search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rishabh Pant"

    • ஏலத்தில் அதிகபட்ச தொகையாக பண்ட் ரூ. 27 கோடிக்கும் ஷ்ரேயாஸ் அய்யர் ரூ.26.75 கோடிக்கும் ஏலம் போனார்கள்.
    • ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் 14 தொடங்கி மே 25 வரை நடக்கிறது.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் 14 தொடங்கி மே 25 வரை நடக்கிறது. இதற்கான மெகா ஏலம் சில தினங்களுக்கு முன்பு நடந்தது. இந்த ஏலத்தில் அதிகபட்ச தொகையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கும் அதனை தொடர்ந்து ஷ்ரேயாஸ் அய்யர் ரூ.26.75 கோடிக்கும் ஏலம் போனார்கள்.

    என்னதான் அதிக தொகைக்கு ஏலம் போனாலும் கடந்த முறை வாங்கிய ஊதியத்தை வைத்து பார்க்கும் போது ஜித்தேஷ் சர்மா முதல் இடத்தில் உள்ளார். 

    நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் சுமார் 5500% சம்பள உய உயர்வு பெற்ற ஒரே வீரர் என்ற சாதனையை ஜித்தேஷ் சர்மா படைத்துள்ளார். ஏலத்தில் ஜித்தேஷ் சர்மாவை பெங்களூரு அணி ரூ.11 கோடிக்கு ஏலம் எடுத்தது. பண்ட்டும், ஸ்ரேயாஸூம் அதிக விலைக்கு ஏலம் போனாலும் கடந்த முறை வாங்கிய ஊதியத்தை ஒப்பிடுகையில் அவர்களின் சம்பள உயர்வு ஜித்தேஷ் சர்மாவை விட மிகக் குறைவு (ரூ.20 லட்சம்) ஆகும்.

    • ரிஷப் பண்ட்-ஐ டெல்லி அணி தக்க வைக்காதது பேசுபொருளானது.
    • ரிஷப் பண்ட்-ஐ லக்னோ அணி 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

    ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி அக்சர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அபிஷேக் போரெல் ஆகிய 4 வீரர்களை மொத்தமாக 44 கோடி கொடுத்து தக்க வைத்திருந்தது.

    கடந்த சீசனில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட்-ஐ டெல்லி அணி தக்க வைக்காதது பேசுபொருளானது. இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட்-ஐ லக்னோ அணி ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

    இந்நிலையில், டெல்லி அணியில் இருந்து லக்னோ அணிக்கு சென்றுள்ள ரிஷப் பண்ட் குறித்து டெல்லி கேபிடல்ஸ் அணியின் உரிமையாளர் பார்த் ஜிண்டால் தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "ரிஷப் பண்ட் நீங்கள் எப்போதும் என்னுடைய தம்பியாகவே இருப்பீர்கள். என் இதயத்தின் ஆழத்தில் இருந்து உங்களை நான் நேசிக்கிறேன். உங்களை எனது குடும்பத்தில் ஒருவராக கருதி, முடிந்தவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முயன்றுள்ளேன். நீங்கள் வேறு அணிக்கு செல்வதை பார்க்க வருத்தமாகவும் உள்ளது. எப்போதும் நீங்கள் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் ஒரு அங்கம்தான். என்றாவது ஒருநாள் நாம் மீண்டும் ஒன்றுசேர்வோம் என்று நான் நம்புகிறேன்.

    எல்லாவற்றிற்கும் நன்றி ரிஷப். நாங்கள் எப்போதும் உன்னை நேசிப்போம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் டெல்லி அணிக்கு எதிராக விளையாடும்போது நான் உங்களை உற்சாகப்படுத்துவேன். உங்களிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கிறோம்" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

    இதனிடையே, டெல்லி அணியில் 9 ஆண்டுகள் விளையாடியது குறித்து ரிஷப் பண்ட் தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லி கேப்பிடல் உடனான எனது பயணம் அற்புதமானது.
    • நான் களத்தில் இறங்கும் போதெல்லாம் உங்களை மகிழ்விக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி அக்சர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அபிஷேக் போரெல் ஆகிய 4 வீரர்களை மொத்தமாக 44 கோடி கொடுத்து தக்க வைத்திருந்தது.

