என் மலர்
கிரிக்கெட் (Cricket)

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: முன்னணி வீரர் திடீர் விலகல்
- ஒருநாள் போட்டி தொடர் இன்று தொடங்குகிறது.
- டி20 தொடர் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது.
அகமதாபாத்:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது.
முதலில் ஒருநாள் போட்டி தொடர் இன்று தொடங்குகிறது. டி20 தொடர் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது. நாக்பூர், ராய்ப்பூர், கவுகாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்தியாவின் முன்னணி வீரரான ரிஷப் பண்ட் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
வதோதராவில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் ஓடிஐ போட்டி இன்று தொடங்க உள்ளது. இதனால் இரு அணிகளின் வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்திய அணியின் ரிஷப் பண்டும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது இடுப்புக்கு மேல் பந்து தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவருக்கு முதலுதவி சிகிச்சை மைதானத்திலேயே அளிக்கப்பட்டது. முதலுதவி சிகிச்சைக்குப் பின், ரிஷப் பண்ட் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.






