந்தது.

    6வது விக்கெட்டுக்கு ஹாரி புரூக்குடன் ஜேமி ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. இருவரும் சதமடித்தனர்.

    6வது விக்கெட்டுக்கு 304 ரன்கள் சேர்த்த நிலையில், ஹாரி புரூக் 158 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 407 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜேமி ஸ்மித் 184 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்தியா சார்பில் சிராஜ் 6 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    180 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா 2வது இன்னிங்சை தொடர்ந்தது. மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் 244 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    Next Story
    ×