என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா இங்கிலாந்து தொடர்"

    • இந்த டெஸ்டில் கடைசி விக்கெட்டாக சிராஜ் ஆட்டமிழந்ததும் துக்கம் தாங்காமல் தரையில் அமர்ந்தார்.
    • 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணி.

    லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி.போராடித் தோற்றது.

    ஜடேஜா தனி ஆளாக கடைசி வரை போராடிய நிலையில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணி. இறுதிவரை போராடிய ஜடேஜா 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்த டெஸ்டில் கடைசி விக்கெட்டாக சிராஜ் ஆட்டமிழந்ததும் துக்கம் தாங்காமல் தரையில் அமர்ந்தார். அப்போது இங்கிலாந்து அணி வீரர்கள் அவரை சமாதானப்படுத்தினர்.

    இந்நிலையில், லார்ட்ஸ் டெஸ்ட் தோல்வி குறித்து முகமது சிராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "சில போட்டிகள் மட்டுமே எப்போதும் உங்களுடன் இருக்கும். அது அந்த போட்டியின் முடிவுகளால் அல்ல, அதிக உங்களுக்கு கற்றுக்கொடுத்த பாடத்தினால்" என்று பதிவிட்டுள்ளார்.

    • 3-வது டெஸ்டில் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

    லண்டன்:

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.

    இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ம் தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் தலா 387 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆகின. பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 62.1 ஓவர்களில் 192 ரன்னில் சுருண்டது.

    இதன் மூலம் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 74.5 ஓவர்களில் 170 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி 23-ம் தேதி மான்செஸ்டரில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்து முன்னணி வீரரான ஷோயப் பஷீர் விலகி உள்ளார்.

    லார்ட்ஸ் டெஸ்டின் போது பஷீரின் இடது கைவிரலில் எழும்பு முறிவு ஏற்பட்டதால் அவர் அதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    • வெற்றிக்கு மிக அருகில் வந்து விட்டோம். ஜடேஜா, பும்ரா, சிராஜ் இறுதிவரை போராடினார்கள்.
    • 193 ரன்கள் என்பது பெரிய ஸ்கோர் கிடையாது. ஜடேஜா கடுமையாக போராடினார்

    லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி.போராடித் தோற்றது.

    ஜடேஜா தனி ஆளாக கடைசி வரை போராடிய நிலையில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணி. இறுதிவரை போராடிய ஜடேஜா 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    லார்ட்ஸ் டெஸ்டில் கடைசி வரை போராடியதற்காக இந்திய அணியை சச்சின் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    வெற்றிக்கு மிக அருகில் வந்து விட்டோம். ஜடேஜா, பும்ரா, சிராஜ் இறுதிவரை போராடினார்கள். நன்றாக முயற்சித்தார்கள். இங்கிலாந்து சிறப்பாக பந்து வீசி அழுத்தத்தை கொடுத்தது. அவர்கள் விரும்பிய முடிவை ஏற்படுத்திக் கொண்டனர்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்தியாவின் தோல்வியால் முன்னாள் கேப்டன் கங்குலி ஏமாற்றம் அடைந்து உள்ளார். அவர் கூறும் போது, "என்ன ஒரு அற்புதமான டெஸ்ட் போட்டி. ஆனால் இந்திய அணி வெல்ல முடியாமல் போனது ஏமாற்றம் அளிக் கிறது. வெல்ல வேண்டிய வாய்ப்பை தவறவிட்டு விட்டோம். 193 ரன்கள் என்பது பெரிய ஸ்கோர் கிடையாது. ஜடேஜா கடுமையாக போராடினார்" என்றார்.

    • முதல் டெஸ்டில் பும்ரா 43.4 ஓவர்கள் வீசியுள்ளார்.
    • பணிச்சுமை காரணமாக 2ஆவது டெஸ்டில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இதில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் பும்ரா 24.4 ஓவரில் 83 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். 2ஆவது இன்னிங்சில் 19 ஓவர்கள் வீசினார். 57 ரன்கள் கொடுத்து விக்கெட் வீழ்த்தவில்லை.

