search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "County Championship"

    • கடந்த சீசனில் இரண்டு போட்டிகளில் 116 ரன்கள் அடித்துள்ளார்.
    • ஒரு அரைசதம் அவரது ஸ்கோரில் அடங்கும்.

    இந்தியாவின் இடது கை பேட்ஸ்மேனும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான சாய் சுதர்சன் கடந்த சீசனில் கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பில் சர்ரே அணிக்காக விளையாடினார். இரண்டு போட்டிகளில் விளையாடி 116 ரன்கள் அடித்தார். அதில் ஒரு அரைசதம் ஆகும். இது அந்த அணி 22-வது முறை சாம்பியன் பட்டம் வெல்ல உதவியாக இருந்தது.

    இந்த நிலையில் மீண்டும் சர்ரே அணிக்காக இந்த சீசனில் சில போட்டிகளில் விளையாடுவார் என சர்ரே அணி தெரிவித்துள்ளது.

    சென்னையை சேர்ந்த சாய் சுதர்சன் ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார். 2024 சீசனில் 527 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிராக கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். 3 போட்டிகளில் 127 ரன்கள் சேர்த்தார். இதில் 2 அரைசதங்கள் அடங்கும். முதல் தர போட்டிகளில் 29 இன்னிங்சில் 1118 ரன்கள் அடித்துள்ளார்.

    • இங்கிலாந்தின் புகழ்பெற்ற கவுண்டி தொடரில் விளையாடுவதற்கு சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு தேடி வந்துள்ளது.
    • பொதுவாக சர்வதேச அளவில் விளையாடிய நட்சத்திர வீரர்கள் தான் கவுண்டி தொடரில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்படுவார்கள்.

    லண்டன்:

    தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் கடந்த சில வருடங்களாக டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வந்ததால் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாட தேர்வானார். கடந்த வருட ஐபிஎல் தொடரில் வெறும் 8 போட்டிகளில் 362 ரன்கள் குவித்தார். அதிலும் குறிப்பாக சென்னை அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 96 ரன்கள் விளாசினார்.

    இவ்வாறு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டதால் இலங்கையில் நடைபெற்ற 2023 வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வானார். அந்த தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

    அதைத்தொடர்ந்து தியோதார் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற தெற்கு மண்டல அணியின் வெற்றியிலும் சிறப்பாக விளையாடி முக்கிய பங்காற்றிய அவர் தற்சமயத்தில் நல்ல பார்மில் இருக்கிறார்.

    இந்நிலையில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற கவுண்டி தொடரில் விளையாடுவதற்கு சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு தேடி வந்துள்ளது. சர்ரே அணிக்காக விளையாட சாய் சுதர்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சர்ரே அணியில் விளையாடி வரும் முன்னணி வீரர்கள் சிலர் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆட உள்ளனர்.

    இதன் காரணமாக சர்ரே அணிக்காக நடைபெற்று வரும் கவுண்ட்டி தொடரின் எஞ்சிய 3 போட்டிகளில் விளையாடுவதற்கு சாய் சுதர்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுவாக சர்வதேச அளவில் விளையாடிய நட்சத்திர வீரர்கள் தான் கவுண்டி தொடரில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்படுவார்கள். ஆனால் இளம் வீரரான சாய் சுதர்சன் சர்ரே அணிக்காக தேர்வாகியுள்ள நிலையில் பல முன்னாள் வீரர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் காயம் காரணமாக இங்கிலாந்து கவுன்ட்டி போட்டியில் இருந்து விலகியுள்ளார். #Ashwin
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்ற 3-வது டெஸ்டின்போது இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினுக்கு காயம் ஏற்பட்டது.

    ஆனால் சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற 4-வது டெஸ்டில் விளையாடினார். அஸ்வின் காயம் முழுமையாக குணமடையாமலே விளையாடினார் என்று கூறப்படுகிறது. இதனால் அவரது காயத்தின் வீரியம் அதிகமானது. இதனால் கடைசி டெஸ்டில் அவர் இடம்பெறவில்லை.



    இதற்கிடையே கவுன்ட்டி கிரிக்கெட்டில் வொர்செஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடி முடிவு செய்திருந்தார். தற்போது காயத்தால் கவுன்ட்டி போட்டியில் இருந்து விலகியுள்ளார். கடந்த சீசனில் அஸ்வின் வொர்செஸ்டர்ஷைர் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    கவுன்ட்டி கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி இரட்டை சதம் அடித்தார். #MoeenAli
    இங்கிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி. இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் அடில் ரஷித் சிறப்பாக பந்து வீசியதால் இவருக்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் கவுன்ட்டி போட்டியில் விளையாடி வருகிறார். இவர் இடம்பிடித்துள்ள வொர்செஸ்டர்ஷைர் அணி யார்க்‌ஷைர் அணிக்கெதிராக விளையாடி வருகிறது.



    முதலில் பேட்டிங் செய்த யார்க்‌ஷைர் முதல் இன்னிங்சில் 216 ரன்னில் ஆல்அவுட் ஆனது. மொயீன் அலி இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். அதன்பின் வொர்செஸ்டர்ஷைர் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் மிட்செல் 178 ரன்கள் குவித்தார். 3-வது வீரராக களம் இறங்கிய மொயீன் அலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் இரட்டை சதம் அடித்ததோடு 277 பந்துகளை சந்தித்து 27 பவுண்டரி, 4 சிக்சருடன் 219 ரன்கள் குவித்தார்.
    ×