என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சுப்மன் கில் விலகல்- இந்திய டெஸ்ட் அணியின் 38-வது கேப்டனாக பண்ட் நியமனம்
    X

    சுப்மன் கில் விலகல்- இந்திய டெஸ்ட் அணியின் 38-வது கேப்டனாக பண்ட் நியமனம்

    • தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
    • சுப்மன் கில் 2-வது டெஸ்டில் விளையாட மாட்டார்.

    கவுகாத்தி:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை அசாம் மாநிலம் கவுகாத்தியில் தொடங்குகிறது. இப்போட்டி நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

    முதல் டெஸ்டில் கழுத்து வலியால் பாதியில் வெளியேறிய இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் 2-வது டெஸ்டில் விளையாட மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணியின் 38-வது கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×