என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sangakkara"

    • சங்கக்கரா 14234 ரன்களுடன் 2ஆவது இடத்தில் இருந்தார்.
    • விராட் கோலி 54 ரன்கள் அடித்தபோது, சங்ககரா ரன்களை கடந்தார்.

    ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 236 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

    சுப்மன் கில் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். முதல் இரண்டு போட்டிகளில் டக்அவுட் ஆன விராட் கோலி, முதல் பந்திலேயே ரன் அடித்து, அப்பாடா., டக்அவுட்டை கடந்து விட்டேன் என கையை காட்டினார்.

    ரோகித் சர்மா 63 பந்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். இது அவருடைய 60ஆவது அரைசதம் ஆகும். மறுமுனையில் டக்அவுட்டை தாண்டிய விராட் கோலி, 56 பந்தில் 4 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.

     இந்த ஜோடி 100 ரன்களை கடந்தது. இதன்மூலம் ரோகித் சர்மா- விராட் கோலி ஜோடி கடந்த 5 ஆண்டுகளில் முதன்முறையாக 100 பார்ட்னர்ஷிப்பை கடந்தது.

    விராட் கோலி 54 ரன்களை எட்டியபோது, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2ஆவது இடத்தை பிடித்திருந்த சங்ககராவை பின்னுக்கு தள்ளினார். சங்ககரா 14,234 ரன்கள் எடுத்து 2ஆவது இடத்தில் இருந்தார். சச்சின் தெண்டுல்கர் 18426 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

    • இப்போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து ரிஷப் பண்ட் அசத்தினார்.
    • 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து விளையாடி வருகிறது.

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன.

    தொடர்ந்து 6 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 96 ஓவர் முடிவில் 364 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் (118) மற்றும் கேஎல் ராகுல் (137) இருவரும் சதமடித்து அசத்தினர்.

    இதனையடுத்து, 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து 4 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.

    இப்போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்திய ரிஷப் பண்ட், ஒரு டெஸ்ட்டில் அதிக ரன்கள் குவித்த ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சங்ககாராவின் சாதனையையும் முறியடித்தார்.

    பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சங்ககாரா 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 244 ரன்கள் அடித்திருந்தார். அந்த சாதனையை இப்போட்டியில் 252 ரன்கள் அடித்து பண்ட் முறியடித்துள்ளார்.

    • குமார சங்ககாரா இங்கிலாந்து ஒயிட்-பால் அணிக்கு பயிற்சியாளராக செல்ல வாய்ப்பு.
    • அதனால் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியை ராகுல் டிராவிட் ஏற்க உள்ளதாக தகவல்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட், இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டார். இதனால் ஐபிஎல் அணிகளுக்கு பயிற்சியாளராக முடியாமல் இருந்தது.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட் 2014-ம் ஆண்டு வரை வீரராக விளையாடினார். அதன்பின் பயிற்சியாளராக செயல்பட்டார். பின்னர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

    சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கோப்பையுடன் அவரது தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் அணிகளில் ஏதாவது ஒரு அணிக்கு பயிற்சியாளராக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இரண்டரை முதல் மூன்று மாதம் என்பதால் அதை ஏற்பதில் சிரமம் இருக்காது. பெரும்பாலான பயிற்சியாளர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கையை சேர்ந்த சங்ககாரா உள்ளார். இவர் இங்கிலாந்து ஒயிட்-பால் அணி பயிற்சியாளர் பதவியை ஏற்பார் எனத் தெரிகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சங்கக்கராவை நியமிக்க விரும்புவதாக தெரிகிறது. இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்பது குறித்து சங்கக்கராவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சங்கக்கரா மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.

    இதனால் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பதவியை சங்ககாரா ஏற்றுக்கொண்டால், ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக வாய்ப்புள்ளது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக ஷேன் பாண்ட், டிரேவர் பென்னி இருந்து வருகிறார்கள்.

    இங்கிலாந்து ஒயிட்-பால் கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்து மேத்யூ மோட் வெளியேற இருக்கும் நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அவருக்கு மாற்று பயிற்சியாளரை தேடிவருகிறது.

    ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 சதங்கள் விளாசிய இலங்கை வீரர் சங்ககராவின் சாதனையை இந்திய கேப்டன் விராட் கோலி முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. #ViratKohli #Sangakkara
    வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்த நிலையில் தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

    இந்திய கேப்டன் விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் முறையே 140, 157 ரன்கள் வீதம் குவித்தார். நேற்றைய 3-வது ஆட்டத்திலும் சதம் (107 ரன்) விளாசினார். இதன் மூலம் 47 ஆண்டுகால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 3 ஒரு நாள் போட்டிகளில் சதம் அடித்த (ஹாட்ரிக்) முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.



    இதற்கிடையே, இலங்கை அணியின் விக்கெட் கீப்பரான சங்ககரா தொடர்ந்து 4 சதங்கள் விளாசி சாதனை படைத்துள்ளார். இவர் 2015ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் வங்காள தேசத்துக்கு எதிராக 105 ரன்களும், இங்கிலாந்துக்கு எதிராக117 ரன்களும்,ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 104 ரன்களும், ஸ்காட்லாந்துக்கு எதிராக 124 ரன்களும் அடித்துள்ளார். இதன்மூலம் சங்ககரா ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 சதங்கள் அடித்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

    இந்நிலையில், இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டி நாளை மும்பையில் நடைபெறவுள்ளது.

    இந்த போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி சதமடித்தால், தொடர்ச்சியாக 4 போட்டிகளில் சதமடித்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆவாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். #ViratKohli #Sangakkara
    ×