என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ரிஷப் பண்ட் இருந்தும் முதல் டெஸ்ட்டில் இடம் பிடித்த துருவ் ஜூரல்
    X

    ரிஷப் பண்ட் இருந்தும் முதல் டெஸ்ட்டில் இடம் பிடித்த துருவ் ஜூரல்

    • இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது.
    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் துணை கேப்டனாக இருப்பதால் ரிஷப் பண்ட் விளையாடுவார்.

    தென் ஆப்பிரிக்கா அணி 3 வடிவ கிரிக்கெட் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.

    இதன் முதல் போட்டி வருகிற 14-ந் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் துணை கேப்டனாக இருப்பதால் ரிஷப் பண்ட் கண்டிப்பாக ஆடுல் லெவனில் இருப்பார் என்பது உறுதி. அதேசமயம் மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்டரான துருவ் ஜூரல் ஆடும் லெவனில் இடம் பிடித்துள்ளார்.

    அவர் நிதிஷ் ரெட்டிக்கு பதிலாக விளையாட உள்ளார் என்ற கூடுதல் தகவலும் தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×