    இங்கிலாந்துக்கு தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே, 3 போட்டிகளில்தான் பும்ரா விளையாடிவார் என தெரிவிக்கப்பட்டது. முதல் டெஸ்டில் 43.4 ஓவர்கள் வீசிய பும்ரா, 2ஆம் போட்டிக்கான நேற்றைய பயிற்சியில் ஈடுபடவில்லை. இதனால் எட்ஜ்பாஸ்டனில் வருகிற 2ஆம் தேதி தொடங்கும் 2ஆவது டெஸ்டில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேவேளையில் பிரசித் கிருஷ்ணாவும் பயிற்சி மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இவர் முதல் இன்னிங்சில் 20 ஓவர்கள் வீசி 128 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். 2ஆவது இன்னிங்சில் 15 ஓவர்கள் வீசி 92 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். 5 விக்கெட் வீழ்த்தினாலும் ஓவருக்கு சராசரியாக 6 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்துள்ளார். இதனால் 2ஆவது டெஸ்டில் ஓரங்கட்டப்படலாம் எனத் தெரிகிறது.

    பும்ராவுடன் இவரும் 2ஆவது டெஸ்ட்டில் இடம்பெறவில்லை என்றால் ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அணியில் சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது.

    இந்திய பேட்டர்கள் 5 சதங்கள் அடித்த நிலையிலும், 20 விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் இந்தியா தோல்வியை சந்தித்தது. இதனால் பந்து வீச்சில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம் ஆகும். முதல் டெஸ்டில் சிராஜ் மிகப்பெரிய அளவில் சாதிக்கவில்லை. பும்ரா இல்லாத நிலையில் பந்து வீச்சை வழிநடத்தும் சீனியர் வீரராக உள்ளார். இவர் நீக்கப்பட வாய்ப்பு மிகவும் குறைவுதான்.

    2ஆவது போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஜாஃப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ரிஷப்பண்ட் 2 இன்னிங்சிலும் (134 ரன், 118 ரன்) சதம் அடித்தார்.
    • மெல்போர்ன் டெஸ்டில் ரிஷப்பண்டின் மோசமான ஷாட்டை கவாஸ்கர் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன.

    தொடர்ந்து 6 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 96 ஓவர் முடிவில் 364 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் (118) மற்றும் கேஎல் ராகுல் (137) இருவரும் சதமடித்து அசத்தினர்.

    இதனையடுத்து, 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து 4 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.

    இப்போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து ரிஷப் பண்ட் அசத்தினார். இதன் மூலம் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த இந்தியாவின் முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை அவர் படைத்தார். மேலும், இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த 7-வது இந்திய வீரர் ரிஷப்பண்ட் ஆவார்.

    இந்த நிலையில் ரிஷப்பண்ட் ஆட்டத்தை முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான கவாஸ்கர் பாராட்டியுள்ளார். அவர் சூப்பர், சூப்பர், சூப்பர் என்று 3 முறை கூறி புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, 'ரிஷப்பண்டின் ஆட்டம் மிக அற்புதமாக இருந்தது. இளம் வீரரான அவரது ஆட்டம் முற்றிலும் அருமையாக இருந்தது' என்றார்.

    கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய பயணத்தில் மெல்போர்ன் டெஸ்டில் ரிஷப்பண்டின் மோசமான ஷாட்டை கவாஸ்கர் முட்டாள், முட்டாள், முட்டாள் என்று 3 முறை கூறி கடுமையாக விமர்சித்து இருந்தார். தற்போது அவரை கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.