    கடந்த சீசனில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட்-ஐ டெல்லி அணி தக்க வைக்காதது பேசுபொருளானது. இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட்-ஐ லக்னோ அணி ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

    இந்நிலையில், டெல்லி அணியில் 9 ஆண்டுகள் விளையாடியது குறித்து ரிஷப் பண்ட் தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் , "குட்பை சொல்வது ஒருபோதும் எளிதானது அல்ல. டெல்லி கேபிட்டல்ஸ் உடனான எனது பயணம் அற்புதமானது. நான் நினைத்துப் பார்க்காத வகையில் வளர்ந்துள்ளேன். நான் ஒரு இளைஞனாக டெல்லி அணிக்கு வந்தேன். கடந்த ஒன்பது ஆண்டுகளாக நாங்கள் ஒன்றாக வளர்ந்தோம்.

    இந்தப் பயணத்தை பயனுள்ளதாக்கியது ரசிகர்களாகிய நீங்கள்தான். என் வாழ்க்கையின் கடினமான ஒரு கட்டத்தில் நீங்கள் என்னை அரவணைத்து, என்னை உற்சாகப்படுத்தி, எனக்கு ஆதரவாக நின்றீர்கள். நான் முன்னேறும்போது, உங்கள் அன்பையும் ஆதரவையும் என் இதயத்தில் சுமக்கிறேன். நான் களத்தில் இறங்கும் போதெல்லாம் உங்களை மகிழ்விக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். எனது குடும்பமாக இருப்பதற்கும் இந்தப் பயணத்தை மிகவும் சிறப்பானதாக மாற்றியதற்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

    • ரிஷப் பண்ட்-க்கு சிஎஸ்கே மற்றும் எல்எஸ்ஜி இடையே கடும் போட்டி நிலவியது.
    • எல்.எஸ்.ஜி. 27 கோடி ரூபாய் கொடுக்க டெல்லி ஆர்.டி.எம். வாய்ப்பை பயன்படுத்தவில்லை.

    ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு ஐ.பி.எல். வரலாற்றில் புதிய சாதனை படைத்தார். அவரை லக்னோ அணி இவ்வளவு தொகைக்கு எடுத்தது.

    ரிஷப் பண்ட்-ஐ தங்கள் அணிக்கு மீண்டும் எடுக்க ஏலத்தில் ஆர்.டி.எம். கார்டை டெல்லி அணி பயன்படுத்தியது. ஆனால் லக்னோ அணியின் ரூ.27 கோடி தொகையை அவர்களால் வழங்க முடியவில்லை. இதனால் லக்னோ அணி இந்த தொகைக்கு எடுத்தது. அவர் லக்னோ அணி கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ரிஷப் பண்ட்-ஐ ஏலத்தில் எடுத்தது தொடர்பாக லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கூறியதாவது:-

    ரிஷப் பண்ட்-ஐ தேர்வு செய்வது என்பது எங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அவர் பட்டியலில் இருந்ததால் அவருக்காக கோடிக்கணக்கில் வைத்து இருந்தோம். ரூ.27 கோடி என்று சற்று உயர்ந்து விட்டது. ஆனால் எங்களுக்கு அவர் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

    ரிஷப் பண்ட் சிறந்த வீரர் மேட்ச் வின்னர் ஆவார். அவர் லக்னோ அணியில் இடம் பெற்று இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 11 கோடி ரூபாய் வரை ஆர்.சி.பி. போட்டியிட்டது.
    • பின்னர் ஐதராபாத் அணி போட்டியிட இறுதியாக எல்.எஸ்.ஜி. 27 கோடி ரூபாய்க்கு எடுத்தது.

