என் மலர்
நீங்கள் தேடியது "துருவ் ஜூரல்"
- சுப்மன் கில் ஆடுவது சந்தேகமாகியுள்ளதால் ஆல்-ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி சேர்க்கப்பட்டுள்ளார்.
- இடக்கை பேட்ஸ்மேனான சாய் சுதர்சன் வலது காலில் காலுறை இன்றி வலை பயிற்சியில் ஈடுபட்டார்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக வருகிற 22-ந்தேதி கவுகாத்தியில் தொடங்கும் 2-வது டெஸ்டில், கழுத்துவலியால் அவதிப்படும் இந்திய கேப்டன் சுப்மன் கில் ஆடுவது சந்தேகமாகியுள்ளதால் அதை கவனத்தில் கொண்டு அணியில் கூடுதலாக ஆல்-ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி சேர்க்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, 2-வது டெஸ்டுக்கு புறப்படுவதற்கு முன்பாக கொல்கத்தாவில் இந்திய வீரர்கள் நேற்று பயிற்சி மேற்கொண்டனர். இதில் சாய் சுதர்சன், துருவ் ஜூரெல் ஆகியோர் ஒற்றைக்காலில் மட்டும் காலுறை (பேடு) கட்டிக் கொண்டு சுழற்பந்து வீச்சு யுக்தியை திறம்பட சமாளிப்பதற்கான பயிற்சி எடுத்தனர். இது கொஞ்சம் ஆபத்தான பழங்கால பயிற்சி முறையாகும். பந்து நேராக காலில் தாக்கினால் எலும்பு முறிவு கூட ஏற்படலாம்.
இடக்கை பேட்ஸ்மேனான சாய் சுதர்சன் வலது காலில் காலுறை இன்றி வலை பயிற்சியில் ஈடுபட்டார். முன்னங்காலை எடுத்து வைத்து பந்தை தடுப்பதை காட்டிலும் பேட்டை அதிகமாக பயன்படுத்துவதற்கு இந்த பயிற்சி முறை வழிவகுக்கும். அத்துடன் கிரீசுக்கு வெளியே வந்து சுழற்பந்தை அடித்து ஆடுவதற்கும் ஊக்குவிக்கும். அவர்களின் வித்தியாசமான பயிற்சியை கம்பீர் உன்னிப்பாக கவனித்தார்.
- இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் துணை கேப்டனாக இருப்பதால் ரிஷப் பண்ட் விளையாடுவார்.
தென் ஆப்பிரிக்கா அணி 3 வடிவ கிரிக்கெட் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.
இதன் முதல் போட்டி வருகிற 14-ந் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் துணை கேப்டனாக இருப்பதால் ரிஷப் பண்ட் கண்டிப்பாக ஆடுல் லெவனில் இருப்பார் என்பது உறுதி. அதேசமயம் மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்டரான துருவ் ஜூரல் ஆடும் லெவனில் இடம் பிடித்துள்ளார்.
அவர் நிதிஷ் ரெட்டிக்கு பதிலாக விளையாட உள்ளார் என்ற கூடுதல் தகவலும் தெரிய வந்துள்ளது.
- ராஜஸ்தான் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- சிஎஸ்கே அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்டர் தேவை என்பதால் சாம்சனை வாங்க அதிக அளவில் முயற்சி செய்து வருகின்றனர்.
புதுடெல்லி:
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது டிசம்பர் வாரம் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் பத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து விடுவிக்கப்போகும் வீரர்களின் பட்டியலையும், தக்க வைக்கப்போகும் வீரர்களின் பட்டியலையும் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் ஏற்கனவே கெடு விதித்திருந்தது.
இதன் காரணமாக தற்போது அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலையும், வெளியேற்ற விரும்பும் வீரர்களின் பட்டியலையும் தயார் செய்து வருகிறது. அதோடு அதற்கு முன்னதாக வீரர்கள் டிரேடிங் முறையிலும் அணிமாற்றம் செய்து கொள்ளலாம் என்பதனால் சில நட்சத்திர வீரர்கள் அதன் வாயிலாக அணிமாற்றம் செய்வார்கள் என்றும் பேசப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ராஜஸ்தான் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை அணியில் எம் எஸ் தோனிக்கு வயதாகி விட்டதால் அவர் 20 ஓவரும் கீப்பிங் செய்வார் என்பது சந்தேகம்தான். இதனால் கண்டிப்பாக சிஎஸ்கே அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்டர் தேவை என்பதால் சஞ்சு சாம்சனை டிரேட் முறையில் எடுக்க அதிக அளவில் முயற்சி செய்து வருகின்றனர்.
சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறினால் அந்த அணியின் கேப்டனாக யார் செயல்படுவார் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த சீசனில் சாம்சன் இல்லாத போட்டிகளில் ரியான் பராக் கேப்டனாக செயல்பட்டார். அதனால் அவர்தான் கேப்டன் என சில தகவல்கள் வந்த நிலையில் அவரையும் ராஜஸ்தான் அணி விடுவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் இவர்களுக்கு அடுத்தபடியாக ஜெய்ஸ்வால் மற்றும் ஜூரல் உள்ளனர். இவர்களில் ஒருவர் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக வருவதற்கு அதிகப்படியான வாய்ப்பு இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
- முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஏ அணி 532 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
- 3-ம் நாள் முடிவில் இந்தியா ஏ அணி 4 விக்கெட்டுகளை இழந்து 403 ரன்கள் குவித்தது.
ஆஸ்திரேலியா ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 16-ந் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஏ அணி 532 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதனையடுத்து இந்தியா ஏ அணி களமிறங்கியது. 3-ம் நாள் முடிவில் இந்தியா ஏ அணி 4 விக்கெட்டுகளை இழந்து 403 ரன்கள் குவித்தது. தேவ்தத் படிக்கல் 86 ரன்களுடனும் துருவ் ஜூரல் 113 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். முதல்தர கிரிக்கெட்டில் துருவ் ஜூரல் அடிக்கும் 2-வது சதம் இதுவாகும்.
- துலீக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் பெங்களூருவில் தொடங்கவுள்ளது.
- இதில் மேற்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளன.
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான துலீக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் பெங்களூருவில் தொடங்கவுள்ளது. இதில் மேற்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளன.
அதேவளை, வடக்கு மண்டலம், கிழக்கு மண்டலம், வடகிழக்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டல அணிகள் பிளே ஆப் போட்டிகளில் விளையாடவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மத்திய மண்டல அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் துருவ் ஜூரல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேற்கொண்டு சுழற்பந்து வீச்சாளார் குல்தீப் யாதவ், வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சஹார், கலீல் அகமது உள்ளிடோருக்கும் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர்.
மத்திய மண்டல அணி: துருவ் ஜூரல், ரஜத் படிதார், ஆர்யன் ஜூயல், டேனிஷ் மாலேவார், சஞ்சித் தேசாய், குல்தீப் யாதவ், ஆதித்யா தாக்கரே, தீபக் சாஹர், சரண்ஷ் ஜெயின், ஆயுஷ் பாண்டே, சுபம் ஷர்மா, யாஷ் ரத்தோர், ஹர்ஷ் துபே, மானவ் சூதர்.
கூடுதல் வீரர்கள்: மாதவ் கௌசிக், யாஷ் தாக்கூர், யுவராஜ் சவுத்ரி, மஹிபால் லோம்ரோர், குல்தீப் சென், மற்றும் உபேந்திர யாதவ்.
- இங்கிலாந்து அணி இந்த தொடரில் 2 வேகப்பந்து வீரர்களுடன் விளையாட உள்ளனர்.
- அணியில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் இடத்தில் சர்பராஸ் கான் இடம் பெற வாய்ப்பு உள்ளது.
ராஜ்கோட்:
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் கொண்ட தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 28 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது. இதற்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 106 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. 2 போட்டி முடிவில் 1-1 என்ற சமநிலை நிலவுகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை (15-ந்தேதி) தொடங்குகிறது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த டெஸ்டிலும் வென்று முன்னிலை பெறும் ஆர்வத்தில் உள்ளது. இந்தியாவின் அதிரடி இந்த போட்டியிலும் நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் 2 டெஸ்டில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி விலகினார். தற்போது தொடர் முழுவதும் ஆட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.எல். ராகுல் இந்த போட்டியிலும் ஆடவில்லை. காயம் காரணமாக அவர் 2-வது டெஸ்டில் விளையாடவில்லை. அதே நேரத்தில் கடந்த போட்டியில் ஆடாத ஜடேஜா அணிக்கு திரும்பி உள்ளார்.
சர்பராஸ் கான், விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் ஆகிய டெஸ்டில் அறிமுகமாகிறார்கள். அணியில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் இடத்தில் சர்பராஸ் கான் இடம் பெற வாய்ப்பு உள்ளது. விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் பேட்டிங் தொடர்ந்து மோசமாக இருப்பதால் ஜூரலுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஒருவேளை ரஜத் படிதார் சுழற்றிவிடப்பட்டால் தேவ்தத் படிக்கல் இடம் பெறுவார். அவரும் இதுவரை டெஸ்டில் விளையாடவில்லை.
ஜடேஜா அணிக்கு திரும்பியதால் குல்தீப் யாதவ் அல்லது அக்ஷர் படேல் நீக்கப்படலாம். முகமது சிராஜ் முழு உடல் தகுதியுடன் இருந்தால் முகேஷ் குமார் இடம் பெறமாட்டார்.
கடந்த டெஸ்டில் ஜெய்ஷ்வாலின் இரட்டை சதமும், சுப்மன்கில்லின் சதமும், 9 விக்கெட் வீழ்த்திய பும்ராவின் அபார பந்துவீச்சும் வெற்றிக்கு காரணமாக இருந்தது.
இங்கிலாந்து அணி இந்த தொடரில் முதல் முறையாக 2 வேகப்பந்து வீரர்களுடன் விளையாட உள்ளனர். ஆண்டர்சனும், மார்க்வுட்டும் இங்கிலாந்தின் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ளனர்.