    இது தொடர்பாக ரிஷப்பண்ட் கூறும்போது, 'பலவீனங்களை சரி செய்து மீண்டும் வெற்றிகளாக மாற்றும்போது அது மிகவும் நன்றாக இருக்கிறது. இது கடினமான செயல்முறையாகும். எனது பலவீனங்களை கடந்தது அதிர்ஷ்டமே. கடின உழைப்பு, கவனம், ஒழுக்கம் ஆகியவை இதில் சம்மந்தப்பட்டுள்ளன' என்றார்.

    • இப்போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து ரிஷப் பண்ட் அசத்தினார்.
    • 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து விளையாடி வருகிறது.

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன.

    தொடர்ந்து 6 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 96 ஓவர் முடிவில் 364 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் (118) மற்றும் கேஎல் ராகுல் (137) இருவரும் சதமடித்து அசத்தினர்.

    இதனையடுத்து, 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து 4 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.

    இப்போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்திய ரிஷப் பண்ட், ஒரு டெஸ்ட்டில் அதிக ரன்கள் குவித்த ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சங்ககாராவின் சாதனையையும் முறியடித்தார்.

    பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சங்ககாரா 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 244 ரன்கள் அடித்திருந்தார். அந்த சாதனையை இப்போட்டியில் 252 ரன்கள் அடித்து பண்ட் முறியடித்துள்ளார்.

    • 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து விளையாடி வருகிறது.
    • இந்திய அணியின் 2 ஆவது இன்னிங்சில் ஷர்துல் தாக்கூர் கேட்சை ஜோ ரூட் பிடித்தார்

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன.

    தொடர்ந்து 6 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 96 ஓவர் முடிவில் 364 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் (118) மற்றும் கேஎல் ராகுல் (137) இருவரும் சதமடித்து அசத்தினர். குறிப்பாக பண்ட் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்தினார்.

    இதனையடுத்து, 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து 4 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்திய அணியின் 2 ஆவது இன்னிங்சில் ஷர்துல் தாக்கூர் கேட்சை ஜோ ரூட் பிடித்தார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச்களை பிடித்த வீரர் என்ற ராகுல் டிராவிட்டின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்தார்.

    டெஸ்ட் போட்டிகளில் டிராவிட், ரூட் ஆகியோர் இதுவரை 210 கேட்சுகள் பிடித்து அதிக கேட்ச்களை பிடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில உள்ளார். இதற்கு அடுத்த இடங்களில் ஜெயவர்தனே (205), ஸ்மித் (200) ஆகியோர் உள்ளனர்.

    • இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஜெய்ஸ்வால், கில், கே.எல்.ராகுல் ஆகியோர் சதம் விளாசினர்.
    • குறிப்பாக பண்ட் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்தினார்.

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன.

    தொடர்ந்து 6 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 96 ஓவர் முடிவில் 364 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் (118) மற்றும் கேஎல் ராகுல் (137) இருவரும் சதமடித்து அசத்தினர். குறிப்பாக பண்ட் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்தினார்.

    இதனையடுத்து, 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து 4 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஜெய்ஸ்வால், கில், கே.எல்.ராகுல், பண்ட் (2) ஆகியோர் சதம் விளாசியுள்ளனர்.

    இதன்மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக 5 சதங்களை பதிவு செய்து இந்தியா அசத்தியுள்ளது.

    இதற்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த சாதனை 6 முறை மட்டுமே நிகழ்த்தப்பட்டுள்ளது. அதே சமயம் மற்றொரு நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அணி ஒரே டெஸ்டில் 5 சதங்கள் அடித்தது 1 முறை மட்டுமே நடந்துள்ளது. 1955 இல் நடைபெற்ற புகழ்பெற்ற ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் ஆஸ்திரேலியா ஒரே இன்னிங்சில் 5 சதங்கள் விளாசியது.

    • 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது.
    • பண்ட் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்தினார்.

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன.

    தொடர்ந்து 6 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 96 ஓவர் முடிவில் 364 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் (118) மற்றும் கேஎல் ராகுல் (137) இருவரும் சதமடித்து அசத்தினர். குறிப்பாக பண்ட் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்தினார்.

