என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷோயப் பஷீர்"

    • 3-வது டெஸ்டில் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

    லண்டன்:

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.

    இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ம் தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் தலா 387 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆகின. பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 62.1 ஓவர்களில் 192 ரன்னில் சுருண்டது.

    இதன் மூலம் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 74.5 ஓவர்களில் 170 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி 23-ம் தேதி மான்செஸ்டரில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்து முன்னணி வீரரான ஷோயப் பஷீர் விலகி உள்ளார்.

    லார்ட்ஸ் டெஸ்டின் போது பஷீரின் இடது கைவிரலில் எழும்பு முறிவு ஏற்பட்டதால் அவர் அதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    • முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தி வெற்றி பெற்றது.
    • 2-வது டெஸ்ட்டில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

    ராஜ்கோட்:

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் கொண்ட தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 28 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது. இதற்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 106 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. 2 போட்டி முடிவில் 1-1 என்ற சமநிலை நிலவுகிறது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை (15-ந்தேதி) தொடங்குகிறது.

    இந்நிலையில் அதற்கான 11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் ஷோயப் பஷீருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி:-

    ஜாக் க்ராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், பென் ஃபோக்ஸ், ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி, மார்க் வூட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

    • ஷோயப் பஷீர் தனது முதல் பந்திலேயே அபோட் பந்துவீச்சில் போல்டானார்.
    • பந்தை வீசும்போது அபோட் இடுப்பில் இருந்த துண்டு கீழே விழுந்தது.

    இங்கிலாந்தில் கவுண்டி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சோமர்செட் மற்றும் ஹாம்ப்ஷயர் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சோமர்செட் அணி 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 10 விக்கெட்டுக்கு களமிறங்கிய ஷோயப் பஷீர் தனது முதல் பந்திலேயே அபோட் பந்துவீச்சில் போல்டானார்.

    ஆனால் அந்த பந்தை வீசும்போது அபோட் இடுப்பில் இருந்த துண்டு கீழே விழுந்தது. இதை கவனித்த பஷீர் நடுவரிடம் தெரிவிக்க, அந்த பந்தை டெட் பாலாக நடுவர் அறிவித்தார்.

    பேட்ஸ்மேன் பந்தை சந்திக்கும் போது கவன சிதறல் ஏற்படும் வகையில் ஏதேனும் அசைவுகள், சத்தம் கேட்டால் அந்த பந்து டெட் பாடலாக அறிவிக்கப்படும்.

    அதனால் பஷீர் தனது விக்கெட்டை காப்பாற்றினார். ஆனால் பஷீர்க்கு நீண்ட நேரம் இந்த அதிர்ஷ்டம் நீடிக்கவில்லை. அபோட் பந்துவீச்சில் அடுத்த 2 பந்துகளிலேயே பஷீர் டக் அவுட் ஆனார்.

    இதன் விளைவாக, சோமர்செட் முதல் இன்னிங்ஸில் 136 ரன்களுக்குச் சுருண்டது.

    ×