    2025 ஐ.பி.எல். போட்டிக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் அதிக விலைக்கு ஏலம் போவார் என கணிக்கப்பட்டது. அதன்படி அவரை எல்.எஸ்.ஜி. அவரை ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை இல்லாத வகையிலான அதிக தொகைக்கு (27 கோடி ரூபாய்) ஏலம் எடுத்தது.

    ரிஷப் பண்ட்-ஐ ஏலத்தில் விடும்போது முதலில் எல்.எஸ்.ஜி. மற்றும் ஆர்.சி.பி. அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. இரு அணிகளும் மாறிமாறி கேட்டன. அதிக பணம் வைத்திருந்த ஆர்.சி.பி. எப்படியும் ரிஷப் பண்ட்-ஐ எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆர்.சி.பி. 11 கோடி ரூபாய் வரை கேட்டது. அதன்பின் கேட்கவில்லை. பின்னர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி எல்.எஸ்.ஜி.யுடன் போட்டியிட்டது. 20.75 கோடி ரூபாய்க்கு எல்.எஸ்.ஜி. கேட்டது. அப்போது டெல்லி அணி ஆர்.டி.எம்.-ஐ பயன்படுத்த முடிவு செய்தது.

    பின்னர் எல்.எஸ்.ஜி. அணி 27 கோடி ரூபாய் நிர்ணயித்தது. அதற்கு டெல்லி தயாராக இல்லை. இதனால் ரிஷப் பண்ட் 27 கோடி ரூபாய்க்கு எல்.எஸ்.ஜி. அணியால் எடுக்கப்பட்டார்.

    எல்.எஸ்.ஜி.-க்கும் ஆர்.சி.பி.க்கும் இடையில் ஏலம் போட்டி நடைபெற்று கொண்டிருக்கும்போது ரிஷப் பண்ட்-ஐ எடுத்துவிடுவோம் என்ற கணிப்பில் குட்டி ஸ்பைடர்மேன் பறப்பபோது போன்ற அனிமேஷன் படத்தை வெளியிட்டு "சின்னசாமிக்கு செல்லும் வழியில், ஒருவேளை?" என ஆர்.சி.பி. டுவீட் செய்திருந்தது.

    ஏலம் எடுத்த பின் "Sorry, Kid" மீம் மூலம் எல்.எஸ்.ஜி. ட்ரோல் செய்துள்ளது.

    நேற்றைய ஏலத்தின்போது ஆர்.சி.பி.யின் யுக்தியை கிரிக்கெட் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. கே.எல். ராகுலை அவர்கள் கூடுதல் தொகை கொடுத்து எடுத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

    • ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்குகிறது.
    • ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் நடைபெறுகிறது.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

    ரூ. 2 கோடி எனும் அடிப்படை விலைக்கு பட்டியலிடப்பட்ட ரிஷப் பண்ட்-ஐ தங்கள் அணிக்கு வாங்க போட்டியிட்டனர். கடும் போட்டியில் மல்லுக்கட்டிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரிஷப் பண்ட்-ஐ ரூ. 27 கோடிக்கு விலைக்கு வாங்கியது. இதுவரை நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார்.

    முன்னதாக இதே ஏலத்தில் பட்டியலிடப்பட்ட ஸ்ரேயஸ் அய்யர்-ஐ பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 26 கோடியே 75 லட்சம் தொகைக்கு வாங்கி இருந்தது. இது ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராக இருந்தது. பிறகு ரிஷப் பண்ட் ஏலத்தில் எடுக்கப்பட்டதும் ஸ்ரேயஸ் அய்யரின் சாதனை முறியடிக்கப்பட்டது.

    கடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக விளையாடிய கே.எல். ராகுல்-ஐ டெல்லி அணி ரூ. 14 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது.