அந்த அணியின் பேட்டிங்கில் ஆலி போப், கிராவ்லி, பென்ஸ்டோக்ஸ் ஆகியோரும் பந்துவீச்சில் ஹார்ட்லே, ரேகான் அகமது, ஆண்டர் சன் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். 2-வது டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்க்கும் வேட்கையில் இங்கிலாந்து அணி இருக்கிறது.
நாளைய போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. 'ஸ்போர்ட்ஸ் 18' சேனலில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
- இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.
- இந்திய அணியில் இரண்டு வீரர்கள் புதிதாக அறிமுகம்.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.
அந்த வரிசையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜூரல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி உள்ளனர்.
- வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்-க்கு முதல் ஸ்பெல் அற்புதமாக அமைந்தது.
- போட்டியும் தொடரும் எங்களுடையது என்பதில் மிகவும் மகிழ்ச்சி என சச்சின் கூறினார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துருவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
இந்நிலையில் இளம் வீரர்களை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்திய அணி மீண்டும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து போராடி வெற்றி பெற்றது. இது நமது வீரர்களின் குணத்தையும் மன வலிமையையும் காட்டுகிறது. வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்-க்கு முதல் ஸ்பெல் அற்புதமாக அமைந்தது.
துருவ், இரு இன்னிங்சிலும் பந்தின் லென்த்தை கணித்து விளையாடினார். மேலும் அவரது புட்வொர்க் துல்லியமாக இருந்தது. அவருடன் குல்தீப் யாதவின் பார்ட்னர்ஷிப் முதல் இன்னிங்சில் ஆட்டத்தை நமது கையில் வைத்திருந்தது. 2-வது இன்னிங்சில் வெற்றி பெற முக்கிய பங்காற்றியது. 2-வது இன்னிங்சில் குல்தீப்பின் பந்து வீச்சு முக்கியமானது.
சுப்மன் கில் சேசிங்கில் தனது உள்ளுணர்வைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த குணத்தை வெளிப்படுத்தி முக்கியமான அரை சதம் எடுத்தார். மேலும் சீனியர் வீரர்களான அஸ்வின், ஜடேஜா, ரோகித் ஆகியோர் தங்களது வேலைகளை சரியாக செய்தனர்.
போட்டியும் தொடரும் எங்களுடையது என்பதில் மிகவும் மகிழ்ச்சி.
இவ்வாறு சச்சின் கூறினார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7-ந் தேதி தொடங்குகிறது.
- முதல் டி20 போட்டியில் துருவ் ஜுரேல் விக்கெட்டை லூக் ஜோங்வே கூறினார்.
- துருவ் விக்கெட்டை வீழ்த்தியவுடன், லூக் ஜோங்வே தனது ஷூவை கழற்றி, அவர் காதில் வைத்து போன் பேசுவது போல அந்த விக்கெட் வீழ்ச்சியை கொண்டாடினார்.
ஹராரே:
இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது.
முன்னதாக முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சாளர் லூக் ஜோங்வே 10 வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் துருவ் ஜுரேல் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். துருவ் 14 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். துருவ் விக்கெட்டை வீழ்த்தியவுடன், லூக் ஜோங்வே தனது ஷூவை கழற்றி, அவர் காதில் வைத்து போன் பேசுவது போல அந்த விக்கெட் வீழ்ச்சியை கொண்டாடினார். இந்திய வீரர் ஒருவரை ஆட்டமிழக்க செய்தவுடன் அவர் ஷூவை அவிழ்த்தது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் நான் யாரையும் அவமானப்படுத்துவதற்காக அப்படி கொண்டாடவில்லை என்று லூக் ஜாங்வே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-
முதல் போட்டிக்கு முன் தனது காதலியுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததாகவும், அப்போது விக்கெட் வீழ்த்தினால் அதை எப்படி கொண்டாட வேண்டும் என இருவரும் விவாதித்ததாகவும், அப்போது அவரது காதலி விக்கெட்டை வீழ்த்தினால் ஷூவை அவிழ்த்து காதில் வைத்து போன் பேசுமாறு தெரிவித்தார்.
என லூக் ஜாங்வே கூறினார்.
- 5 போட்டிகளில் துருவ் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.
- 5-வது போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக துருவ் ஜூரல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார்.
மும்பை:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 4 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
முன்னதாக ஒவ்வொரு தொடரிலும் பீல்டிங் துறையில் சிறந்து விளங்கும் இந்திய வீரருக்கு பி.சி.சி.ஐ. சார்பில் 'இம்பேக்ட் பீல்டர்' விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
அந்த வகையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் சிறந்த பீல்டருக்கான விருதை துருவ் ஜுரெல் தட்டிச்சென்றார். அவருக்கு இந்த விருதை இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் வழங்கி கவுரவித்தார்.
5 போட்டிகளில் துருவ் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். 5-வது போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக துருவ் ஜூரல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.






