என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ரிஷப் பண்ட் ஷாட் செலக்ஷன் குறித்த கேள்விக்கு யான்சென் அளித்த பதில்..!
    X

    ரிஷப் பண்ட் ஷாட் செலக்ஷன் குறித்த கேள்விக்கு யான்சென் அளித்த பதில்..!

    • முதல் இன்னிங்சில் யான்சென் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    • ரிஷப் பண்ட் 7 ரன்கள் எடுத்த நிலையில் யான்சென் பந்தில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 489 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 201 ரன்களில் சுருண்டது. தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் மார்கோ யான்சென் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    முக்கியமாக ஷார்ட் பந்து யுக்தி மூலம் இந்திய பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கினார். இந்திய அணி கேப்டன் ரிஷப் பண்ட் 7 ரன்கள் எடுத்த நிலையில் யான்சென் பந்தை இறங்கி வந்து அடிக்க முயற்சித்த போது எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார்.

    இந்த நிலையில், ரிஷப் பண்ட் ஷாட் செலக்ஷன் குறித்து ஆச்சரியப்படுகிறீர்களா? என்ற கேள்வி யான்செனிடம் கேட்கப்பட்டது.

    அதற்கு யான்சென் "எல்லாம் விசயங்களும் நாம் நினைத்த வழியில் செல்லாது. ரிஷப் பண்ட் பந்தை கேலரிக்கு பறக்க விட்டிருந்தால் அல்லது எனது தலைக்கு மேல் தூக்கி அடித்திருந்தால், இந்த உரையாடல் வேறுமாதிரி இருந்திருக்கும்.

    நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால், கொல்கத்தா போன்று ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில பிட்ச் ஆகி பேட்ஸ்மேனை நோக்கி வரவில்லை. இதனால் நாங்கள் வேறு திட்டத்தை தேட வேண்டியிருந்தது. துருவ் ஜுரலை பவுன்சர் மூலம் வெளியேற்றிய பிறகு, ஓ.கே. கூல், இது எவ்வளவு தூரம் செல்கிறது பார்ப்போம் என்று நாங்கள் சொன்னோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

    பேட்டிங் செய்வதற்கு சிறந்த ஆடுகளமாக உள்ளது. நல்ல வேகம், நல்ல பவுன்ஸ் உள்ளது. நீங்கள் ஷார்ட் பந்துகளை சிறப்பாக விளையாடினால், உங்களால் ரன்கள் குவிக்க இயலும். நீங்கள் சிறப்பாக பந்து வீசினால், உங்களால் விக்கெட் வீழ்த்த இயலும்" என்றார்.

    Next Story
    ×