என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டெஸ்ட்டில் அதிக சிக்சர்கள்: சேவாக் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்
- ரிஷப் பண்ட் 24 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- இதில் 2 பவுண்டரி 2 சிக்சர் அடங்கும்.
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 55 ஓவர்களில் 159 ரன்னில் சுருண்டது.
முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 37 ரன் எடுத்து இருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து ஆடிய வாஷிங்டன் சுந்தர் 29 ரன்னிலும் கேஎல் ராகுல் 39 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் கில் கழுத்து வலி காரணமாக பாதியிலேயே வெளியேறினார்.
இதனையடுத்து ரிஷப் பண்ட், ஜடேஜா ஜோடி சேர்ந்து விளையாடி வருகின்றனர். இதில் ரிஷப் பண்ட் தனது பாணியில் அதிரடியாக விளையாடினார். அவர் 24 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 2 பவுண்டரி 2 சிக்சர் அடங்கும்.
இரண்டு சிக்சர்கள் விளாசியதன் மூலம் முன்னாள் இந்திய வீரர் சேவாக்கின் (90) சாதனையை ரிஷ்ப பண்ட் (91) முறியடித்துள்ளார்.
இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள்:-
1. ரிஷப் பந்த் (91 சிக்சர்)
2. வீரேந்திர சேவாக் (90 சிக்சர்)
3. ரோஹித் சர்மா (88 சிக்சர்)
4. ரவீந்திர ஜடேஜா (80 சிக்சர்)
5. எம்.எஸ். தோனி (78 சிக்சர்)






