search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shoaib Bashir"

    • முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது.

    இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 'டாஸ்' வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக கிராலி 79 ரன்கள் அடித்து அவுட்டனார்.

    இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும், அஷ்வின் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 1 விக்கெட்டுக்கும் வீழ்த்தினர்.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் சதத்தாலும் ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரின் அரைசதத்தாலும் இந்திய அணி 477 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

    இங்கிலாந்து அணி தரப்பில் சோயிப் பஷீர் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் டாம் ஹார்ட்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இப்போட்டியில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்தார்.

    259 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் களமிறங்கியது. இந்திய அணியின் அபார பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 195 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    இந்திய அணி தரப்பில் அஷ்வின் 5 விக்கெட்டுகளும், பும்ரா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுக்களும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    இதன் மூலம், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

    இந்திய அணியில் அஸ்வினும், இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோவும், இந்த டெஸ்ட் போட்டியில் மூலம் தங்களது 100-வது டெஸ்டில் விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இன்றைய ஆட்டத்தில் இந்தியா 4 ரன்கள் சேர்ப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.
    • இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோயிப் பஷீர் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இங்கிலாந்து 218 ரன்னில் சுருண்டது.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் சதத்தாலும் ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரின் அரைசதத்தாலும் இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் சேர்த்திருந்தது.

    குல்தீப் யாதவ் 27 ரன்களுடனும், பும்ரா 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. குல்தீப் யாதவ் மேலும் 3 ரன்கள் அடித்து 30 ரன்னில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றினார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

    பும்ரா 20 ரன்னில் ஸ்டம்பிங் ஆக இந்தியா 477 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இன்று மேலும் 4 ரன்கள் எடுத்த நிலையில் 2 விக்கெட்டுகளை இழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் சோயிப் பஷீர் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் டாம் ஹார்ட்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    259 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.

    • முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தி வெற்றி பெற்றது.
    • 2-வது டெஸ்ட்டில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

    ராஜ்கோட்:

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் கொண்ட தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 28 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது. இதற்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 106 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. 2 போட்டி முடிவில் 1-1 என்ற சமநிலை நிலவுகிறது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை (15-ந்தேதி) தொடங்குகிறது.

    இந்நிலையில் அதற்கான 11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் ஷோயப் பஷீருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி:-

    ஜாக் க்ராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், பென் ஃபோக்ஸ், ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி, மார்க் வூட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

    • இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
    • பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த சோயப் பஷீர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

    இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாளை ஐதராபாத்தில் தொடங்குகிறது. இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இங்கிலாந்து அணி, அனுபம் வாய்ந்த ஜாக் லீச் மற்றும் சோயப் பஷீர், டாம் ஹார்ட்லி என இரண்டு அறிமுக சுழற்பந்து வீச்சாளர்களையும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடி இருக்கும் ரெஹான் அஹ்மத் ஆகியோரையும் தேர்வு செய்தது.

    இதில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த சோயப் பஷீர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அவர் இங்கிலாந்து நாட்டில் பிறந்து வளர்ந்தவர். 20 வயதான சோயப் பஷீர்-க்கு இந்திய விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    பாகிஸ்தான் நாட்டினர் மற்றும் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த பிற நாட்டினர் இந்தியாவிற்கு வர வேண்டும் என்றால் கடினமான விசா நடைமுறை உள்ளது. குறைந்தது ஏழு நாட்கள் கழித்தே அவர்களுக்கு விசா வழங்கப்படும்.

    இந்த நடைமுறையில்தான் இங்கிலாந்து அணி தவறு செய்து விட்டது. முதல் டெஸ்ட் போட்டிக்கு மூன்று நாட்கள் முன்னதாக இந்தியா வர இங்கிலாந்து திட்டமிட்டு இருந்தது. அதனால் விசாவுக்கு விண்ணப்பம் செய்வதிலும் அந்த அணி தாமதம் செய்து இருக்கிறது. அதில் தான் சோயப் பஷீர் சிக்கிக் கொண்டார்.

    இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் அவரை பயன்படுத்தலாம் என திட்டமிட்டு இருந்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விரக்தியில் உள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "நான் மனமுடைந்து போயிருக்கிறேன். அந்த இளம் வீரருக்கு இது விரக்தியான சூழ்நிலை" எனக் கூறி இருக்கிறார்.

    • இங்கிலாந்து அணியில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.
    • அதில் இரண்டு பேர் புதுமுக வீரரர்கள் ஆவார்கள்.

    இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்ஆப்பிரிக்காவில் உள்ளது. அந்த அணி தென்ஆப்பிரிக்காவுடன் மூன்று டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.

    இரு அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் ஆட்டம் இன்று நடக்கிறது. இந்திய அணியின் தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் ஜனவரி 7-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    அதன்பிறகு ஆப்கானிஸ்தான் அணி ஜனவரியில் இந்தியா வந்து மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. ஜனவரி 11 முதல் 17 வரை மொகாலி, இந்தூர், பெங்களூரில் போட்டிகள் நடக்கிறது. ஆப்கானிஸ்தான் தொடர் முடிந்த பிறகு இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு வந்து 5 டெஸ்டில் விளையாடுகிறது.

    இந்தியா- இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 25 முதல் 29 வரை ஐதராபாத்தில் நடக்கிறது. 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்திலும் (பிப். 2-6), 3-வது டெஸ்ட் ராஜ்கோட்டிலும் (பிப். 15-19), 4-வது டெஸ்ட் ராஞ்சியிலும் (பிப். 23-27), கடைசி டெஸ்ட் தர்மசாலாவிலும் (மார்ச் 7-11) நடக்கிறது.

    இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    4 சுழற்பந்து வீரர்கள் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளன. 3 புதுமுகங்கள் அணியில் இடம்பெற்று உள்ளனர். ஷோயப் பஷீர், டாம் ஹார்ட்லி, அட்கின்சன் ஆகிய அறிமுக வீரர்கள் தேர்வாகி இருக்கிறார்கள். ஷோயப் பஷீர், டாம் ஹார்ட்லி சுழற்பந்து வீச்சாளர்கள் ஆவார்கள். 20 வயதான சோயப் பஷீர் கடந்த ஜூன் மாதம் சோமர்செட் அணிக்காக முதல் தர போட்டியில் அறிமுகமாகி 10 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

    அட்கின்சன், ஹார்ட்லி ஆகியோர் இங்கிலாந்து அணிக்காக குறுகிய வடிவிலான போட்டிகளில் விளையாடி உள்ளனர். தற்போது டெஸ்ட் அணியில் நுழைந்துள்ளனர். முன்னணி வேகப்பந்து வீரரான கிறிஸ் வோக்ஸ் நீக்கப்பட்டு உள்ளார்.

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி வீரர்கள் வருமாறு:-

    பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரேஹான் அகமது, பேர்ஸ்டோவ், ஜோரூட், கிராவ்லி, ஆலிராபின்சன், பென் டக்கெட், ஜேம்ஸ் ஆண்டர்சன், அட்கின்சன், ஷோயப் பஷீர், ஹாரி புரூக், ஹார்ட்லி, ஜேக் லீச், பென் போக்ஸ், ஆலிபோப், மார்க்வுட்.

    ×