    • சென்னை சூப்பர் கிங்சிடம் ரிஷப்பண்டை ஏலம் எடுக்க பட்ஜெட் இல்லை.
    • ரசிகர்கள் எண்ணிக்கை பல மடங்காக உயரும்.

    18-வது ஐ.பி.எல். போட்டிக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் இன்றும், நாளையும் நடக்கிறது.

    இந்த நிலையில் ஐ.பி.எல். ஏலத்தில் ஸ்டார்க்கின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடிப்பார் என்று முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ரிஷப் பண்டின் கீப்பிங் மற்றும் பேட்டிங் திறமைகளை தவிர்த்து கேப்டனாக அணியை சிறப்பாக வழி நடத்தும் பண்புகளை கொண்டுள்ளார். இதனால் எந்த ஒரு அணி உரிமை யாளரோ அல்லது பயிற்சி யாளரோ அவரை இழக்க விரும்பமாட்டார்கள். ஐ.பி.எல். மெகா ஏலத்தில் ரூ.25 கோடிக்கும் அதிகமாக ரிஷப் பண்ட் எடுக்கப் படுவார்.

    பஞ்சாப், டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு அணிகளிடம் ரிஷப் பண்ட்டை ஏலத்தில் எடுக்கும் அளவுக்கு தொகை இருக்கிறது.

    ஏலத்தில் போட்டி நிலவும் பட்சத்தில் ரூ.25 கோடியை தாண்டி இன்னும் 4-5 கோடிகள் அதிக தொகைக்கு ரிஷப் பண்ட் ஏலம் போவார். ரிஷப் பண்ட்டை எந்த அணி ஏலத்தில் எடுக்கிறதோ அந்த அணிக்காக அவர் 3 ஆண்டுகள் விளையாடுவார்.

    சென்னை சூப்பர் கிங்சிடம் அவரை ஏலத்தில் எடுக்கும் அளவுக்கு பட்ஜெட் இல்லை. ஆனால், அவர் கண்டிப்பாக பெங்களூரு அல்லது கொல்கத்தா அணியின் கேப்டனாக மாறப்போகிறார் என தெரிகிறது. கொல்கத்தா அணியின் கேப்டனாக ரிஷப்பண்ட் மாறும் பட்சத்தில் அந்த அணிக்கான ரசிகர்கள் எண்ணிக்கை பல மடங்காக உயரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த ஐ.பி.எல். போட்டியின் போது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா அணி எடுத்தது சாதனையாகும்.

    • ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் இன்று தொடங்கியது.
    • ரிஷப் பண்ட் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்- கவாஸ்கர் கோப்பை தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 150 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 41 ரன்களும், பண்ட் 37 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் நாள் முடிவில் 67 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது.

    முன்னதாக ரிஷப் பண்ட் இந்த இன்னிங்சில் அடித்த ரன்களையும் சேர்த்து டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை 661 ரன்கள் அடித்துள்ளார். இதன் மூலம் 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக ரன்கள் அடித்த வெளிநாட்டு விக்கெட் கீப்பர் என்ற மாபெரும் சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார்.

    • ஏலத்திற்கு முன்னதாக நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் டெல்லி அணியால் விடுவிக்கப்பட்டார்.
    • டெல்லி அணி அக்சர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அபிஷேக் போரல் ஆகியோரை மட்டும் தக்கவைத்தது.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் 14-ந் தேதி தொடங்குகிறது. இத்தொடருக்கு முன்னதாக அனைத்து ஐபிஎல் அணிகளும் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமானது நடைபெறவுள்ளது.

    அதன்படி இந்த ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலம் வருகிற நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சௌதி அரேபியாவின் ஜித்தா நகரில் நடைபெறும் என அண்மையில் அறிவிப்பு வெளியானது.

    இந்த ஏலத்திற்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் விடுவிக்கப்பட்டார்.