    இதனையடுத்து, 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து 4 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய ரிஷப் பண்ட், கே.எல் ராகுலுக்கு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    2024 ஐபிஎல் சீசனில் லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே.எல் ராகுலை மைதானத்தில் வைத்தே சஞ்சீவ் கோயங்கா திட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து 2025 ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் இருந்து கே.எல் ராகுல் விலகினார். ரிஷப் பண்ட் லக்னோ அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக பென் ஸ்டோக்ஸ் தனது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
    • இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக அடுத்த வருடம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

    இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்த இவர் சமீபத்தில் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023-ல் பங்கேற்பதற்காக திரும்ப வந்தார். மேலும் இந்த தொடரில் சிறப்பாகவும் விளையாடினார்.

    இந்த தொடரில் அவர் ஆறு போட்டிகளில் விளையாடி, 50.66 சராசரியில் 304 ரன்களையும், ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதங்களுடன் 89-க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட்டையும் எடுத்தார். அவரது சிறந்த ஸ்கோர் 108 ஆகும். அவரது முழங்காலில் உள்ள பிரச்சனையால் பேட்டிங் மட்டுமே செய்தார். பந்து வீசவில்லை.

    இந்நிலையில் இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக பென் ஸ்டோக்ஸ் தனது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும், தற்போது அவருக்கு மறுவாழ்வு அளிக்கும் நேரம் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக அடுத்த வருடம் ஜனவரி மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தகக்து.

    • இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
    • இந்த தொடர் வரும் 25-ம் தேதி முதல் மார்ச் 11-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர் வரும் 25-ம் தேதி முதல் மார்ச் 11-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆப்கானிஸ்தானுடன் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் விராட் கோலியும் இடம் பெற்றுள்ளார்.

    கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய டெஸ்ட் அணியில் முகமது சமி இடம் பெற்றிருந்த நிலையில் உடல் தகுதி பெறாத நிலையில், டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார். அவர் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் பவுலிங் பயிற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் சமி இடம் பெற வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.மேலும், மற்ற 3 போட்டிகளில் அவர் இடம் பெற்று விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

    • கணுக்கால் காயத்தில் இருந்து நன்றாக மீண்டு வருகிறேன்.
    • எனது உடல் தகுதியில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் குறித்து தேசிய கிரிக்கெட் அகாடமி மருத்துவ நிபுணர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கணுக்கால் காயம் காரணமாக கடந்த நவம்பர் 19-ந் தேதி முடிந்த உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய அணியில் இடம் பெறவில்லை. முகமது ஷமி தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் உடல் தகுதியை பொறுத்து ஆடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் முழு உடல் தகுதியை எட்டாததால் அவர் அணியில் இருந்து விலகினார்.

    இந்த மாதம் இறுதியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா வந்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் ஐதராபாத்தில் வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி தொடருக்கான இந்திய அணிக்கு திரும்பும் நோக்குடன் முகமது ஷமி உடல் தகுதியில் கவனம் செலுத்தி வருகிறார்.

    இது குறித்து முகமது ஷமி கூறுகையில், 'கணுக்கால் காயத்தில் இருந்து நன்றாக மீண்டு வருகிறேன். எனது உடல் தகுதியில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் குறித்து தேசிய கிரிக்கெட் அகாடமி மருத்துவ நிபுணர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கணுக்காலில் லேசான விறைப்பு இருக்கிறது. ஆனாலும் நன்றாகவே உள்ளேன். பயிற்சியையும் தொடங்கி விட்டேன். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு என்னால் திரும்ப முடியும் என்று நம்புகிறேன். சவாலான போட்டிக்கு முடிந்த அளவுக்கு விரைவில் திரும்ப வேண்டும் என்று நினைக்கிறேன்' என்றார்.

    ×