என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஒரு டெஸ்டில் அதிக ரன்கள்... சங்ககாராவின் சாதனையை முறியடித்தார் ரிஷப் பண்ட்
- இப்போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து ரிஷப் பண்ட் அசத்தினார்.
- 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து விளையாடி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன.
தொடர்ந்து 6 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 96 ஓவர் முடிவில் 364 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் (118) மற்றும் கேஎல் ராகுல் (137) இருவரும் சதமடித்து அசத்தினர்.
இதனையடுத்து, 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து 4 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.
இப்போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்திய ரிஷப் பண்ட், ஒரு டெஸ்ட்டில் அதிக ரன்கள் குவித்த ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சங்ககாராவின் சாதனையையும் முறியடித்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சங்ககாரா 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 244 ரன்கள் அடித்திருந்தார். அந்த சாதனையை இப்போட்டியில் 252 ரன்கள் அடித்து பண்ட் முறியடித்துள்ளார்.