    கடந்த 2018-ம் ஆண்டு முதல் அந்த அணியின் மிக முக்கிய வீரராக இருந்து வந்த அவர் தற்சமயம் அந்த அணியில் இருந்து வெளியேறியுள்ளது

    ஏலத்திற்கு முன்னதாக அந்த அணி அக்சர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அபிஷேக் போரல் ஆகியோரை மட்டும் தக்கவைத்தது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

    போட்டியின் போது ரிஷப் பண்ட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவர் பக்கம் சென்ற ஆஸ்திரேலிய ஸ்பின்னர் நாதன் லயன் அவரிடம் இந்த ஏலத்தில் எந்த அணிக்கு செல்ல உள்ளீர்கள் என கேள்வி எழுப்பினார். உடனே ஐடியா இல்லை என சிரித்தப்படி பதிலளித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    • இந்தியா முதல் இன்னிங்சில் 150 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
    • அதிகபட்சமாக நிதிஷ் 41, பண்ட் 37 ரன்கள் எடுத்தனர்.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 150 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் 41, பண்ட் 37 ரன்கள் எடுத்தனர்.

    பண்ட் 37 ரன்கள் எடுத்ததன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 2000 ரன்களுக்கு மேல் எடுத்த 3-வது இந்திய வீரர் என்ற சாதனையை பண்ட் படைத்துள்ளார். ரோகித் சர்மா 2685 ரன்களுடன் முதல் இடத்திலும் விராட் கோலி 2432 ரன்களுடன் இரண்டவாது இடத்திலும் உள்ளனர்.

    • பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட்-ஐ டெல்லி அணி தக்கவைக்கவில்லை.
    • ஐபிஎல் ஏலத்தில் பெரிய தொகைக்கு ரிஷப் பண்ட் ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐபிஎல் 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு அணியும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    டெல்லி கேபிட்டல்ஸ் அணி 4 வீரர்களை தக்கவைத்துள்ளது. அக்சர் படேல் ரூ.16.5 கோடி, குல்தீப் யாதவ் ரூ.13.5 கோடி, தென்னாப்பிரிக்க வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ரூ.10 கோடி, அபிஷேக் போரெல் ரூ.4 கோடி கொடுத்து தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட்-ஐ டெல்லி அணி தக்கவைக்கவில்லை. இதனால் ஐபிஎல் ஏலத்தில் பெரிய தொகைக்கு ரிஷப் பண்ட் ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு பேட்டி அளித்த முன்னாள் இந்திய வீரர் கவாஸ்கர், "டெல்லி அணியின் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலில் ரிஷப் பண்ட் பெயர் இல்லாததற்கு பணம் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணி ரிஷப் பண்ட்-ஐ மீண்டும் வாங்கும்" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து அந்த வீடியோவின் கீழ் கமெண்ட் செய்த ரிஷப் பண்ட், "டெல்லி அணியில் நான் தக்கவைக்கப் படாததற்கு பணம் காரணம் அல்ல" என்று பதிவிட்டுள்ளார்.

    • மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணி ரூ.24.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
    • பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஏலம் போனார்.

    2024 ஐபிஎல் கிரிக்கெட் ஏலத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணி ரூ.24.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    இதற்கு அடுத்தபடியாக ஐபிஎல் ஏலத்தில் சக ஆஸ்திரேலிய வீரரான பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஏலம் போனார்.

    இந்நிலையில், வரும் ஐபிஎல் ஏலத்தில் ரிஷப் பண்ட் மிக அதிக தொகைக்கு ஏலத்தில் போவார் என்று முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

    "ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன மிட்செல் ஸ்டார்க்கின் சாதனை ஆபத்தில் உள்ளது. ரிஷப் பண்ட் அதை முறியடிக்கத் தயாராக உள்ளார்" என்று இர்பான் பதான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    டெல்லி அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ரிஷப் பண்ட்-ஐ ஏலத்தில் எடுக்க அனைத்து அணிகளும் போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×